Monday, August 22, 2011

எத்தனை பிறவிகள் நானெடுத்தாலும்...



இதோ, சுப்பு தாத்தா அடானா ராகத்தில் மிகப் பொருத்தமாக அமைத்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!

எத்தனை பிறவிகள்
நானெடுத்தாலும்
இத்தரை மீதினில்
பரிதவித்தாலும்

சித்திரமே உன்னை
நினைந்திட வேணும்
நித்தமும் மலரடி
பணிந்திட வேணும்

உச்சி யிலே கங்கை
சூடி யவன் மங்கை
பிச்சி யென பித்தனுடன்
நர்த்தன மிடும் நங்கை

பச்சை நிற மேனி
இச் சகத்தின் ராணி
மச்ச விழி வேணி
மெச்சிட வரு வாய்நீ!

--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2011/06/chidambaram-temple-festival-2011-aani.html

4 comments:

  1. உச்சி யிலே கங்கை
    சூடி யவன் மங்கை
    பிச்சி யென பித்தனுடன்
    நர்த்தன மிடும் நங்கை


    அழகு

    ReplyDelete
  2. செங்கண்திருமாலின்

    தங்கையே!அபிராமி!

    எங்கெங்கும் மங்களம்

    பொங்க அருள்வாய் நீ!

    ReplyDelete
  3. வருக பூங்குழலி! நன்றி :)

    ReplyDelete
  4. வாங்க லலிதாம்மா!

    ReplyDelete