Tuesday, September 22, 2009

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே! அம்மா ஊஞ்சல் ஆடுகவே!

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
ஆதிபராசக்தி ஆடுகவே
அன்பரின் இதயத்தில் ஆடுகவே

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
ஆசையெனும் மலர் மெத்தையிட்டு
ஆடிட உன்னையே அழைத்து நின்றோம்
அம்மையே ஊஞ்சல் ஆடுகவே (ஆடுக)காசிபெருநகர்க்கதிபதியே
காஞ்சியிலே வளர் தவநிதியே
காஞ்சனமாலை திருமகளே
காசினி சிறக்கவே ஆடுகவே (ஆடுக)

நல்லதும் தீயதும் நீ ஆனாய்
இல்லதும் உள்ளதும் நீ ஆனாய்
நாதமும் கீதமும் நீ ஆனாய்
நானிலம் போற்றிட ஆடுகவே (ஆடுக)

47 comments:

 1. வார்த்தைகளெல்லாம் அழகா வந்து விழுந்திருக்கு குமரா :)

  //ஆடகப் பொன்//
  //காசிபெருநகர்க்கதிபதியே
  காஞ்சியிலே வளர் தவநிதியே
  காஞ்சனமாலை திருமகளே
  காசினி சிறக்கவே ஆடுகவே//

  இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

  நான் முன்ன எழுதிய ஊஞ்சல் பாட்டும் நினைவு வந்தது -

  http://ammanpaattu.blogspot.com/2009/06/blog-post.html

  ReplyDelete
 2. ஒரு வேளை உங்கள் பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது போல அக்கா. எழுதுன்னு நீங்க சொன்ன பின்னாடி என்ன எழுதுறதுன்னு சிந்திச்சப்ப இந்த முதல் வரி மனசுல ஓடிக்கிட்டு இருந்தது. சின்ன வயசுல படிச்ச ஏதோ பாட்டோட முதல் வரின்னு நினைச்சேன். :-)

  ReplyDelete
 3. ஊஞ்சல் பாட்டு எளிமையா அழகா இருக்கு கவிக்கா!

  ReplyDelete
 4. ஓ...குமரன் எழுதிய பாட்டா? கவிக்கா எஃபெக்ட் இருந்துச்சா? அதான்! சாரி குமரன் அண்ணா! :)

  ReplyDelete
 5. //ஆசையெனும் மலர் மெத்தையிட்டு//

  சூப்பர்! மலர் மெத்தை-ன்னாலே ஆசை தானே! குழந்தையின் பால் வைத்த ஆசையால் தோளில் போட்டு தட்டும் போது, தோளே மலர் மெத்தையை விட இன்பமாய் ஆகி, அந்தச் சுகத்தில் தூங்கி விடுகிறதே!

  நல்லதும் தீயதும் நீ ஆனாய்
  இல்லதும் உள்ளதும் நீ ஆனாய்
  நாதமும் கீதமும் நீ ஆனாய்
  நானிலம் போற்றிட ஆடுகவே

  ஆடுக ஆடுக ஆடுகவே!
  அடியவர் மனத்தில் ஆடுகவே!
  பாடுக பாடுக பாடுகவே!
  பாக்களை நாவில் பாடுகவே!

  நாடுக நாடுக நாடுகவே!
  நீ எனை என்றும் நாடுகவே!
  கூடுக கூடுக கூடுகவே!
  நவ ராத்திரியில் கூடுகவே!

  ReplyDelete
 6. மூன்றாம் பத்தியை படிக்கும் பொழுது சற்றே சந்தேகம் வந்தது.
  "Posted by Kumaran" அப்படின்னு பார்த்த உடனே சந்தேகம் தீர்ந்தது. :)
  கவிதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 7. ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என ஐயப்பன் மீது ஒரு பஜனைப் பாடல் பல காலமாகப் பாடி வருகிறேன். அதே வரிசையில் கவிநயா கொடுத்த முந்தையப் பாட்டுடன் சேர்ந்து, இப்பாடலும் மிக நன்றாக வந்திருக்கிறது. கருத்தும் அருமை குமரன்!

