Friday, June 8, 2007

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்!

குருவை மிஞ்சும் சி'ஷ்'யன் - யாரு தெரியுமா? = ஒரு ஈழத்துப் பெருங்கவிஞர்!

குரு: பாபநாசம் சிவன் அவர்கள்.
சிஷ்யர்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்


வெள்ளிக் கிழமை அதுவுமா, அம்மன் பாட்டு கேட்கலாம் வாங்க!
சி'ஷ்'யர் எப்படிக் குருவை மிஞ்சினார்?

சென்னையில், திருமயிலை (மயிலாப்பூர்-ன்னா எல்லாருக்கும் புரிஞ்சிக்கற மாதிரி இருக்கும்)
மயிலை மன்னாரு தெரியும், கபாலி தெரியும், முண்டகக்கண்ணி தெரியும்....
- இன்னும் மயிலாப்பூரைப் பத்தி நிறையவே சொல்லலாம்!
- மயில் ஆர்ப்பு ஊர் => மயிலாப்பூர்


"கபாலீ'ஸ்'வரர்-கற்பகாம்பிகை" மேல் பற்பல பாடல்கள் எழுதியுள்ளார் பாபநாசம் சிவன்.
மயிலை விழாக்களைப் பற்றியெல்லாம் கூடப் பாடியுள்ளார்.

அவர் கூடவே மயிலை வீதிகளில் வலம் வந்த சீடர் தான் வீரமணி ஐயர். அவரையும் கற்பகாம்பாள் கவர்ந்ததில் வியப்பேதுமில்லையே!


 மயிலை = அன்றும்..இன்றும்...

ஆனால் பாருங்கள்!
கற்பக அம்பிகை மீது, சிவன் பாடியதை விட, சீடர் பாடியதே செம ஹிட்டானது!
குருவை விஞ்சும் சீடராக, வீரமணி ஐயரின் இந்தப் பாடல், அன்னைக்கு நிரந்தர அணிகலனாய் அமைந்து விட்டது = "கற்பக வல்லி நின்"

பாபநாசம் சிவன் = தமிழிசைத் தொண்டர்.
ராகத்துடன் கூடிய பல தமிழ்ப் பாடல்கள் பிரபலமாகத் தந்த மேதை.
அவரிடம் பயின்றவர் ப்ரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயா (அன்னார் அண்மையில் காலமானார்....)

இசை, நடனம் இரண்டிலும் இவர் வித்தகர்!
72 மேளகர்த்தா ராகங்கள் அனைத்திலும் பாடல்கள் புனைந்துள்ளார்; அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்!
பிரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயரைப் பற்றி, மலைநாடான் ஐயா ஒரு சிறப்பு ஒலிப்பதிவு முன்பு இட்டிருந்தார்!
அதில் வீரமணி ஐயர், இந்தப் பாடல் புனைவைப் பற்றித் தானே பேசும் ஒரு வீடியோவும் உள்ளது.
அதை அவசியம் காணுங்கள். சுட்டி இங்கே!

TMS குரலும் இந்தப் பாட்டிற்கு, அப்படியொரு சிறப்பு சேர்த்தது;

ஒவ்வொரு பத்தியிலும் ஒரு ராகத்தின் பெயர் வரும்! 
அந்தப் பத்தியை, அந்த ராகத்திலேயே பாடி,
உள்ளத்தைக் கொள்ளை கொண்டது வீரமணி ஐயரா? TMSஆ? :-)

சொல்லப் போனா, நாம எல்லாருமே கூட இந்தப் பாட்டை மிக எளிதாகப் பாடலாம்!
கர்நாடக இசைப் பயிற்சி எல்லாம் ஸ்பெஷலாக ஒண்ணும் தேவையில்லை இதைப் பாட!
அது தான் இந்தப் பாட்டின் சிறப்பு! பாட்டின் எளிமை!

இதை இசைப் பயிற்சியின் போது, மாணவர்களுக்கு துவக்க நிலைப் பாடமாகக் கூட வைக்கலாம்! அப்படி ஒரு எளிமையான சுவை! எங்கே...Hum பண்ணுங்க, இப்போ!


கற்பகத் தாய்!

ஏழிசை மன்னர், TMS பாடுவது = இங்கே!
குன்னக்குடி, அதே பாட்டை = வயலினில் தருவது இங்கே

ஆனா, அதே பாடலை, நாதசுரத்தில் வாசிக்கறாங்க! (Not to Miss!)
------------

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!
(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!

(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!

(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!

(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!

(கற்பக வல்லி)


மயிலாய் மாறி, "அவரே" எனத் தவம் கிடக்கும் "கற்பகம்"

வரிகள்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்
குரல்: TM சௌந்தரராஜன்
ராகம்: ராகமலிகை
தாளம்: ஆதி

23 comments:

  1. ரவி!

