
சிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!
நெற்றிக் கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி
நீலியாக வந்து நின்றவளே!
பற்றிக் கொண்டவரின் துயரம் போக்கவே
சூலமேந்தி பகை வென்றவளே!
பகைவர் நடுங்கவே பதினெண் கரங்களில்
படைக்கலம் தாங்கி வந்தவளே!
உலகம் உய்யவே ஊழிக்காற்று போல்
உக்கிர வேகம் கொண்டவளே!
கொடிய அசுரரைக் குத்தி கிழித்து அவர்
உதிரம் உறிஞ்சியே களிப்பவளே!
பணியும் அடியவர் பாவந் தொலையவே
கனிந்த அன்பினை அளிப்பவளே!
அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!
உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!
வெள்ளம் போலப்பொங்கி பெருகும் கருணையினால்
விரைந்து ஓடிவந்து அருள்பவளே!
துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!!
--கவிநயா
சுப்பு தாத்தாவின் குரலில் - நன்றி தாத்தா!
நாளை துர்காஷ்டமி.
ReplyDeleteஅன்னையவள் அருள் அனைவருக்கும் கிடைக்க என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
//
ReplyDeleteசிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!
//
படமும் இந்த வரிகளும் அருமை.
வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி, தென்றல்!
ReplyDelete//படமும் இந்த வரிகளும் அருமை.//
ReplyDeleteஅவை மட்டும்தானா? :)
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ராதா :)
படம் மிக தத்ருபமாக இருக்கு எங்கே பிடித்தீர் கள் மிகஅருமை .//சித்ரம் .//
ReplyDeleteதுக்க ஹந்த்ரீ, ஸிம்ஹ வாஹிநி துர்கே! எல்லோர் துயரையும் போக்கி அருள்வாய்!
ReplyDelete//படம் மிக தத்ருபமாக இருக்கு எங்கே பிடித்தீர் கள் மிகஅருமை .//சித்ரம் .//
ReplyDeleteகூகுளாண்டவர் தந்ததுதான் :) வருகைக்கு நன்றி.
//துக்க ஹந்த்ரீ, ஸிம்ஹ வாஹிநி துர்கே! எல்லோர் துயரையும் போக்கி அருள்வாய்!//
ReplyDeleteவாருங்கள் கிருஷ்ணமூர்த்தி சார்! மிக்க நன்றி.