  "காசிபெருநகர்க்கதிபதியே" என்பதை "காசிபெருநகர்க் கதிபதியே" எனப் போட்டிருந்தால் சந்தம் பாட சரியாக வரும்.

  ReplyDelete
 8. காசிபெருநகர்க்கதிபதியே
  காஞ்சியிலே வளர் தவநிதியே
  காஞ்சனமாலை திருமகளே

  ஆஹா காசி விசாலாக்ஷியையும், காஞ்சி காமாக்ஷியையும், மதுரை மீனாக்ஷியையும் கண்ணெதிரே கொண்டு வந்து விட்டீர்கள். ஓ இது கவிக்குமரன் பாட்டா. நல்லாயிருக்கு

  ReplyDelete
 9. இப் பாடல் பழைய பாடல் நீல கடலின் ஒரத்தில்...நீலா என்ற காவியமாம் / . ../இ ந்த மெ ட்டில் பாடினால் ஆனந்தமாக இருந்தது .//திருவாசகம் 32 குழைத்தபத்து பாடல் லும் இந்த மெட்டு பொருந்தும் .///சித்ரம்

  ReplyDelete
 10. என்ன ஐயம் வந்தது? அது ஏன் எப்படி தீர்ந்தது? தெளிவா சொன்னாத் தானே தெரியும் இராதா. (திருமதி இராதா? :-) ) மூன்றாம் பத்தின்னா எது? காசின்னு தொடங்குறதா அதுக்கு அடுத்த பத்தியா?

  ReplyDelete
 11. பிரிக்காம போட்டாலும் பாடறப்ப நீங்க சொல்ற மாதிரியே பாடலாமே எஸ்.கே. ஐயா. நான் அப்படி தான் பாடிக்கிட்டு இருக்கேன்.

  பாடல் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

  ReplyDelete
 12. அக்காவே எழுதி எழுதி இந்தப் பாட்டும் அக்கா பாட்டுன்னு தோணுதா இல்லை அக்கா மாதிரியே எளிமையா எழுதியிருக்கேனான்னு தெரியலையே. தி.ரா.ச ஐயா நீங்க தான் சொல்லணும். :-)

  ReplyDelete
 13. நீங்க சொல்ற பாட்டை நான் கேட்டதில்லை சித்ரம். ஆனால் இரவிசங்கர்கிட்ட சொன்னா அழகா இந்தப் பாட்டை பாடிக் குடுப்பாரு.

  ReplyDelete
 14. //தெளிவா சொன்னாத் தானே தெரியும் இராதா. (திருமதி இராதா? :-) )//

  அதானே! தெளீவாச் சொல்லுங்க ராதாக்கா! எதுக்கு நம்ம வலைப்பூல போயி கூச்சம் எல்லாம் படறீங்க-க்கா? :))))

  ReplyDelete
 15. //குமரன் (Kumaran) said...
  நீங்க சொல்ற பாட்டை நான் கேட்டதில்லை சித்ரம். ஆனால் இரவிசங்கர்கிட்ட சொன்னா அழகா இந்தப் பாட்டை பாடிக் குடுப்பாரு.//

  தோடா...இது எப்போத்தில் இருந்து...? :)

  பாட்டெல்லாம் நமக்குப் பாடத் தெரியாது!
  பாடம் நடத்துவோம், Prey பண்ணுவோம்!
  ஓ முருகா Forgive him!
  Forgive him! Forgive him! :)

  ReplyDelete
 16. //(திருமதி இராதா? :-) )//
  :)))

  ReplyDelete
 17. //மூன்றாம் பத்தின்னா எது? காசின்னு தொடங்குறதா அதுக்கு அடுத்த பத்தியா?//
  என்ன தான் நீங்க கணினி துறையில் இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர். :)

  ரொம்ப எளிமையாக ஆரம்பித்து திடீரென அந்த எளிமை காணாமல் போனதால் கவிநயா அக்கா பாடல் மாதிரி இல்லையேன்னு ஒரு சந்தேகம் வந்தது. போதுமா? :)

