Tuesday, September 27, 2011

9ராத்திரி-01: "கொலு" இருக்க வருக!

அன்பர் அனைவருக்கும் இனிய நவராத்திரி (ஒன்பதிரா) வாழ்த்துக்கள்!

அன்னை எங்கும், என்றும், எப்போதும்...எல்லா இடத்தும் இருப்பவள் தான்!
நம் அம்மாவின் நினைவு அடிக்கடி இருந்தாலும்,
பிறந்த நாள்/மணநாள் போன்ற நாட்களில், பூங்கொத்தும், முத்து மாலையும், புடைவையும் குடுத்து அசத்துவதில்லையா?:)

அது போல், இன்று துவங்கி, ஒன்பது நாட்கள்...
முதல் நாளின் முதல் வேலையாக...
"கொலுவிருக்க வா" என்று அழைத்து,
உட்கார்த்தி வச்சி, விசிறி விட்டு, நம்ம கையால் காபி போட்டுத் தருவோம்!:)

சுசீலாம்மா-வின் தேன் பாகு குழையும் குரலிலே...அலைமகளே வருக! கொலுவிருக்க வருக!



கேட்டுக் கொண்டே வாசிக்க...

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டு
பூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை.....திருமகளே.....

திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே திருசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அட்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!!

மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நம'ஸ்'காரம்..
சகல வரம் தருவாய் நம'ஸ்'காரம்..
பத்மபீட தேவி நம'ஸ்'காரம்..
பக்தர் தமைக் காப்பாய் நம'ஸ்'காரம்..

4 comments:

  1. யாருமே பதிவிடவில்லையே என்று நினைத்துக் கொண்டே (வருந்திக் கொண்டே) வந்தேன், நாமாவது இடலாமென்று. மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  2. அருமை அருமை தேவி அருள் முன்னிற்கட்டும்

    ReplyDelete
  3. வருத்தமே வேண்டாம் அந்த மீனாக்‌ஷியே வந்து அமர்ந்திருக்கிறாள்

    ReplyDelete
  4. அன்பர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete