Friday, July 12, 2013

MS அம்மா குரலில்: "நெஞ்சுக்கு நீதி"!

அம்மன் பாட்டில், பாரதியாரின் இந்தப் பாடல், இது வரை வராதது, வியப்பிலும் வியப்பே!
= அது என்ன நெஞ்சுக்கு நீதி?

இது, கலைஞர் கருணாநிதியின் சுயசரிதை (தன்வரலாறு) அல்ல!
அதனினும் கூர்மையான பாரதியின் வரி...
= அது என்ன நெஞ்சுக்கு நீதி? அன்னையிடம் பாரதி வேண்டுவது:



மனம் என்பது ஆறாதது!
"ஆறு மனமே ஆறு" -ன்னு சொல்லுவாய்ங்க! ஆனா ஏதோ ஒரு விடயத்திலாவது, ஆறாமல் தான் இருக்கும்... பலருக்கும்!

Plus Two-வில் இன்னும் சோம்பாமப் படிச்சிருந்தா, கூடுதலா மார்க் எடுத்திருக்கலாமோ?
எடுத்திருந்தா, அண்ணா பல்கலையில் முடிச்சி, நேரா வெளிநாடு போயிருப்பேன்;
ஆனா... இப்போ இந்த டொக்கு கம்பெனியில் வேலை பாக்குறேன்-னு, என்னிடம் அங்கலாய்த்தார் ஒரு சென்னை மேலாளர்;

அவருக்கு வயது 50:) Too much to think abt plus two:)
ஆறாமல் இருக்குது உள்ள ஒரு எண்ணம்!

* பெற்றோர் அன்பு இல்லாத குழந்தைகள்
* மனைவியின் மனதறியாக் கணவர்கள்
* கணவரின் மாண்பறியா மனைவிகள்
* தொழிலில் ஏமாற்றிய பங்குதாரர்கள்
இப்படி எத்தனையோ?

எல்லாத்தை விடவும்.........
தான் அன்பே செய்திடினும், அதை மதிக்காது எத்திய போது = நெஞ்சுக்குப் பசி; நீதி கிடைக்குமா? என்னும் பசி!


பசி-ன்னாலே அம்மா தானே!
அதான் நெஞ்சுக்கு நீதியை, அம்மாவிடமே கேட்கின்றான், தமிழ்க் கவி, பாரதி!


இன்பம் எங்கே இருக்கு? = Happiness Shop ன்னு விக்குறாங்குளா என்ன?
பத்து கிலோ வாங்கி வீட்டில் அடைச்சி வச்சிக்க முடியுமா?

இன்பம் / துன்பம் = ரெண்டுமே வெளியில் இல்ல; நம்ம நெஞ்சில் தான் இருக்கு!
= அதான் "நெஞ்சுக்கு" நீதி!

*அவள் பார்வை = தீ
*நம் துன்பம் = பஞ்சு

துன்பங்கள் எரிகையில், உள்ளத்தில் சமையல் நடந்து, உணர்விலே பசி அடங்குகிறது!
அப்படி நெஞ்சுக்கு நீதி செய்பவள் = அம்மா!

தாயே என் நெஞ்சப் பசி போக்கு; என்னை என் முருகவனுக்கே ஆக்கு!


வரிகள்: சுப்பிரமணிய பாரதியார்
குரல்: எம்.எஸ். சுப்புலட்சுமி
நூல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்




நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
நிறைந்த சுடர்மணிப் பூண். 
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் 
பார்வைக்கு நேர் பெருந்தீ. 
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி 
வையக மாந்தர் எல்லாம், 
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர், சக்தி 
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

நம்புவதே வழி என்ற மறைதன்னை 
நாம் இன்று நம்பி விட்டோம் 
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனைக் 
கும்பிடுவேன் மனமே! 
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் 
அச்சம் இல் லாதபடி 
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் 
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருள்
ஆக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்,
எள் அத்தனைப் பொழுதும் பயனின்றி
இராது என்றன் நாவினிலே
வெள்ளம் எனப் பொழிவாய் சக்தி வேல், 
சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்!!

தாயே... நெஞ்சுக்கு (அன்பெனும்) நீதியை வழங்கு!
தாயே... என் நெஞ்சப் பசி போக்கு; என்னை என் முருகவனுக்கே ஆக்கு!

3 comments:

  1. சென்னை மேலாளர் பாவம்...

    நல்லதொரு பாடலுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //துன்பங்கள் எரிகையில், உள்ளத்தில் சமையல் நடந்து, உணர்விலே பசி அடங்குகிறது!
    அப்படி நெஞ்சுக்கு நீதி செய்பவள் = அம்மா!//

    ஆமாம். அம்மான்னா அம்மாதான்.
    பாரதி பாடல் பகிர்விற்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  3. அடிக்கடி பாடும் பாடல். மக்களுக்குத் தாலாட்டாகவும். அவர்களுக்கு இதன் வரிகள் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

    ReplyDelete