  ReplyDelete
 18. எளிமையா இல்லையா? என்ன இராதா சொல்றீங்க? இந்தப் பாட்டு ரொம்ப எளிமைன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். எங்கே எளிமையா இல்லைன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 19. ஐயோ பாவம் ராதா. விட்டுடுங்க குமரா :) உங்க லெவலுக்கு (என்ன தமிழில்?) இது எளிமைதான்! :)

  ReplyDelete
 20. ஐய்யயோ குமரன் ! என்னை காலி பண்ணிடாதீங்க. சும்மா ஒரு பொய் சொன்னேன். :)

  ReplyDelete
 21. நீங்க பொய் சொன்னீங்கன்னு தெரிஞ்சு தானே கேக்குறேன். :-)

  ஒழுங்கா சொல்லுங்க. எந்த வார்த்தையைப் பார்த்து ஐயம் வந்தது? :-)

  ReplyDelete
 22. அடடா ! குமரன்கிட்ட மாட்டிகிட்டேனே !!
  கடல் சூழ்ந்த உலகில் என்னை காப்பார் இல்லையோ ?
  பரந்த வையத்தில் என்னை காப்பார் இல்லையோ ?
  அகண்ட அகிலத்தில் என்னை காப்பார் இல்லையோ ?
  ஜால ஜகத்தில் என்னை காப்பார் இல்லையோ ?
  கிரிதாரி ஓடி வா !! :)

  அருச்சுனன் எவ்வளவு சாக்கிரதையா இருந்தாலும், சிறந்த வில்லாளி என்பதை கைத்தழும்புகள் காட்டிக் கொடுத்ததாம்.

  Try this search on google:
  "காசினி site:ammanpaattu.blogspot.com".
  :)

  ReplyDelete
 23. ஹே ராதா! இதெல்லாம் த்ரீ மச்! சரி, நம்ம வில்லை கீழே போட்டுரலாம்னு தோணுது, அதுக்கு முன்னாடி கூகுளார் தேடலில் ஒரு bug இருக்குன்னு சொல்லிக்கிறேன் :) -

  http://ammanpaattu.blogspot.com/2009/02/blog-post_16.html

  ReplyDelete
 24. one more :)

  http://ammanpaattu.blogspot.com/2009/01/blog-post_22.html

  ReplyDelete
 25. //Radha said...
  அடடா ! குமரன்கிட்ட மாட்டிகிட்டேனே !!
  கடல் சூழ்ந்த உலகில் என்னை காப்பார் இல்லையோ ?//

  உம்ம்ம்

  //பரந்த வையத்தில் என்னை காப்பார் இல்லையோ ?
  அகண்ட அகிலத்தில் என்னை காப்பார் இல்லையோ ?//

  உம்ம்ம்

  //ஜால ஜகத்தில் என்னை காப்பார் இல்லையோ//

  உம்ம்ம் உம்ம்ம் உம்ம்ம்

  //கிரிதாரி ஓடி வா !! :)//

  இதோ வந்தேன் ராதா! யாமிருக்க பயம் ஏன்? :)

  குமரனாரே! நலமா? முடிந்தால் என்னோடு மோதுங்கள்! என் பக்தனை விட்டு விடுங்கள்! :))

  ReplyDelete
 26. கிரிதாரி! தேவரீரே வந்தீரா?! அடியேன் சரணம் சரணம் சரணம்!

  ReplyDelete
 27. //ஹே ராதா! இதெல்லாம் த்ரீ மச்! சரி, நம்ம வில்லை கீழே போட்டுரலாம்னு தோணுது, அதுக்கு முன்னாடி கூகுளார் தேடலில் ஒரு bug இருக்குன்னு சொல்லிக்கிறேன் :)//

  ஆகா!
  கவிநய அர்ச்சுனா! நீயா வில்லைக் கீழே போடுவது? பெகாவத் கீதை சொல்லட்டுமா?