    இந்தப்பாடல் பிறந்த கதையை வீரமணிஐயர் நேரே சொல்லக்கேட்டிருந்தேன். அதில் குறிப்பான ஒருவிடயம், குருபற்றியதென்றும் சொல்லலாம்.

    "மைலைக்கபாலீஸ்வரர் கோவில் திருக்குளத்தின் படிகளில் இருந்து தான் எழுதிய பாடலை, தன்குருநாதருக்குப் பாடிக்காட்டிய போது, சிற்பம் நிறைந்த சிங்காரக்கோவில் கொண்ட என்றவரிகளில் , சிற்பம்நிறைந்த உயர் சிங்காரக்கோவில் கொண்ட என மாற்றம் செய்ததாகவும், அந்த மாற்றம் தன்னை, பாடலைப்பாடி டிஎம்எஸை, குன்னக்குடியை, என எல்லோரையும் உயர்த்திவைத்ததாக " வும் சொல்லிப் பெருமையுறுவார்.
    தனது எல்லா நூல்களையும் மைலைக்கபாலீஸ்வரர் சந்நிதியில் வைத்து வழிபாடு செய்த பின்பே, வெளியிடும் வழக்கமும் வைத்திருந்தார்.
    பதிவுக்கும் இணைப்புக்கும் நன்றி.

    ReplyDelete
  2. //மலைநாடான் said...
    சிற்பம்நிறைந்த உயர் சிங்காரக்கோவில் கொண்ட என மாற்றம் செய்ததாகவும், அந்த மாற்றம் எல்லோரையும் உயர்த்திவைத்ததாக " வும்//

    ஆகா...என்னவொரு சிந்தனை!
    இது போல் பல நேரங்களில் அமைந்து விடுகிறது மலைநாடான் ஐயா.
    "உயர்" சிங்காரக் கோவில் கொண்ட அந்தச் சொல்லுக்கு இத்தனை மதிப்பு ஆகி விட்டது. ஞான குருக்களின் சொல் பலிதம் எப்படி எல்லாம் அமையுது பாருங்க!

    ReplyDelete
  3. ரவி!
    அருமையான பாடல்; ஈழத்துக்குப் பெருமை சேர்த்த பாடல்; ஈழத்தின் சாகித்திய வேந்தர் வீரமணி ஐயாவின் புகழை தமிழர் எண்ணமெங்கும் ஓங்கச் செய்த பாடல்; இதில் நாகேஸ்வரி என்பது எங்கள்
    ஈழத்தில் நயினாதீவில் எழுந்தருளும் நாகபூசணி அம்மனைக் குறிப்பது.
    இயலும் இசையும் குரலும் ஒருங்கே நிறைந்த பாடல். என்றும் கேட்கலாம்.
    "தஞ்சமென அடைந்தேன்; தாயே உன் சேய் நான்"....எனக்கு மிகப் பிடித்த அடி. சரணாகதியின் உச்சம்.
    இப்பாடலின் ரி எம் எஸ் சுட்டி... மலைநாடரிடம் இருக்கலாம்.

    ReplyDelete
  4. நல்ல பாடல். வரிகளோடு தந்ததிற்கு நன்றி.

    ReplyDelete
  5. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ஈழத்தின் சாகித்திய வேந்தர் வீரமணி ஐயாவின் புகழை தமிழர் எண்ணமெங்கும் ஓங்கச் செய்த பாடல்;//

    உண்மை தான் யோகன் அண்ணா.
    சாகித்ய வேந்தரால் ஈழத்துக்கே பெருமை.
    ப்ரம்மஸ்ரீ என்று வெகு சிலரைத் தான் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள். வீரமணி ஐயாவும் அதில் ஒருவர் அல்லவா?

    //நாகேஸ்வரி என்பது எங்கள்
    ஈழத்தில் நயினாதீவில் எழுந்தருளும் நாகபூசணி அம்மனைக் குறிப்பது//

    ஆகா..நாக தீபம் என்ற ஒரு தீவில் உள்ள கோவில் தானே யோகன் அண்ணா? பெளத்தர்களும் அந்தக் கோவிலுக்கு வருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்!
    இங்கு கனடா ஸ்கார்ஸ்பரோவிலும் நாகபூசணி அம்மனுக்குக் கோவில் உள்ளது!

    //"தஞ்சமென அடைந்தேன்; தாயே உன் சேய் நான்"....எனக்கு மிகப் பிடித்த அடி. சரணாகதியின் உச்சம்//

    கெஞ்சுகிறேன் அம்மா...என்ற அடுத்த அடி எனக்கு மிகவும் பிடிக்கும், யோகன் அண்ணா. இப்படிக் கேட்ட பின் அவளால் மாட்டேன் என்று சொல்லத் தான் முடியுமோ? :-)

    ReplyDelete
  6. ரவி,
    ஆகா, எனக்கும் மிகவும பிடித்த பாடல் இது. ஆனால் இவ்வளவு நாள் இவ்வளவு உள்குத்து (ராகத்தை)வச்சு பாடின விஷயம் தெரியாமப்போச்சே..அந்த அளவுக்கு அறிவிலி..

