Monday, February 20, 2012

தூது செல்வாயோ?


சுப்பு தாத்தா அந்தக் கால ஹிந்தி பாடல் மெட்டில் அருமையாக பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா.


தூது செல்வாயோ புவியே தூது செல்வாயோ?
நீ சுற்றுவதை சற்றே விட்டு தூது செல்வாயோ?

(தூது)

அன்னையவள் இருப்பிடத்தை நீ அறிவாயோ - அவள்
குடியிருக்கும் அடியவரின் மனமறிவாயோ?

(தூது)

நீ சுற்றச் சுற்ற நாட்களெல்லாம் சடுதியில் ஓடும் - என்
அன்னையினைக் காணாமல் மனமிங்கு வாடும்
நீ சுற்றுவதைக் சற்றே விட்டால் நாளது நீளும் - என்
அன்னை இங்கு வரும்வரையில் உயிர் கொஞ்சம் வாழும்

(தூது)


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/02/amman.html

6 comments:

  1. சேதி சொல்வாயே,புவியே!சேதி சொல்வாயே;

    தூது விடும் பேதைக்கொரு சேதி சொல்வாயே!


    "தாயை வெளியில் தேட ஒரு தேவை இல்லையே!-மகா

    மாயை உன்றன் மனத்திலேயே மறைந்திருக்காளே!"-இந்த(சேதி...)

    ReplyDelete
  2. முகேஷ் பாடிய "ஆன்சு பரி ஹெ,எ ஜீவன் கி ராஹேன் "என்ற
    (என் மோஸ்ட் பேவரிட்) பாட்டின் மெட்டில் சுப்புசார் பாடிஅசத்திட்டார் ;கேட்டு ரசித்தேன் ;நன்றி !

    ReplyDelete
  3. வாங்க லலிதாம்மா.

    //"தாயை வெளியில் தேட ஒரு தேவை இல்லையே!-மகா
    மாயை உன்றன் மனத்திலேயே மறைந்திருக்காளே!"-இந்த(சேதி...)//

    அவதான் மாயையை விலக்கி அதை உணர்த்தணும் அம்மா.

    ReplyDelete
  4. //I just sang this song like the very old Hindi Song of Latha Mangeshkar.
    You can hear it here.

    subbu thatha//

    மிக அருமை தாத்தா. பாடலின் பொருளும் உணர்வுகளும் சரியான ராகத்தில் பாடும்போது அழுத்தமாக வெளிப்படுவதை மீண்டும் ஒரு முறை கண்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. //முகேஷ் பாடிய "ஆன்சு பரி ஹெ,எ ஜீவன் கி ராஹேன் "என்ற
    (என் மோஸ்ட் பேவரிட்) பாட்டின் மெட்டில் சுப்புசார் பாடிஅசத்திட்டார் ;கேட்டு ரசித்தேன் ;நன்றி !//

    கேட்டு ரசித்தமைக்கு சுப்பு தாத்தா சார்பில் நன்றி லலிதாம்மா :)

    ReplyDelete