Monday, September 19, 2011

திரு அங்க மாலை - 1

திருநாவுக்கரசர் அப்பனுக்கு திரு அங்க மாலை பாடினார். அதை படிச்ச போது அம்மாவுக்கு பாடணும்னு எனக்கு ஆசை வந்தது. புலியைப் பார்த்து... அந்தக் கதைதான் இது. இருந்தாலும், அருள் கூர்ந்து பொறுமையுடன் வாசிக்கும்படி வேண்டுகிறேன்.


தலையே நீ வணங்காய்
திருமுடியில் எழில் பிறைமதி சூடிய
கருவிழியில் அருட் கடலினை ஏந்திய
தரணியெல்லாம் காக்கும்
தாயவள் திருப்பாதம்
தலையே நீ வணங்காய் (1)

கண்ணே நீ காணாய்
கருமையில் ஒளிர்பவள் கருணையில் அருள்பவள்
மறுமையை அறுப்பவள் மலரெனச் சிரிப்பவள்
கண்ணெனநமைக் காக்கும்
கண்மணியவள் வடிவம்
கண்ணே நீ காணாய் (2)

செவியே நீ கேளாய்
செய்யக் கலையுடுத்தி செங்கமலம்போ லொளிரும்
பையப் பணிந்தவர்க்கு பரிவுடனே அருளும்
சிந்தையெல்லாம் நிறைந்த
செய்யவள் திருப்புகழை
செவியே நீ கேளாய் (3)

மூக்கே நீ முரலாய்
முந்தைவினை யனைத்தும் முந்திவந்து விரட்டும்
பிள்ளைப்பிழை யனைத்தும் பேரருளால் பொறுக்கும்
முதலுக்கு முதலான
முக்கண்ணி யைப்போற்றி
மூக்கே நீ முரலாய் (4)

நாவே நீ கூறாய்
நஞ்சமு தாக்கிய வஞ்சியவள் புகழை
அஞ்சலென அன்பால் அரவணைக்கும் அழகை
நெஞ்சந்தனில் குடியேறி
நிலைத்தவள் திருநாமம்
நாவே நீ கூறாய் (5)


--கவிநயா

(இன்னும் இருக்கு. அது அடுத்த வாரம்...)

12 comments:

  1. ஐங்கணைக் கரத்தாளை ஐம்புலன்களால் உணர்ந்து துதிக்குமாறு உள்ள இந்தப்

    பாடல் மெதுவாக ரசித்து அனுபவித்துப் பாடவேண்டிய ஒரு பாடல்;



    ஐந்தாவது பதத்தில் 'அஞ்சல்' என்றிருப்பது 'அஞ்சேல்'என்றிருக்கணுமோ?

    ReplyDelete
  2. //பாடல் மெதுவாக ரசித்து அனுபவித்துப் பாடவேண்டிய ஒரு பாடல்;//

    நன்றி அம்மா. அதான் எல்லாவற்றையும் ஒரேயடியா இட வேண்டாம்னு நினைச்சேன்.

    //ஐந்தாவது பதத்தில் 'அஞ்சல்' என்றிருப்பது 'அஞ்சேல்'என்றிருக்கணுமோ?//

    சரியே. திருத்திட்டேன். மிக்க நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  3. அஞ்சல் என்று கூட வரலாம். மாயூரம் கோவில் நாயகி அஞ்சல் நாயகி.

    மொத்தத்தில் தமிழும் பக்தியும் போட்டி போட்டுக் கொஞ்சுது!!!

    திவாகர்

    ReplyDelete
  4. //அஞ்சல் என்று கூட வரலாம். மாயூரம் கோவில் நாயகி அஞ்சல் நாயகி.//

    நன்றி திவாகர் ஜி. கொஞ்சம் குழப்பம், இப்ப மறுபடி ஓகே.

