Tuesday, May 1, 2012

தரிசனம்

(என் "சர்வம் நீயே" வலையில் ஓராண்டு முன் பதிவிட்ட
       காமாட்சி துதி  அம்மன் பாட்டு அன்பர்களுக்காக கீழே!  ) 

            

                       தரிசனம்
(subbu sir sings:
  http://www.youtube.com/watch?v=2WNSoFe2FWU&feature=email  )


அம்பா காமாட்சி!உன் குமிழ்வாயில் குறுநகை!
                                                       தரிசனம் கனவுதானோ?
செம்பவழக் குவியலில் முத்தும் முகிழ்ந்ததோ?
                                      விந்தையோ?உண்மைதானோ?
குங்குமப்பூங்கொத்தில்  தும்பையும் பூத்ததோ?
                                           கற்பனைக்கோலந்தானோ?
மங்களச் செவ்வாயில் திங்கள் உதித்ததோ?
                                                மந்திரஜாலந்தானோ?

நின்கரம் ஒன்றிலே  கரும்பேந்தி இனிமையைக்
                                       கரும்பிலே கூட்டிவைத்தாய்!
மென்கரம் ஒன்றிலே மலரேந்தி மென்மையை
                                        மலர்களில் ஏற்றிவைத்தாய்!
உன்சிரம் தாங்கிடும் வெண்ணிலாதன்னிலுன்
                                  தண்ணொளி தேக்கிவைத்தாய்!
என்மனப் பிதற்றலுன் பொற்பதம் தொட்டதும்
                                          பாடலாய் ஆக்கிவைத்தாய்!

1 comment:

  1. Thank U for giving a link .
    I had just tried to sing it in four different raagas, a raag akin to bowli, shanmughapriya, thodi and saranga.

    Thanks for sharing.

    subburathinam.

    ReplyDelete