Monday, July 30, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 1





சுப்பு தாத்தா கானடா ராகத்தில் மிகவும் சுகமாகப் பாடியிருப்பதை இங்கே கேட்டு மகிழுங்கள்.


சுமனஸவந்தித சுந்தரி மாதவி
சந்த்ர சஹோதரி ஹேமமயே
முனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாஷிணி வேதனுதே
பங்கஜ வாசினி தேவஸு பூஜித
சத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
ஆதிலக்ஷ்மி சதா பாலயமாம்


உத்தமர் போற்றிடும் உத்தமியே
            எழில் சுந்தரியே எங்கள் மாதவியே
பொன்னென ஒளிர்ந்திடும் பூவிழியே
            தூய பால்வெள்ளைச் சந்திரன் சோதரியே
முனிவர்கள் சூழ்ந்திடத் திகழ்பவளே
            உயர் முக்தியினை யளித் தருள்பவளே
கனிமொழியால் உள்ளம் கவர்பவளே
            நால் வேதமும் புகழ்ந்திடும் நல்லவளே
பங்கய மலரினில் வசிப்பவளே
            உயர் வானவர் வணங்கிடும் வசுந்தரியே
நற்குணம் நல்கிடும் நாயகியே
            நல் லமைதியின் உருவெனத் திகழ்பவளே
மதுசூதனனின் காதலியே
           என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை ஆதிலக்ஷ்மியே காத்தருள்வாய்! 


(தொடரும்)

--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.tarangarts.com/adhi-lakshmi/other-lakshmi-/br/postures/lakshmi/tanjore-paintings/c-1_22_625-p-95.html

7 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு அக்கா.

    ReplyDelete
  2. Padamum Kavithaiyum miga alagaai ullathu.
    Natarajan.

    ReplyDelete
  3. அழகான தமிழ்.. கொஞ்சுது அப்படியே!

    ReplyDelete
  4. நன்றி குமரன், திரு.நடராஜன், லலிதாம்மா, மற்றும் திவாகர் ஜி!

    பொறுமையாக பொருளைச் சரி பார்த்துத் தந்தமைக்கு குமரனுக்கு சிறப்பு நன்றிகள்! :)

    ReplyDelete
  5. நான் முதலில் படித்த போது லலிதாம்மாவின் வியப்பொலியைப் போலவே தான் வியந்தேன். மிகவும் அருமை.

    லலிதாம்மாவிற்கும் வடமொழி நன்கு தெரியும் என்பதால் பொருள் மாறாது அக்கா மிக அழகாக எழுதியிருப்பதைப் பார்த்து வியக்கிறார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. குமரன், மீள் வருகையா! நன்றி... நன்றி :)

    ReplyDelete