Tuesday, August 31, 2010

நீ ஒன்றே ஆதாரம்!



அன்னை உன்னை எந்தன் நெஞ்சில்
ஏற்றி வைத்தேன் - பொங்கும்
அன்பி னாலே உன்னை தினம்
போற்றி வைத்தேன்

நீ ஒன்றே ஆதாரம்
கண்டு கொண்டேன் - உன்
நினைவை எந்தன் ஆகாரம்
ஆக்கிக் கொண்டேன்

முழுமதி போல் முகத் தழகி
வர வேணும் - வந்து
இருள் நீக்கி ஒளி யமுதம்
தர வேணும்

கா தணிகள் அசைந் தாட
வர வேணும் - வந்துன்
கடைக் கண்ணின் பார்வை கொஞ்சம்
தர வேணும்

வளை குலுங்க வஞ்சி இங்கு
வர வேணும் - வந்து
வளைக்கும் வினை களைந்து அருள்
தர வேணும்

காற் சதங்கை கிணு கிணுக்க
வர வேணும் - கண்ணில்
நீர் பெருக நிறைந்த அன்பு
தர வேணும்


--கவிநயா

4 comments:

  1. நன்றாக இருக்கிறது.
    அழகாக இருக்கிறது.
    எளிதாகவும் இருக்கிறது.
    யதுகுல காம்போஜி ராகத்தில் பாட முயற்சித்திருக்கிறேன்.
    சுமாரா இருக்கும் என நினைக்கிறேன். கேளுங்கள்.

    ஒரு விசயம். தாத்தாவுக்கு இருக்கிற 14 பல்லிலே இன்னும் ஏழை எடுத்தாச்சு.
    மத்ததுக்கு ரூட் கனால். ஏற்கனவே வார்த்தை தடுமாற்றம். இப்ப சுத்தம்.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. //தாத்தாவுக்கு இருக்கிற 14 பல்லிலே இன்னும் ஏழை எடுத்தாச்சு.//

    அப்படி ஒண்ணும் வித்தியாசம் தெரியலை தாத்தா :) பாடல் நன்றாக வந்திருக்கு. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. //நீ ஒன்றே ஆதாரம்
    கண்டு கொண்டேன் - உன்
    நினைவை எந்தன் ஆகாரம்
    ஆக்கிக் கொண்டேன்//

    வாவ்...... மிக மிக அருமை...

    அனைவரின் வாழ்வுக்கும் ஆதாரமாய் விளங்குபவளை உங்கள் நினைவின் ஆகாரமாய் ஆக்கிய விந்தைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்...

    //காற் சதங்கை கிணு கிணுக்க
    வர வேணும் - கண்ணில்
    நீர் பெருக நிறைந்த அன்பு
    தர வேணும்//

    முழுமையான அர்ப்பணிப்பு இங்கு தெரிகிறது...

    ReplyDelete
  4. அட, வாங்க கோபி. உங்களை இந்தப் பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete