Saturday, September 19, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8

1&2 3,4 & 5

இன்று அடுத்து மூன்று நாயகியரின் தரிசனம்! அடுத்தடுத்து இடுவதன் காரணம், அனைவரும் சீக்கிரமே முழு மாலையயும் அன்னைக்கு அணிவித்து மகிழவே!

6. காத்யாயனி மாதா:

மாயாவுலகினில் மக்களைக் காத்திட மகிழ்வுடன் அருளிடும் மலைமகளே

ஓயாவுலகினில் நீயே இரங்கி மகளாய்ப் பிறந்திட வந்தவளே

தாயே தனக்கு மகளாய் வந்திடத் தவம்புரிந்தவர்க்கு அருளியவளே

காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே!

காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே

வாளும் கமலமும் இடக்கரம் தாங்கி சிம்மத்தில் அமர்ந்திடும் சூலியளே

அபயமும் அருளும் வலக்கரம் தாங்கி மூவரும் போற்றப்போர் புரிந்தவளே!

நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்! [6]



7. காலராத்ரி மாதா:


கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே

தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே

கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே

விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!

காலராத்ரியெனும் பெயரினைக் கொண்டு காலத்தை வென்றிட்ட மாயவளே

முட்கதை, கத்தியை இடக்கைகள் கொண்டு அருளும் அபயமும் அளிப்பவளே

வெளிவிடும் மூச்சினில் தீச்சுவாலையுடன் கழுதையில் வலம்வரும் முக்கண்ணளே

நவநாயகியரில் ஏழாம்நாளின்று மஹாகாலராத்ரி தாள் பணிந்தேன்! [7]



8. மஹாகௌரி மாதா:


சிவனைச்சேர்ந்திடச் சீரியதவம்செய்து ஊசிமுனையினில் நின்றவளே

தவத்தினில் மகிழ்ந்திட்ட சிவனைக் கண்டு களிப்புடன் சென்றே அணைத்தவளே

சிவனே நடுங்கிடும் கரியவுருவினை மேனியில்கொண்டு எழுந்தவளே

கங்கையின் புனிதம் கருநிறம்கரைத்திட பூரணவொளியான துர்க்கையளே!

எருதுமேலமர்ந்து சூலம் டமரு கைகளிலேந்தி வெண்ணிற ஆடை உடுத்தவளே

என்றுமிளமையாய் எட்டுவயதினளாய் இன்னல்கள் தீர்த்திடும் தூயவளே

அசுரரை அழித்திட அனைவர்க்கும் அருளிய அஷ்டமஹாதேவி துர்க்கையளே

நவநாயகியரில் எட்டாம்நாளின்று மஹாகௌரிமாதா தாள் பணிந்தேன்! [8]


***********************

[நவநாயகியர் உலா நாளை நிறைவுறும்!]

ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

17 comments:

  1. இந்திய நேரப்படி அதிகாலையில் ஆன்மிகச் சிந்தனையை மேம்படுத்தும் உங்கள் பதிவுகள்
    அனைத்தும் நன்றாக உள்ளன. இன்றைக்கு தேவையானது இறையுணர்வுதான். மனிதனின் அத்தனை பிரச்சினைகளுக்கும் அதுதான் தீர்வு. சோர்ந்து படுத்துக் கிடப்பவனை எழுந்து நிற்கச் செய்ய இறையணர்வால் மட்டுமே முடியும். நன்றி!

    ReplyDelete
  2. இந்த காத்யாயணி தேவி விரதத்தைத் தானே மழை வேண்டி கோகுலவாசிகள் கொண்டாடினார்கள்?

    ஓம் காத்யாயின்யாய வித்மஹே
    கந்யகுமார்ய ச தீமஹி
    தந்நோ துர்கே ப்ரசோதயாத்

    ReplyDelete
  3. //இந்திய நேரப்படி அதிகாலையில் ஆன்மிகச் சிந்தனையை மேம்படுத்தும் உங்கள் பதிவுகள்
    அனைத்தும் நன்றாக உள்ளன. இன்றைக்கு தேவையானது இறையுணர்வுதான். மனிதனின் அத்தனை பிரச்சினைகளுக்கும் அதுதான் தீர்வு. சோர்ந்து படுத்துக் கிடப்பவனை எழுந்து நிற்கச் செய்ய இறையணர்வால் மட்டுமே முடியும். நன்றி!//

    எப்போதும் கூடவே இறையை வைத்திருந்தால் மனதுக்கு இதமாக இருக்கிறது ஆசானே! மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  4. //இந்த காத்யாயணி தேவி விரதத்தைத் தானே மழை வேண்டி கோகுலவாசிகள் கொண்டாடினார்கள்? //

    எனது குலதெய்வமும் காத்தாயி அம்மன் என்னும் காத்யாயனி தேவிதான் குமரன்!

