தாயவள் பக்தியில் ஊறு!
(subbu sir sings :- http://www.youtube.com/watch?v=LMqOZrQYuMA )
வற்றாத பேரருளாறு-அன்னை
வரமருளும் கல்பத்தாரு.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.
அரனிலோர் பங்கான மங்கை -அவள்
அவ்யாஜ கருணைக்கங்கை .
அம்புயக்கண்ணனின் தங்கை-நமக்கு
அபயந்தரும் அவளங்கை.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.
மாமதுரையில் மீனலோசனி -காஞ்சி
காமகோடி பீட வாசினி.
மென்னகை பூக்கும் சுஹாசினி-அவள்
இன்னருளால் இயங்குது காசினி.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.
வற்றாத பேரருளாறு-அன்னை
வரமருளும் கல்பத்தாரு.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.
-----------------------------------------------------
அவ்யாஜ == pl see : (1) http://kavinaya.blogspot.in/2012/03/blog-post_18.html
(2) http://maduraiyampathi.blogspot.in/2011/11/blog-post_21.html
பாடல் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுப்புத் தாத்தா குரலில் கேட்க வேண்டும்...
தாயவள் பக்தியில் ஊறு - அன்னை
ReplyDeleteமாயவள் சக்தியைக் கூறு - முன்னை
நூலடிச் சேலடிப் பாலடி யாமவள்
காலடி தன்னிலே பேறு - அம்மன்
சேவடி தன்னிலே சேரு!
-----
மனத்திலே வாழ்ந்திடும் மங்கை - புன்னை
வனத்திலே அழகரின் தங்கை - முன்னை
நங்கைக்கொரு பங்கைத்தரு கங்கையணி செங்கண்சிவன்
மனைவியின் மலர்க்கரச் செங்கை - அது
துணைவரும் நமக்கென்ன சங்கை?
(1)தனபாலன்! வருகைக்கு நன்றி . சுப்புசாரின் குரலில் கேட்க நானும் காத்திருக்கேன் .
Delete(2) கே ஆர் எஸ் ! பாட்டு சூப்பர் ! காவடிச்சிந்து மெட்டில் படு கச்சிதமாப் பொருந்தும் வரிகள்! மீண்டும் மீண்டும் படித்து (மனத்தில் பாடிப் பார்த்து )ரசித்தேன் .
காவடிச் சிந்து மெட்டில் பாடிப் பார்த்தேன். அருமை!!. என்னவொரு அற்புதமான சொல்லாட்சி!!!!
ReplyDelete////அரனிலோர் பங்கான மங்கை -அவள்
அவ்யாஜ கருணைக்கங்கை ./////
அருமை. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி லலிதாம்மா!!
subbu thatha sings in two raagas. also in kavadi chindu
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=LMqOZrQYuMA
subbu thatha
www.subbuthatha.blogspot.com
1) பார்வதிஜி ,
ReplyDeleteவருகை தந்து பாட்டை ரசித்ததற்கு நன்றி .
2) சுப்பு சார்,
இரண்டு ராகங்களில் பாடி அசத்திட்டீங்க சார் .நன்றி .