செம்மாதுளைச்சிரிப்பு
செவ்விதழில் தவழ எங்கள்
பொம்மைக்கொலுவில் அமர்ந்து
பேரருள் பொழியவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
சொக்கனைச் சொக்கவைத்த
கண்ணழகி!மீனாக்ஷி!
இக்கணமே சாக்குபோக்கு
சொல்லாமல் வரவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
கொண்டவன் உண்ட நஞ்சை
உந்தன் கற்புத்திறத்தாலே
கண்டத்திலே தடுத்தவளே!
கற்பகமே!வரவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
பக்குவமாய் சுண்டல் செய்து
பாயசமும் படைக்கின்றோம்;
நெக்குருக நாங்கள் பாடும்
துதி கேட்க வரவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
செவ்விதழில் தவழ எங்கள்
பொம்மைக்கொலுவில் அமர்ந்து
பேரருள் பொழியவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
சொக்கனைச் சொக்கவைத்த
கண்ணழகி!மீனாக்ஷி!
இக்கணமே சாக்குபோக்கு
சொல்லாமல் வரவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
கொண்டவன் உண்ட நஞ்சை
உந்தன் கற்புத்திறத்தாலே
கண்டத்திலே தடுத்தவளே!
கற்பகமே!வரவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
பக்குவமாய் சுண்டல் செய்து
பாயசமும் படைக்கின்றோம்;
நெக்குருக நாங்கள் பாடும்
துதி கேட்க வரவேண்டும்!
அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!
வர வேண்டும் அம்மா!
ReplyDeleteலலிதாம்மாவுக்கும் சேர்த்தே வரவேற்பு :) நவராத்திரியில் உங்கள் வரவு நல்வரவாகுக.
நவராத்திரியின் பொழுது பாட அருமையான பாடல்.
ReplyDeleteபக்குவமாய் சுண்டல் செய்து
ReplyDeleteபாயசமும் படைக்கின்றோம்;
நெக்குருக நாங்கள் பாடும்
துதி கேட்க வரவேண்டும்
இப்படியெ்்லாம் அழைத்தால் அப்பறம் அன்னை எங்க வீட்டுக்கெல்லாம் வரவேண்டாமா?
அன்னையின் பாடல்களை எத்தனை தடவை கேட்டாலும் யார் மூலமாக கேட்டாலும் அலுக்கவே அலுக்காது.
v
ReplyDeleteஅன்புள்ள கவிநயா
ReplyDeleteமிக்க நன்றி .தாங்கள் அம்மனுக்கு கொலுவிருக்க அழகான தளம் அமைத்திருக்கிறீர்கள்.நாங்கள் கொலுவிற்கு வந்து பாடுகிறோம்.உங்களஊகும் என் நவராத்திரி வாழ்த்துக்கள்.
நன்றி குமரன்.முன்பெல்லாம் கொலுவிற்கு வந்தவர்களை பாடியே ஆகவேண்டும் என்று பாட வைத்து விடுவோம்.எவரும் மறுக்காமல் பக்தியுடன் பாடுவார்கள்.
ReplyDeleteநன்றி தி.ரா அன்னையின் பாடல்கள் நமக்கு அலுக்காது.அன்னைக்கும் தன் பக்தர்கள் எல்லார் வீட்டுக்குப் போவதும் அலுக்காது.அதனால் உங்கள் வீட்டுக்கு கட்டாயம் வருவார்
ReplyDeleteTHE SONG IS NICE.WE PRAY THE DEVI TO ENTER ALL THE HOUSES TO SAVE THE UNIVERSE
ReplyDelete