  இதோ அஸ்திரம்! Try this search on google:
  காசினியைக் site:ammanpaattu.blogspot.com

  துணிந்து நில்! எழுந்து நில் கவிநயப் பார்த்தனே! :)

  ReplyDelete
 28. "காசினி" என்று கூகுள் குமரனைச் சொன்னால்...அது போகட்டும் கண்ணனுக்கே!
  "காசினியைக்" என்று கூகுள் கவிநயாவைச் சொன்னால்...அது போகட்டும் கண்ணனுக்கே!

  கண்ணனே தேடினான்!
  கண்ணனே கூகுளான்!
  கண்ணனே கொலைப் பின்னூட்டம் இடுகின்றான்!

  கவிநயா...
  உன் காண்டீபம் எழுக!
  உன் கவி வன்மை எழுக!
  இந்த அம்மன் பாட்டு வலைப்பூ சிறக்க......

  ReplyDelete
 29. ராதா என்னும் என் ப்ரிய "பக்தையே"! :))
  இதோ உனக்கு அபயம்!

  யதா யதா ஹி பதிவஸ்ய!
  க்ளானிர் பவதி பா-ராதா
  அப்யுத்தானம் குமர கும்மியஸ்ய
  ததாத் மானம் சங்கர அஹம்

  பரித்ரானாய ராதா னாம்
  வினாசாய ச ஜல்லீனாம்
  பக்த சம்ஸ்தாப னார்த்தாய
  சம்பவாமி பதிவே பதிவே!
  :))))))

  ReplyDelete
 30. கவிநயா அக்கா !
  என்னவோ தெரியலே, நீங்க ஏற்கனவே எழுதி இருக்கற பாடல்களில் "காசினி" என்பது ரொம்ப எளியப் பதம் போன்ற தோற்றம் அளிக்கிறது. :-)
  இந்தப் பாடலில் அது கொஞ்சம் அரியப் பதமாக தோன்றுகிறது.
  sorry kumaran...i realise that my view is very biased but i am unable to help it. :-)
  ~
  ராதா

  ReplyDelete
 31. காசினி மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா? நான் எதிர்பார்க்கிறதை இன்னும் சொல்ல மாட்டேங்கறீங்களே?

  ReplyDelete
 32. //கிரிதாரி! தேவரீரே வந்தீரா?! அடியேன் சரணம் சரணம் சரணம்! //
  :))))

  //
  கண்ணனே தேடினான்!
  கண்ணனே கூகுளான்!
  கண்ணனே கொலைப் பின்னூட்டம் இடுகின்றான்!
  //

  :)))

  துணையாக கண்ணபிரான் இருக்க ராதாவிற்கு என்றும் கவலை என்றும் இல்லை ! :)))

  ReplyDelete
 33. ஆடகப் பொன்? காஞ்சனமாலை திருமகள்?

  அநாதரட்சகா, நீ வந்தும் ஒண்ணும் பயனில்லாம போச்சே :))

  ReplyDelete
 34. நீங்க என்ன எதிர்பார்கறீங்கன்னு சொன்னா அது தானான்னு சொல்றேன். ;-)

  ReplyDelete
 35. //ராதா என்னும் என் ப்ரிய "பக்தையே"! :))//
  அடக் கடவுளே ! இதை நான் இன்னும் கவனிக்காமல் போனேன்.
  எல்லோரையும் குழப்பறதுன்னு கண்ணன் முடிவு பண்ணிட்டான்...
  அக்கா, என்னோட முழு பேர் ராதாமோகன். ஏமாந்து போகாதீங்க. :)

  ReplyDelete
 36. //அக்கா, என்னோட முழு பேர் ராதாமோகன். ஏமாந்து போகாதீங்க. :)//

  ராதா,
  மோகன்-ங்கிறது உங்க அப்பா பேரா? இல்லை...? :)))

  ReplyDelete
 37. கண்ணனுக்கு ராதா மேல தனி மோகம். அதான் அப்படி :)

  நான் தெளிவாதான் இருக்கேன் தம்பீ :)

