Monday, January 31, 2011

பாதி மதி முடி சூடும் இறைவி

மு.கு. : முன்பு ஒரு முறை வாணி ஜெயராம் அவர்கள் ஒரு படத்திற்காக பாடியிருந்த, "பாதி மதி நதி போது மணி சடை" என்று தொடங்கும் திருப்புகழை, நம்ம கண்ணன் முருகனருளில் இட்டிருந்தார். அதைக் கேட்ட போது அதே போல் நம்ம அம்மாவுக்காக எழுதணும்னு ஒரு (அற்ப) ஆசை ஏற்பட்டதன் விளைவு... :)


பாதி மதிமுடி சூடும் இறைவியை
பாடி அனுதினம் பணிவோமே
தேடி அவள்பதம் நாடி தினம்தினம்
கோடி மலர்கொடு தொழுவோமே

சூழும் சுரர்முடி பாதம் தொடஅதில்
காலின் நகங்களும் ஒளிவீச
கூறும் அடியவர் சூடி மகிழ்ந்திட
பாத நறுமலர் அருள்வாயே

சாடும் வினைகெட நாடி தொழுபவர்க்
கோடி உதவிடும் துணைநீயே
வாடும் மனதினில் வாச மலரென
வந்து மலர்ந்திடும் என்தாயே

வேலன் வணங்கிட வேலை அருளிய
வேத முதல்வியைப் பணிவோமே
காலன் கடுகினும் காவல் வருமவள்
கால்க ளேசதம் அறிவோமே


--கவிநயா

சுப்பு தாத்தா காவடி சிந்து மெட்டில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!

20 comments:

  1. kavinayaa,
    by chance,[coincidence]naanum inru oru paattu post panniyirukken.melum, munne sila paattu[idaivelai]nee
    padikkalai enru thonrathu.time kidaikkarachche paaru.
    un'iraivi'paattai veru mettil manathukkul[urakkappaadinaal neighbours'etho sandai'enru thiraimaraivaa draama pakka aarambippa.en kural avlo inimai!]
    paadippaarththen;lathamangeshkar
    [thulasidhas's ramacharitha maanas
    enra kaaviyaththilirunthu] "sriraama
    chandra kripaalu bhaja mana haranu bhava baya dharunam" enru paadiya paattin mettukku un paattu perfectaa fit aayiduththu!surisirkku therinjirukkum;unakkum therinjaa paadippaaru.paattu romba nannaairukku;keekkanumpola aasaiyaavum irukku;awaiting .....

    ReplyDelete
  2. வாங்க லலிதாம்மா! உங்களோட இன்றைய பாடலை படிச்சேன், சுப்பு தாத்தா மெட்டமைத்திருப்பதையும் கேட்டேன் :) மிகவும் அருமை. இடைவேளை கவிதைகள் இனிமேதான் படிக்கணும்.

    சுப்பு தாத்தா பாடிய இந்த பாடலுக்கு இடுகையில் சுட்டி கொடுத்திருக்கேன், நேரம் கிடைக்கையில் பாருங்க. நீங்க சொன்ன மெட்டிலும் பாடி அனுப்பி இருந்தார், அருமையாக இருந்தது. ஆனா அதை எப்படி இங்கே இடறதுன்னு தெரியலை. அவரைக் கேட்டிருக்கேன்.

    வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  3. நன்றி கோபி!

    எனக்கே பிடிச்ச பாட்டு இது :)

    ReplyDelete
  4. இந்த சுரர் சுடர் முடி பாதம் தொட அதில் காலின் நகங்கள் ஒளி வீசும் செய்தியை எங்கோ படிச்ச மாதிரி இருக்கு அக்கா. தொழுபவர்க்கு ஓடி, தொழுபவர்க் கோடி என்று சிலேடையும் அமைந்திருக்கு.

    பாடிப் பார்த்தேன். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எனக்கும் பிடிச்சிருக்கு. :-)

    ReplyDelete
  5. Hello.. akka..
    well done. I tried to sing it in Kavadichindhu... Very pretty..
    I love it akka.. :) :)

    ReplyDelete
  6. //இந்த சுரர் சுடர் முடி பாதம் தொட அதில் காலின் நகங்கள் ஒளி வீசும் செய்தியை எங்கோ படிச்ச மாதிரி இருக்கு அக்கா.//

    ஹாஹா :) இதுக்குத்தான் உங்களை எதிர்பார்த்தேன் குமரா. எனக்கும் கருத்து மட்டுமே நல்லா நினைவிருக்கு, ஆனா எங்கேன்னு தெரியல. சௌந்தர்யலஹரின்னு நினைக்கிறேன்.

    //தொழுபவர்க்கு ஓடி, தொழுபவர்க் கோடி என்று சிலேடையும் அமைந்திருக்கு.//

    நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன்.

