அம்மா உன்திரு வடிசரணம்
அருள்கூர்ந் திங்கே நீவரணும்
மனதின் கவலை நீக்கிடணும்
மாதா நீதான் உதவிடணும்
உன்னடியே தொழுதிடப் பழகிடணும் - உன்
பெயரே நாவில் தவழ்ந்திடணும்
நாளும் உனையே போற்றிடணும் - உன்
பெருமை தனையே பாடிடணும்
உன்சொல் ஒன்றே கேட்டிடணும் - உன்
விருப்பம் போலே வாழ்ந்திடணும்
நீயே கதியென் றுணர்ந்திடணும் - உன்
காலடியில் நான் கிடந்திடணும்
--கவிநயா
படத்தைப் பெரிசுபண்ணிப் பார்த்தேன்;அந்தப்பாதங்களைவிட்டுக் கண் அகல மறுக்கிறது!
ReplyDelete"உன் காலடியில் நான் கிடந்திடணும்"..நானும்!
//நாளும் உனையே போற்றிடணும் - உன்
ReplyDeleteபெருமை தனையே பாடிடணும்//
நாளும் இப்பணியை செய்யும் தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்
வாங்க லலிதாம்மா. நன்றி :)
ReplyDelete//நாளும் இப்பணியை செய்யும் தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்//
ReplyDeleteசெய்ய வைத்திருப்பவளுக்கு என் வணக்கங்களும், உங்களுக்கு என் நன்றிகளும், கைலாஷி :)