Thursday, August 4, 2011
ஆ.வெ.3: ஸ்ரீ மீனாக்ஷி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி 1
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40
ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60
ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80
ஓம் பவள வாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90
ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108
***
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ் அர்ச்சனைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமீனாள் இந்த அர்ச்சனைக்கு அப்பறம் தான் அழகா இருக்கிறாள்!:))
அங்கயற்கண்ணியை என் கண்முன் தோன்றவைத்த '108 போற்றி'க்கு நன்றி!
ReplyDeleteமீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் திருமுன்னில் (சந்நிதியில்) பெரிய பலகையில் இந்த அகர முதல போற்றியை எழுதி வைத்திருந்தார்கள். சின்ன வயதில் கூட்டம் அவ்வளவாக இல்லாத பொழுதுகளில் இவற்றைச் சொல்லி அன்னையை வணங்குவேன்.
ReplyDeleteஇப்படி தமிழில் ஒரு அகர முதல அருச்சனை சொக்கநாதருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐயன் திருமுன்னில் (சுவாமி சன்னிதி) வடமொழி அட்டோத்திரம் தான் இருந்த நினைவு. அங்கு தான் சிவாஷ்டோத்ரத்தைப் படித்துக் கற்றுக் கொண்டேன்.
//மீனாள் இந்த அர்ச்சனைக்கு அப்பறம் தான் அழகா இருக்கிறாள்!:))//
ReplyDeleteஹாஹா :) (அந்த) மீனாள் எப்பவுமே அழகுதான்! :)
வருகைக்கு நன்றி கண்ணா.
//அங்கயற்கண்ணியை என் கண்முன் தோன்றவைத்த '108 போற்றி'க்கு நன்றி!//
ReplyDeleteநன்றி லலிதாம்மா!
//மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் திருமுன்னில் (சந்நிதியில்) பெரிய பலகையில் இந்த அகர முதல போற்றியை எழுதி வைத்திருந்தார்கள்.//
ReplyDeleteஅங்கே கிடைக்கிற 'அருள் வழி துதிகள்' புத்தகத்திலிருந்துதான் தட்டச்சினேன். உங்ககிட்டயும் இருக்குன்னு சொன்னீங்களே!
//சின்ன வயதில் கூட்டம் அவ்வளவாக இல்லாத பொழுதுகளில் இவற்றைச் சொல்லி அன்னையை வணங்குவேன்.//
//இப்படி தமிழில் ஒரு அகர முதல அருச்சனை சொக்கநாதருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐயன் திருமுன்னில் (சுவாமி சன்னிதி) வடமொழி அட்டோத்திரம் தான் இருந்த நினைவு. அங்கு தான் சிவாஷ்டோத்ரத்தைப் படித்துக் கற்றுக் கொண்டேன்.//
நீங்க அப்பவே ரொம்ப சமர்த்து போல!
நன்றி குமரா.