    //மொத்தத்தில் தமிழும் பக்தியும் போட்டி போட்டுக் கொஞ்சுது!!!//

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ....பூ நாளும் தலை சுமப்ப
    புகழ் நாமம் செவி கேட்க
    நா நாளும் நவின்தேறற
    பெறலாமே நல்வினையே

    என்கிற தேவாரப் பாடல் நினைவுக்கு வந்தது.

    நல்ல பாடலுக்கு நன்றி.

    புலியும் பூனையும் அன்னைக்கு ஒண்ணுதான் :))

    ReplyDelete
  6. //நல்ல பாடலுக்கு நன்றி.//

    நன்றி கபீரன்பன் ஜி :) அடுத்த பகுதியும் வாசிச்சு பாருங்க...

    //புலியும் பூனையும் அன்னைக்கு ஒண்ணுதான் :))//

    :) இதுக்கும் சேர்த்து நன்றி :)

    ReplyDelete
  7. கவிநயா,

    இப்போ நடந்த விஷயத்தைச்சொல்லாட்டா என் மண்டையே வெடிச்சுடும்! அதனால் உடனே எழுதறேன்;



    வெள்ளிக்கிழமை மாலை வழக்கமா மகிஷாசுரமர்த்தினிச்லோகம் சொல்வேன்[மனப்பாடம்] அதிக நேரம் கிடைத்தால் அபிராமி அந்தாதி படிப்பேன்[மனப்பாடமில்லை] இன்று நேரம் அதிகமிருக்கவே அ.அ படிக்க ஆரம்பித்தேன்;33 வது படிக்கும்போது "அழைக்கும்பொழுது வந்து அஞ்சல்

    என்பாய்"என்ற இடத்தில் வழக்கமாச்சொல்வதுபோல் அஞ்சேல் என்று படித்தேன்;ஆனால் ஏனோ மறுபடி உற்றுப்படித்தேன்;பார்த்தால் "அஞ்சல்''

    தான்;அஞ்சேல் இல்லை;அப்பத்தான் வழக்கமா தப்பாவே படிச்சிண்டிருந்த என்னைத்திருத்தவே அம்பா உன்மூலமா

    இப்படி விளையாடியிருக்கான்னு புரிஞ்சிது;நான் தப்பாப் படிச்சதோட நிக்காம உன்னுள்ளும் சந்தேகம் ஏற்படுத்தினேன்!இந்த விளையாட்டை இன்னும் உறுதி படுத்தரமாதிரி 49 வது பதத்திலும் "அரிவையர் சூழவந்து

    அஞ்சல் என்பாய்"என்றுள்ள இடத்திலும் அஞ்சேல் சொல்லிட்டு அஞ்சல் என்று படிக்கவைத்து சரிபடுத்தினாள்!

    ReplyDelete
  8. OMG! லலிதாம்மா! மிக்க நன்றி பகிர்ந்து கொண்டதற்கு.

    முதலில் எழுதும்போதே 'அஞ்சல்' என்றே இயல்பாகவே எழுதினேன். அபிராமி அந்தாதி படிப்பதால், அதிலிருந்துதான் வந்திருக்கணும். நானுமே சில சமயம் பார்க்காமல் சொல்லும் போது நானாக சில வார்த்தைகளை மாற்றிச் சொல்லி விடுவதுண்டு - 'என்றும் வணங்குவது' என்பதை 'என்றும் பணிவது'ன்னே ரொம்ப நாள் சொல்லிக்கிட்டிருந்தேன், பிறகு இந்த மாதிரி ஒரு நிகழ்வினால்தான் சரி செய்து கொண்டேன். அதன் பிறகு அவ்வப்போது பார்த்து வாசித்து சரி பார்த்துக் கொள்வேன்.

    அம்மான்னா அம்மாதான்! ச்வீட்டச்ட்!

    ReplyDelete
  9. அருமை நன்றி கவிநயா

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி, தி.ரா.ச. ஐயா.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி திரு.நடராஜன்.

    ReplyDelete