    ஹம் என்ன கூடவே பாடிட்டாப்போச்சு... ;-)

    ReplyDelete
  7. ரவி,

    யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் எழுதிய பல பாடல்கள் புத்தகங்களாக லண்டன் பாரதீய வித்யா பவனில் கர்நாடக சங்கீத ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி சிவசக்தி சிவநேசன் அவர்களது முயற்சியால் வெளியிடப்பட்டுள்ளன. நிறைய நல்ல பாடல்களை வீரமணி ஐயர் இயற்றியிருக்கிறார். இதுவரை நான்கு புத்தகங்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறையப் பாடல்கள் வெளியிடப்படாமல் இருக்கின்றனவாம்!

    வீரமணி ஐயர் இயற்றிய பாடல்கள் எல்லாவற்றிலுமே மிகப் பிரபலமானது இந்தப் பாடல்தான். மகாராஜபுரம் ராமச்சந்திரன் லண்டனில் கச்சேரிகள் செய்கிறபோது மறக்காமல் ஒன்று, இரண்டு வீரமணி ஐயர் பாடல்களையும் பாடுவார். அவர் 2000ம் ஆண்டு லண்டனில் பாடிய கச்சேரியிலிருந்து சில பாடல்களை வேதாகம சபா என்ற நிறுவனம் குறுந்தட்டாக வெளியிட்டது. அதில் வீரமணி ஐயர் இயற்றிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன: ஒன்று என் முகம் பாரய்யா, மற்றையது என்னடி பேச்சிருக்குது. இரண்டும் நல்லூர் முருகன் மேல் பாடப்பட்டவை.

    வைசா

    வைசா

    ReplyDelete
  8. //இலவசக்கொத்தனார் said...
    நல்ல பாடல். வரிகளோடு தந்ததிற்கு நன்றி//

    நன்றி கொத்ஸ். இந்தப் பாட்டை உங்களைப் பாடச் சொல்லி ஒரு நாள் இல்லை ஒரு நாள் கேட்கணும்! :-)

    ReplyDelete
  9. //Sathia said...
    ஆனால் இவ்வளவு நாள் இவ்வளவு உள்குத்து (ராகத்தை)வச்சு பாடின விஷயம் தெரியாமப்போச்சே....//

    வாங்க Sathia.
    அடடா, பாட்டில் கூட உள்குத்து இருப்பதைக் கரெக்டா கண்டு புடிக்கிறீங்களே!
    உள்குத்து ராகம்! பேரே நல்லா இருக்கு கேட்கறதுக்கு! இனிமே இதுலேயே பாட பயிற்சி எடுத்துக்கணும் :-)

    ReplyDelete
  10. //வைசா said...
    நிறைய நல்ல பாடல்களை வீரமணி ஐயர் இயற்றியிருக்கிறார். இதுவரை நான்கு புத்தகங்கள் வெளிவந்து விட்டன.//

    வாங்க வைசா
    நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினீர்கள்! அடுத்த முறை சென்னை செல்லும் போது BVBவில் வாங்க வேண்டும்.

    அதே போல், 72 மேள கர்த்தா ராகங்களுக்கும் மகா வைத்யநாத சிவன் என்பவரின் வடமொழிக் கீர்த்தனைகள் உண்டு.
    அதைப் போலவே நம் வீரமணி ஐயாவும் அத்தனையும் தமிழ்க் கீர்த்தனைகளாகச் செய்துள்ளார்...பாட்டாகக் கிடைக்காவிட்டாலும்...வரி வடிவத்தில் கிடைத்தால் கூட வாங்க ஆசை. தேட வேண்டும்!

    //மகாராஜபுரம் ராமச்சந்திரன் லண்டனில் கச்சேரிகள் செய்கிறபோது மறக்காமல் ஒன்று, இரண்டு வீரமணி ஐயர் பாடல்களையும் பாடுவார்//

    அவருக்குத் தான் எக்கச்சக்க விசிறிகள் ஆயிற்றே...வித்வான்கள் இடத்திலேயே! :-)

    //என் முகம் பாரய்யா
    ...நல்லூர் முருகன் மேல் பாடப்பட்டவை//

    இந்தப் பாடலை முருகன் அருள் வலைப்பூவில் இட முயற்சி செய்கிறேன் வைசா...
    தங்களின் அருமையான தகவல்களுக்கு நன்றி!



