Monday, July 8, 2013

அம்மா... அம்மா... அம்மா...



அம்மா என்றேன், கண்ணே என்றாய்
அம்மா என்றேன், ஓடி வந்தாய்
அம்மா என்றேன், அன்பைத் தந்தாய்
அம்மா என்றேன், அரவணைத்தாய்!

மாலை இல்லை, மலரைத் தந்தேன்
மகிழ்ந்ததனை ஏற்றுக் கொண்டாய்
கனியவில்லை, காயைத் தந்தேன்
கனிந்ததனை ஏற்றுக் கொண்டாய்!

அடுக்கடுக்காய்த் தீபம் இல்லை,
அகல் விளக்கில் ஒளிர்ந்திருந்தாய்
குறைகள் மிகுந்த என் மனதிலும்
குடியிருக்கச் சம்மதித்தாய்!

அம்மா உன்றன் அன்பைச் சொல்ல
வார்த்தையில்லை, வழியுமில்லை
அம்மா உனக்குத் தர என்னிடத்தில்
அன்பைத் தவிர ஏதும் இல்லை!


--கவிநயா


8 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //அம்மா உனக்குத் தர என்னிடத்தில்
    அன்பைத் தவிர ஏதும் இல்லை!//

    அன்பும் தரத்தான் முடியலையே
    அதையுன் பிள்ளை பறித்தானே!

    கண்ணீர் தந்தால் ஏற்பாயோ?
    கரிக்கும் உப்பென்று மறுப்பாயோ?

    ReplyDelete
  3. நன்றி தனபாலன்!

    ReplyDelete
  4. //அன்பும் தரத்தான் முடியலையே
    அதையுன் பிள்ளை பறித்தானே!//

    உண்மையில் தன்னை விட, தன் பிள்ளைகள் மீது அன்பு செலுத்துபவர்களைத்தான் அம்மாக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் :)

    வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  5. A welcome departure from the conventional soka sangeetham.

    Yath Bhavam Thath Bhavathi.
    You Become What you Believe.

    In order that one be happy, one should be in search of happiness that is more inside rather than outside.

    Sing therefore in praise of Goddess, which thought alone invokes all the happiness, joy in the world around.

    God BleAss You.

    As usual, I am attempting to sing this song in Raag Kapinarayani, a very rare raag, where very few songs are there. One such krithi is by Saint Thyagarja, on Lord Rama.

    SARA SA MADHANA, VEDHA THANDA CHATHURA.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  6. In my earlier comment, there is an unintentional spelling error, which I regret.
    It should read:

    GOD BLESS YOU.

    SUBBU THATHA.

    ReplyDelete
  7. " குறைகள் மிகுந்த என் மனதிலும் குடியிருக்கச் சம்மதித்தாய்! " like this !

    ReplyDelete
  8. ஆசிகளுக்கு நன்றி தாத்தா.

    நன்றி லலிதாம்மா.

    ReplyDelete