    //பாடிப் பார்த்தேன். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எனக்கும் பிடிச்சிருக்கு. :-)//

    ரொம்ப சந்தோஷமும் நன்றியும்! பாடி அனுப்புங்களேன்... ரொம்ப நாளாச்சு நீங்க பாடிக் கேட்டு...

    ReplyDelete
  7. //Hello.. akka..
    well done. I tried to sing it in Kavadichindhu... Very pretty..
    I love it akka.. :) :)//

    மிக்க மகிழ்ச்சி சங்கர்! :) நீங்களும் அவசியம் பாடி அனுப்பணும்! ப்ளீஸ்...

    ReplyDelete
  8. That glittering nail matter comes in Lalitha sahasranam akka.

    Karanguli nakhothpanna narayana dasakrithi: She who created the ten avatharas of Narayana from the tip of her nails

    Nakadhi dhithi samchanna namajjana thamoguna: She who removes the darkness in the mind of her devotees by the sparkle of nails.

    :) would for sure send it akka. :)

    ReplyDelete
  9. in soundharyalehari 83 and 89 '
    devi's nails have been described ,as you had guessed.if
    you want more details,i can get the same posted tomorrow[being thai velli] in my blog[with paramachaaryaa's commentary if i can locate the relevant book].pl respond as early as possible.

    ReplyDelete
  10. வாங்க சங்கர். லலிதாம்மா சொன்னது போல, இந்திராதி தேவர்கள் எல்லாரும் அவளைப் பணிவதால், அவர்களின் கிரீடங்களின் ஒளிபட்டு அவளுடைய கால் நகங்கள் பிரகாசிக்கின்றன, (கிட்டத்தட்டதான் சொல்றேன்), அப்படின்னு சௌந்தர்யலஹரியில் வரும். நீங்க சொல்லியிருப்பது அழகு, ஆனா பொருள் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. (எனக்கு சமஸ்கிருதம் தெரியாது... முன்ன தமிழில் பொருள் படிச்ச நினைவிலிருந்து எழுதினேன்..)

    நீங்க பாடியதை கேட்க, வெயிட்டிங்... :)

    ReplyDelete
  11. வாங்க லலிதாம்மா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். வேலை வேலையும் மற்ற வேலையும் கொஞ்சம் அதிகமாயிடுச்சு... அதனால உடனே எழுத முடியல.

    முடிஞ்சா சௌந்தர்யலஹரி பற்றியும், பெரியவா சொன்னதையும் அவசியம் எழுதுங்க. ஆவலோட காத்திருக்கேன்...

    முன்பு மௌலி என்கிற தம்பி சௌந்தர்யலஹரி முழுவதற்கும் இங்கே பொருள் எழுதினார்... நேரம் கிடைக்கிறப்ப பாருங்க... அதை வாசிச்சப்பத்தான் இதைப் போல சில விஷயங்கள் மனசில் பதிஞ்சது.

    ReplyDelete
  12. instead of presenting the'nail' verses[83'89],i'll post a drama as narrated by periyava in ra.ganapathy's theivaththin kural
    [in brief].pl read and tell as many people as possible.

    ReplyDelete
  13. ஆகட்டும் அம்மா. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  14. அருமை

    இரசித்தேன்

    ReplyDelete
  15. i went through last few[sountharya
    lehari]verses explained by mauli ;he has done a great job.as and when i get sufficient time,i intend to go through his entire work.periyavaa [in r ganapathi's
    theivaththin kural-part6]has devoted 744 pages for soundhryalahari explaining many of the verses in extremely simple words in his own sweet style which
    is very interesting and at the same time down to earth in my opinion!

    ReplyDelete
  16. //அருமை

    இரசித்தேன்//

    மிக்க நன்றி திகழ்.

    ReplyDelete
  17. சௌந்தர்யலஹரி பதிவுக்கு சென்று வாசித்தமைக்கு மிக்க நன்றி லலிதாம்மா. ரா.கணபதி அவர்களின் புத்தகம் படித்ததில்லை. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் அம்மா. நன்றி.

    ReplyDelete
  18. do you know the background story of sountharya lahari[who is the original author and how it was brought to the world by sankara]?
    if not,pl let me know,so that it will become my subject for the next thaivelli.

    ReplyDelete
  19. //do you know the background story of sountharya lahari[who is the original author and how it was brought to the world by sankara]?
    if not,pl let me know,so that it will become my subject for the next thaivelli.//

    படிச்சிருக்கேன் அம்மா. ஆனாலும் நீங்களும் உங்கள் வார்த்தைகளில் சொல்லுங்களேன். இதெல்லாம் எத்தனை முறை படிச்சாலும் போதாதே? நன்றி அம்மா.

    ReplyDelete