    வைசா

    ReplyDelete
  11. எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று. ஆனால் நான் என்னுடைய சொந்த ராகத்தில் அத்தனையும் பாடி முடித்துவிடுவேன். அதற்கெல்லாம் ஒரு கலை வேண்டும், நான் அதில் சுமார் தான். அருமையான பாடலை புரியவைத்ததிற்கு என் நன்றி திரு KRS.

    ReplyDelete
  12. //அன்புத்தோழி said...
    ஆனால் நான் என்னுடைய சொந்த ராகத்தில் அத்தனையும் பாடி முடித்துவிடுவேன். அதற்கெல்லாம் ஒரு கலை வேண்டும்//

    வாங்க அன்புத்தோழி.
    சொந்த ராகத்தில் பாடினாலும் பரவாயில்லை!
    சொந்தமாக்கிக் கொள்கிறோமா என்பது தானே முக்கியம்.

    உங்கள் ஈடுபாடு ஒன்றே போதும் அல்லவா கற்பகவல்லிக்கு!

    ReplyDelete
  13. முதலில் டி.எம்.எஸ். பாடல் என்ற முறையில் தான் இந்தப் பாடல் அறிமுகம் ஆனது. ஒவ்வொரு சரணத்தையும் ஒவ்வொரு விதமாகப் பாடுவதைக் கண்டும் ஆனந்த பைரவி, கல்யாணி போன்ற சொற்களைக் கொண்டும் இது இராகமாலிகை என்ற புரிதல் அப்போது வந்திருந்தது. கல்லூரி நாட்களில் இந்தப் பாடலைப் பாடினால் சுற்றி அமர்ந்து கேட்பார்கள். இன்று பாட முயன்றேன். மூச்சு விடாமல் பாட முடியவில்லை. வயதாகிவிட்டது போல. :-(

    ஒவ்வொரு வரியிலும் மனம் அமிழ்ந்து போகும். நற்கதி அருள்வாய் அம்மா என்னும் போதும், நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ என்னும் போதும், ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள என்னும் போதும், எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்னும் போதும், உமா உனை நம்பினேன் அம்மா என்னும் போதும், நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் என்னும் போதும், அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே என்னும் போதும், தஞ்சம் என்றே அடைந்தேன் தாயே உன் சேய் நான் என்னும் போதும் ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா என்னும் போதும், அப்பப்பா.

    ReplyDelete
  14. டி எம் எஸ் பாடிய சுட்டி உள்ளதா.
    அறிய ஆவல்,
    ரா. ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  15. Hi,

    Just happened to see this blog recently and am very much impressed and my best wishes for your nice job.I do have this song sung by the great TMS in MP3 formet and kindly help me how to upload this song.

    ReplyDelete
  16. இந்த இணைப்பில் இருந்து டி எம் எஸ்
    அவர்களின் பாடலைப்பெறலாம். இணையிறக்கம் செய்வதற்கு cooltoad.com தளத்தில் ஒருமுறை பதிவு செய்யவேண்டியது அவசியம்

    http://music.cooltoad.com/music/download.php?id=387460

    ReplyDelete
  17. I am indeed happy to see this blog about KARPAGAVALLI Nin song by great TMS. I used to sing this song to keep my son to sleep when he was 6 month to 1 year old... every word - every sentence was sung by TMS with great devotion-appreciation-gratitude-surrender and faithful prayer, we tamils are greatly blessed to listen and enjoy these types of several hundred songs.

    shanmugam new york

    ReplyDelete
  18. I am indeed happy to see this blog about KARPAGAVALLI Nin song by great TMS. I used to sing this song to keep my son to sleep when he was 6 month to 1 year old... every word - every sentence was sung by TMS with great devotion-appreciation-gratitude-surrender and faithful prayer, we tamils are greatly blessed to listen and enjoy these types of several hundred songs.

    shanmugam new york

    ReplyDelete
  19. காலத்தால் அழியாத கற்பகவல்லி கானம்.அருள் கொண்ட கவிஞர்களை காலம் பாடவைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது. திறமையும்,புலமையும் இதைச் செய்துவிடுவதில்லை.இறைமையே இதை நடத்திக் கொள்கிறது. மா.கி

    ReplyDelete
  20. தமிழுக்கும் எங்கள் கற்பகதாய்க்கும் தம் பக்தி மணம்கமழுழம் பாக்களால் பெருமை தேடி தந்த திரு வீரமணி அய்யா அவர்களுக்கு எமது விளக்கங்கள்.இதனை பதி விட்டதன் மூலம் உங்களுக்கும் நன்றி.அய்யா அவர்களின் சந்ததிகளும் எல்லா வளமும் பெற்று உள்ள வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  21. எமது வாழ்த்துக்கள்
    பெற்று உய்ய

    ReplyDelete
  22. மனதை நெகிழ வைக்கும் பக்திப்பாடல்.

    ReplyDelete