Monday, August 15, 2011
என்ன ஆச்சு அம்மா?
சுப்பு தாத்தா அருமையாக புன்னாகவராளி ராகத்தில் பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்... நன்றி தாத்தா!
அம்மா இங்கே வாவா – என
வருந்தி வருந்தி அழைத்தேன்
அன்பு மீற அம்மா நீஎன்
அருகில் வர தவித்தேன்
உனக்கெனவே காத்திருக்கேன் தெரியவில்லையோ? – இல்லை
தெரிந்திருந்தும் இற/ர/ங்கி வர நேரமில்லையோ?
தேவர்களைக் காக்க வேறு யாரும் இல்லையோ? – அந்த
இந்திரனின் தொந்தரவு குறையவில்லையோ?
பரமசிவன் பார்வையிலே உன்னை மறந்தையோ? – இல்லை
பள்ளி கொண்டான் மாயத்திலே உலகை மறந்தையோ?
பழத்திற்கென வந்த சண்டை இன்னும் தொடருதோ? – அந்த
கலவரத்தைத் தீர்ப்பதிலே என்னை மறந்தையோ?
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
//பழத்திற்கென வந்த சண்டை இன்னும் தொடருதோ?/
ReplyDeleteஏய்...வழி வழி வழி...
முருகா, இந்த வாட்டி ஏமாந்துறாத! நான் இருக்கேன் உன் கூட! வெற்றி நமக்கே! :)
//அம்மா இங்கே வாவா//
இந்த மெட்டில் ஒரு பாட்டெழுதி அம்மன் பாட்டில் இடுங்க-க்கா!
அம்மா இங்கே வாவா
ReplyDeleteஆதி சிவனொடு வாவா
இன்பத் தமிழைத் தந்து
ஈகை சிரிப்பைச் சிந்து
உமையாள் உந்தன் பேராம்
ஊரில் கந்தன் தேராம்
என்றன் தாயும் நீதான்
ஏதும் இல்லாச் சேய்நான்
ஐயன் பங்கை வென்றாய்
ஒன்றாய் ஆகி நின்றாய்
ஓதும் அன்பர் அகமே
ஒளவியம் இல்லாச் சுகமே
அஃதே எனக்கு அருள்வாய்
அம்மா முன்னே வருவாய்!
சூப்பர் கண்ணா! நன்றி :)
ReplyDeleteதேவர்களைக் காக்க வேறு யாரும் இல்லையோ? – அந்த
ReplyDeleteஇந்திரனின் தொந்தரவு குறையவில்லையோ?
இந்திரனின் தொந்தரவுக்கு அதிகம் ஆட்பட்டவன் திருமால்தான். ஆனால் அன்னையும் அவனும் ஒன்றே இல்லையா..
அந்தப் படம் உள்ளம் கொள்ளை போகுது. ஒருவேளை பிள்ளையார் சொல்றதை உன்னிப்பாக் கேக்கறாங்க பார்’ நு படத்தை வடிவமைச்சாரோ.
எங்கே.. காரைக்குடி பக்கத்து சிற்பமோ?.
sweet song on my sweetest ammaa;
ReplyDeletenice to hear subbu sir's music!
groping fr wrds to describe my feelings on seeing the picture!!
//இந்திரனின் தொந்தரவுக்கு அதிகம் ஆட்பட்டவன் திருமால்தான். ஆனால் அன்னையும் அவனும் ஒன்றே இல்லையா..//
ReplyDeleteஆம். அதோடு, மஹிஷாசுரமர்த்தினி, லலிதாம்பிகை, இவங்களை நினைச்சு எழுதியது :)
//அந்தப் படம் உள்ளம் கொள்ளை போகுது. ஒருவேளை பிள்ளையார் சொல்றதை உன்னிப்பாக் கேக்கறாங்க பார்’ நு படத்தை வடிவமைச்சாரோ.
எங்கே.. காரைக்குடி பக்கத்து சிற்பமோ?.//
கோபுரத்தில் இருக்கும் சிற்பம் போல இருக்கு. கூகுளார்தான் தந்தார் :)
ரசனைக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி, திவாகர் ஜி!
//sweet song on my sweetest ammaa;//
ReplyDelete:) my line ammaa :)
//nice to hear subbu sir's music!//
ஆமாம், வெகு நாட்களுக்குப் பிறகு...
//groping fr wrds to describe my feelings on seeing the picture!!//
நன்றி லலிதாம்மா.
//பழத்திற்கென வந்த சண்டை இன்னும் தொடருதோ? – அந்த
ReplyDeleteகலவரத்தைத் தீர்ப்பதிலே என்னை மறந்தையோ?
//
:-)
வாங்க ராதா!
ReplyDelete