    என்றும் என்னுடன் கூடவே வருபவளும் இவளே! இவளது இன்னொரு அம்சம் ஸ்கந்தமாதா என்பதும் கூடுதல் மகிழ்ச்சி!

    அன்னையின் அருள் வேண்டிப் பாடுவோம்!
    நன்றி!

    ReplyDelete
  5. ////எப்போதும் கூடவே இறையை வைத்திருந்தால் மனதுக்கு இதமாக இருக்கிறது ஆசானே! மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.////
    இதை ஒரு ஆன்மிகச் சிந்தனையாளர் இப்படிச் சொன்னார்:

    "When God is with us, who can be against us!"

    ReplyDelete
  6. //இதை ஒரு ஆன்மிகச் சிந்தனையாளர் இப்படிச் சொன்னார்:

    "When God is with us, who can be against us!"//

    சத்தியமான வார்த்தை ஆசானே!
    கற்றதும் பெற்றதும்!:))

    ReplyDelete
  7. //கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே

    தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே

    கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே

    விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!//

    "பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
    உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
    வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி"
    என்ற அபிராமி அந்தாதி பாடலை நினைவுபடுத்துகிறது. நன்றி !
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
    துர்க்கா தேவி சரணம் !!

    ReplyDelete
  8. //"பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
    உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
    வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி"
    என்ற அபிராமி அந்தாதி பாடலை நினைவுபடுத்துகிறது. நன்றி !
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
    துர்க்கா தேவி சரணம் !!//

    மிக அருமையான பாடலை இங்களித்து இப்பதிவிற்கு மேலும் சிறப்பூட்டியமைக்கு நன்றி! ஜெய் தேவி துர்கா!

    ReplyDelete
  9. காளி பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! நன்றி அண்ணா.

    ReplyDelete
  10. //காளி பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! நன்றி அண்ணா.//

    நன்றி கவிநயா! .

    ReplyDelete
  11. Thank you sankar.Enrum ilamaiyai, ettu vayathinalai---what is the meaning?
    love
    Balakka

    ReplyDelete
  12. //Thank you sankar.Enrum ilamaiyai, ettu vayathinalai---what is the meaning?//

    That she is always in youth form and is worshipped as a eight year old young girl!

    Thanks akka!

    ReplyDelete
  13. http://www.youtube.com/watch?v=6whoppn0WYk

    bhakthi paravasam aanen.
    subbu thatha

    ReplyDelete
  14. //நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்//

    காத்யாயினி மகா மாயே
    மகா யோகின்யே தீஸ்வரி
    நந்தகோப சுதம் தேவீ
    பதிம் மே குரு தே நமஹ!

    ReplyDelete
  15. ...அப்படின்னு தோழி கோதை பாவை நோன்பில் சொன்ன மந்திரம்...காத்யாயினி பற்றியதே!

    காத்யாயினி அம்மனைப் பச்சைப் பட்டுப் புடைவையில் மடிப்பு போல் செஞ்சிப் பிடித்து வைத்து, காதோலை கருகமணி சார்த்தி,
    அதன் மடியில் தாம்பூலத்தோடு கூட நோன்புக் கயிறும், குங்குமமும், குட்டிப் பனையோலை விசிறியும் கண்ணாடியும் (உக்கமும் தட்டொளியும்) வைத்து, இன்றும் பூவாடைக்காரியாக வழிவழியாக வீட்டில் வழிபடுவாங்க! அம்மா புடைவையை விசிறி மடிப்பு போல் சுருட்டி, காத்தாயி (காத்யாயினி) வைக்கும் அழகே அழகு!

    ReplyDelete
  16. //காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே//
    //நந்தகோப சுதம் தேவீ//

    SK ஐயா, ஒரு கேள்வி!
    இந்த தேவி அம்சம் காத்யாயனர் மகளா? நந்தகோபர் மகளா?
    காத்யா+அயணம் என்றால் என்ன?
    நாரா+அயணம் போலவே இருக்கே!

    //காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே//

    மகிஷனைக் கொன்றது சாமுண்டீஸ்வரி-ன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்!
    மகிஷ வதத்தில் காத்யாயனியும் உண்டா?

    ReplyDelete
  17. காலராத்ரி, கலாதீதா, கவிராஜ மனோகரி என்பதெல்லாம் இவளே. அருமை டாக்டர் சார்.

    ReplyDelete