Monday, October 8, 2012

மதுராபுரி அழகி!




சுப்பு தாத்தா கதன குதூகலத்தில் குதூகலமாகப் பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!





மதுராபுரியாளும் மீனாக்ஷி - என்
மனதினில் என்றென்றும் உனதாட்சி
(மதுராபுரி)

துள்ளுகின்ற மீனினத்தைத் துரத்திய விழியழகி
தெள்ளுதமிழ்க் கவிகூறும் மதுரையின் பேரழகி
(மதுராபுரி)

அம்பலத் தாடுகின்ற ஆடல் அரசனுடன்
செம்புலப் பெயல்நீர் போல் சேர்ந்திருக்கும் சுந்தரியே
கூடல் நகரினிலே கொஞ்சுமிளம் பைங்கிளியே
நாடி வரும் அடியவர்க்கு கோடி சுகம் தருபவளே!
(மதுராபுரி)

--கவிநயா

படத்துக்கு நன்றி: 'அடியேன்' முத்து

8 comments:

  1. மதுராபுரி ஆளும் மஹராணியே!

    ReplyDelete
  2. ஓரவிழியால் நீ ஒருகணம் பார்த்தாலும்

    பாரம் குறைந்து பஞ்சாய்ப்பறந்திடுவேன்;

    பாதவிரல்நுனி பட்டுவிட்டால் போதும்

    பாமலர்மாரி பெய்து மகிழ்ந்திடுவேன்

    ReplyDelete
  3. //துள்ளுகின்ற மீனினத்தைத் துரத்திய விழியழகி//

    பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லை என்பதன் காரணம் பற்றிய கற்பனை... :)

    ReplyDelete
  4. வாசித்தமைக்கு நன்றிகள், சந்திர வம்சம், மற்றும் லலிதாம்மா.

    ReplyDelete
  5. அழகான அருமையான பாடல்...

    நன்றி...

    ReplyDelete
  6. enjoyed subbusir's paattu!
    மீனினத்தைத்துரத்திய வரி எனக்கு சௌந்தர்யலஹரியின்

    (56) கீழுள்ள வரியை நினைவுபடுத்தியது!

    "தவாபர்ணே கர்ணே ஜபனயன பைசுன்ய சகிதா :

    நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா :சபரிகா :"


    காதளவோடும் அம்பாளின் கண்களைப் பார்த்த மீன்களுக்கு

    'இக்கண்கள் அம்பாளின் காதிடம்போய் "மீன்கள் என்னோடு போட்டி

    போடுகின்றன" என்று ரகசியமாக் கோள் சொல்கின்றனவோ ?'

    என்று பயம்!கண்களின் பெடிஷனைக் கேட்டு அம்பாள் மீன்கள் மேல்

    ஆக்க்ஷன் எடுக்க வந்து விட்டால்?இந்த பயத்தால் மீன்கள் நீரின் மேல்

    பரப்பில் நீந்தாமல் உள்ளுக்குள் மறைவாக முழுகினவாம் !


    மேலுள்ள வாறு பரமாச்சார்யார் அளித்த விளக்கம் நான் ரொம்ப விரும்பி அடிக்கடிப் படிக்கும் ஒரு பகுதி!

    ReplyDelete
  7. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  8. லலிதாம்மா, உங்களுக்குப் பிடிச்ச பரமாச்சார்யரின் விளக்கம், எனக்கும் பிடிச்சிருச்சு :) அதனோடான கற்பனையின் ஒற்றுமை குறித்து ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. நன்றி அம்மா!

    ReplyDelete