
அலை போல அலை கின்றேன் அம்மா
அலை போல அலை கின்றேன் அம்மா
கடல் போன்ற வாழ்விதிலே
கரை காணா மலே எங்கும்
அலை போல அலை கின்றேன் அம்மா
(அலை)
சிலை போல ஏன் நின்றாய் அம்மா?
சிலை போல ஏன் நின்றாய் அம்மா?
என் நிலை கண்டும் இரங்காமல்
மலை போல அசையாமல்
சிலை போல ஏன் நின்றாய் அம்மா?
(அலை)
மனக் குகைக்குள் நீயே கதிரென வர வேண்டும்
ஒளிக் குவையே நீயே ஒளியினைத் தர வேண்டும்
மலர்க் கொடியே உன்றன் மடியினில் விழ வேண்டும்
மனக் குறைகள் தீர மனம் விட்டு அழ வேண்டும்
(அலை)
--கவிநயா
என் நிலை கண்டும் இரங்காமல்
ReplyDeleteமலை போல அசையாமல்
சிலை போல ஏன் நின்றாய் அம்மா? //
அழ்கான அற்புதமான பாடல் பகிர்வுக்கு நன்றி.
"malarkkodiye!undran madiyinil vizhavendum ;
ReplyDeletemanakkuraigal theera manam vittu
azhavendum"
naanum repeat!
thaaye abiraami!vaayen enaiththookka!
மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி, லலிதாம்மா.
ReplyDelete