  ReplyDelete
 38. //Radha said...
  நீங்க என்ன எதிர்பார்கறீங்கன்னு சொன்னா அது தானான்னு சொல்றேன். ;-)//

  சபாஷ்! ராதா, நீயே எமக்குப் ப்ரியமான பக்தன்! :)

  ReplyDelete
 39. //அநாதரட்சகா, நீ வந்தும் ஒண்ணும் பயனில்லாம போச்சே :))//

  கவிக்கா!
  குமரனுக்குப் பயனில்லாமப் போச்சே-ன்னு சொல்லுங்க! :)
  உங்களுக்கு எல்லாம் பயன் தான்! அதான் சொன்னேன்-ல்ல? பரித்ரானாய சாதுனாம் :)))

  ReplyDelete
 40. //அதுக்கு முன்னாடி கூகுளார் தேடலில் ஒரு bug இருக்குன்னு சொல்லிக்கிறேன் :)//

  யக்கா...
  கூகுளே என் சங்கு சக்கரம்! அதைக் குத்தம் சொல்லாதீங்க! :)
  காசினியை-ன்னு தேடினா உங்க பதிவைக் காட்டும்!
  காசினி-ன்னு தேடினா குமரன் பதிவைக் காட்டும்!

  கூகுள்...பிற மொழிகளில்...கொஞ்சம் முழுச் சொல் தேடு பொறி! :)

  ReplyDelete
 41. கடைசி பத்தியில ரெண்டாவது வரி.

  ReplyDelete
 42. "ஆடகப் பொன்", "காசிபெருநகர்க்கதிபதியே", "காஞ்சனமாலை திருமகளே", "காசினி சிறக்கவே" - இவைகள் தாம்.

  அம்பாளை, "அதிபதியே" என்று நான் முன்னர் பாடி உள்ளேன் என்று அக்கா சொன்னால், மறுபடியும் என்னுடைய திருஷ்டி கோளாறு தான் காரணம். :)

  ReplyDelete
 43. நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு :)

  'இல்லதும் உள்ளதும் நீ ஆனாய்' என்கிற வரிதான்னு குமரன் சொல்லிட்டாரே தம்பீ... பார்க்கலையா?

  ReplyDelete
 44. அக்கா ! அந்த வரியில் எல்லாம் ஒன்றும் இல்லை.
  அவர் சும்மா உடான்சு விட்டு பார்த்திருக்கார்.:-)

  நான் குமரன் ஸ்டைலை நன்றாக அறிந்துள்ளேன் போல.
  அவ்வளவு தான் விஷயம். :-)

  ReplyDelete
 45. அந்த வரியில் ஒன்றும் இல்லையா? உண்மை தானா இராதா?

  இல்லதும் உள்ளதும் நீ ஆனாய் - இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு; எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே.

  ஆசையெனும் மலர் மெத்தையிட்டு - கண்ணனுக்கே ஆமது காமம்.

  நல்லதும் தீயதும் நீ ஆனாய் - நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும் என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே.

  காசினியைக் கண்டு கொண்டவர் இவற்றை எல்லாம் விட்டுவிட்டீரே? :-)
  :-)

  ReplyDelete
 46. :-) நீங்க அந்த வரியை சுட்டி காண்பித்த பொழுது, நம்மாழ்வார் பாசுரம் தோன்றியது மட்டும் உண்மை. ஆனால் இப்பொழுது எல்லாம் தத்துவ ரீதியாக யோசிக்க பிரியம் இல்லை. பிறரை யோசிக்க வைக்கவும் பிரியம் இல்லை. :)

  ReplyDelete
 47. புரியுது இராதா. எனக்கு அந்த நிலை பல முறை வந்திருக்கு. இரவி இடுகையைப் போட்டுட்டு நான் வந்து நிறைய சொல்வேன்னு எதிர்பார்ப்பார். நான் ஒத்தை வரி பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன். அப்ப அவருக்கும் ஏமாத்தமா தான் இருந்திருக்கும். :-)

  ReplyDelete