Wednesday, October 9, 2013

தாயே மூகாம்பிகே!

இனிய நவராத்திரி (ஒன்பதிரா) வாழ்த்துக்கள்!

இன்று, For a change, ஒரு நல்ல சினிமாப் பாட்டைக் கேட்போம்..
அம்மன் பாட்டு தான், பயப்படாதீங்க:)

சினிமாப் பாட்டு-ன்னாலே பயந்து ஒதுக்கத் தேவையில்லை:)
ஸ்லோகப் பாடல்கள் போல், சினிமாப் பாடல்களும் அன்னைக்கு அணிகலனே!!

இந்தப் பாடல் = மூவர் பாடும் பாடல்!
= முத் தேவியர்க்கு!
1. பாலமுரளி கிருஷ்ணா 2. MSV 3. சீர்காழி கோவிந்தாராஜன்
மூவரும், இளையராஜா இசையில்!

பின்பு, ஜானகியும் பாடி நிறைத்து வைப்பார்
மூவரும் ஒருவரான மூகாம்பிகை அன்னையை!

பாடல் காணொளி கீழே; ஒலிச்சுட்டி மட்டும் வேணும்-ன்னா = இங்கே!


தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!

தேவியர் மூவரும் மேவிய உருவே - அருள்
தண் நிழல் வழங்கிடும் புண்ணியத் தருவே!
(தாயே மூகாம்பிகே)

பாலமுரளி: (கலைமகள்)

நான்முகன் தேவி நா மகளே, 
நான்மறை ஏத்தும் பா மகளே,
ஞான மழை முகிலே!

தாமரைப் பூவில் பாவலர் நாவில்,
அமர்ந்தவளே அருள் வீணை மீட்டும்
ஞான மழை முகிலே!

மூடர்கள் வாக்கும், ஊமைகள் நாக்கும்,
கவித்துவம் கொண்டாடுவதும்,
மகத்துவம் கண்டாடுவதும்,

உனதருள் பார்வை உதவிய வாழ்க்கை
மேலாம் கல்வி வழங்கிடும் செல்வி
ஞான மழை முகிலே!

பிரம்ம லோகத்திலே, கர்ம யோகத்திலே,
ஞான பீடத்திலே, மேவும் காயத்ரியே!
வேத கோஷப் ப்ரியே, சங்கீத நாதப் ப்ரியே!
தர்ம சாஸ்திரப் ப்ரியே, தர்க்க நியாயப் ப்ரியே!

திரையிசைச் சக்கரவர்த்தி MSV: (அலைமகள்)

நாரணன் தேவி திருமகளே,
நவநிதி யாவும் தரும் மகளே!

ஆனந்த வாழ்வின் ஆதாரம் நீயே!
அருள் உள்ளம் வாய்ந்த பொருள் வெள்ளமே!

பெருமானும் கொஞ்சும் ஒரு மானும் நீயே,
திருமார்பில் வாழும் மகாலக்ஷ்மியே!

வறுமைப் பிணியின் வருத்தம் தணிய உதவும் மருந்தே
பொன்னும் பொருளும் மண்ணும் புகழும்
நிதம் நினது பதம் பணியத் தரும் திருவே!

ஆனந்த வாழ்வில் ஆதாரம் நீயே!
அருள் உள்ளம் வாய்ந்த பொருள் வெள்ளமே!

சீர்காழி கோவிந்தராஜன்: (மலைமகள்)

மலை மகள் நீயே மாகாளியே!
உமையவள் நீயே ஓம்காரியே!

திரிபுர சுந்தரியே, திரிசூலி நிரந்தரியே,
தாமரைக் கழல், தளிர் நடை இட
பூவிழிக் கனல் பொழி மழை என
சுடர் விட, இடர் விட, நடமிடும்..
(திரிபுர சுந்தரியே)

கருங்குழல் மலராட, கனியிதழ் நகையாட,
அருமறை துதி பாட, அரவுகள் படமாட,
எட்டுத் திசை சிதற, சுட்டும் விழி பதற,
தத்தோம் நடை அதிர, தண்டை மணி உதிர


தாம் கிட, தரி கிட, தை என ஒலித்திட
தீம் கிட, திமி கிட, தோம் என நடமிடும்
ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம்!
--------------------------------------

எஸ். ஜானகி: (மூவரும் ஒருவரான மூகாம்பிகை)

அம்மா அம்மா 
அம்மா அம்மா

தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!

இரு மலரடி தொழும் - ஒரு மகள் மீது
இரு விழி மலராதோ?
இரு விழி அது தரும் - அருள் ஒளியாலே
இரவுகள் புலராதோ?
வாழும் வழி காட்டு, போதும் விளையாட்டு!

வாய் இன்றி நான் அன்று, 
தாய் வேண்டினேன் - அந்தத்
தாய்க்கு இன்று மொழி சேர்க்க 
வாய் வேண்டினேன்

விஷமுண்ட பெருமானின் ஒரு பாதியே - இங்கு
விஷம் கொண்ட ஒரு பெண்ணின் உயிர் காக்கவே

ஓசை விளைந்திட உதடுகள் மொழிந்திட
பேசத் திருமலை அருளே
மோதும் விஷமது விலகிட உதவிடு
ஓதும் மறைகளின் பொருளே

கதிரே கனலே கருணைப் புனலே - அருட்
கனியே மணியே கற்பின் அணியே
அபயம் அபயம் 
சரணம் சரணம்

அந்தரி சுந்தரி சங்கரி சாம்பவி
ஆதி பயங்கரி அபயம்
பைரவி பார்கவி மோகினி யோகினி
மாலினி சூலினி சரணம்

(தாயே மூகாம்பிகே)


குரல்: பாலமுரளி, MSV, சீர்காழி, ஜானகி
வரி: வாலி
இசை: இளையராஜா
படம்: தாய் மூகாம்பிகை

9 comments:

  1. என்றும் இனிக்கும் பாட‌ல்க‌ளுள் இதுவும் ஒன்று. கேட்க‌க் கேட்க‌ மேலும் இனிமை... ஒவ்வொரு முறையும்!

    ReplyDelete
  2. அருமையான பாடல். வரிகளும், குரல்களும், இசையும், இனிமைக்கு இனிமை சேர்க்கின்றன. மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோ
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?showComment=1381805945354#c5883931640388978152

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  5. அன்புடையீர்!.. வணக்கம் .
    இன்று தங்களின் - அம்மன் பாட்டு - வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.
    வாழ்த்துக்கள்!
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?

    ReplyDelete
  6. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
    இனிமையான பாடல்!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நெஞ்சை அள்ளும் பாடல் வரிகள். மனதைக் கவரும் பாடகர்கள்.. மறக்க முடியாத படம்... மனதினில் அகலாத பாடம்....

    ReplyDelete