Friday, August 12, 2011
ஆடி வெள்ளி: அன்னபூர்ணாஷ்டகம்
ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்...
நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரி
நிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரி
ப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
பேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!
தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!
பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
நானாரத்ன விசித்திர பூஷணகரி ஹெமாம்பராடம்பரி
முக்தாஹார விலம்பமான விலசத்வக்ஷோஜா கும்பாந்தரி
காஷ்மீராகருவாசிதாங்கருசிரே காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி
பலவகை அணிகலன்கள் பூண்டகரத்தாளே!பொன்னாடை தரித்த தாயே!
தாய்மை பொங்கும் மார்பில் முத்துமாலையழகாய் நெளிந்திட மிளிரும் தூயே!
காஷ்மீரதூப மணம் கமழ்ந்திடத் திகழ்பவளே!காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
யோகானந்தகரி ரிபுக்ஷயகரி தர்மேகநிஷ்டாகரி
சந்த்ரார்காநலபாசமானலஹரி த்ரைலோக்யரக்ஷாகரி
சர்வைஸ்வர்யகரி தபஹ்பலஹரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
யோகசுகந்தருபவளே!பகைவரைப்பொடிப்பவளே!நன்னெறியில் நிறுத்துந்தாயே!
மதி,பரிதி,தீயொளிக்கு ஒப்பாய் ஒளிர்பவளே!மூவுலகுங்காக்குந்தேவி!
பொருள்வளம் அருள்பவளே!தவப்பயனைத் தருபவளே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே !அன்னபூரணீ அன்னையே!
கைலாசாச்சல கந்தராலயகரி கெளரி உமா சங்கரி
கௌமாரி நிகமார்த்த கோசரகரி ஓங்கார பீஜாக்ஷரி
மோக்ஷத்வாரகவாடபாடநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி
கயிலாய மலைக்குகையில் அமர்ந்தருள் பொழிந்திடும் கெளரி,உமா,சங்கரி!
என்றென்றும் குமரியே!மறைபொருளுரைப்பவளே!பிரணவத்தின் உண்மையுருவே!
மோக்ஷத்து வாயிலை திறக்குந்தயாபரி!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
த்ருஷ்யாத்ருஷ்யவிபூதிவாஹநகரி பிரம்மாண்டபாண்டோதரி
லீலாநாடகசூத்ரகேலநகரி விஞ்ஞானதீபாங்குரி
ஸ்ரீவிச்வேசமனஹ் பிரசாதநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
மண்ணுலகசுகம் யாவும் மகிழ்ந்தருளும் அன்னையே!பிரம்மாண்டம் தாங்குந்தாயே!
விளையாட்டாய் உலகையே இயக்கிடும் ஈஸ்வரி!விஞ்ஞான தீபச்சுடரே!
மகேசன்மனத்தினை மகிழ்விக்கும் மங்கையே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
ஆதிக்ஷாந்தசமஸ்தவர்ணநகரி சம்போஸ்த்ரிபாவாகரி
காஷ்மீரா த்ருபுரேச்வரி த்ரினயநீ விஷ்வேச்வரீ சர்வரி
ஸ்வர்கத்வாரகவாடபாடநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
அனைத்தெழுத்தும் அருளிய அன்னையே!அரனின் முத்தொழிலுக்கு ஆதாரமே!
குங்கும நெற்றியளே !மூவுலக நாயகியே!எங்கும் நிறை முக்கண்ணியே!
சுவர்க்கத்தின் வாயிலை திறக்குந்தயாபரி!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
உர்வீசர்வஜநேச்வரி ஜயகரி மாதா க்ருபாசாகரி
வேணிநீலசமானகுந்தலதரி நித்யான்னதாநேச்வரி
சாக்ஷான்மோக்ஷகரி சதா சுபகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
உலகாளும் உத்தமியே!வெற்றிதரும் உமையாளே!தாயன்பு தளும்புங்கடலே!
பின்னிய கார்குழலாளே!எந்நேரமும் உணவு அளித்துயிர் காக்குந்தாயே!
முக்தியளிப்பவளே!நலந்தரும் நாயகியே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
தேவி சர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரி
வாமாச்வாதுபயோதரா ப்ரியகரி சௌபாக்ய மாஹெச்வரி
பக்தாபீஷ்டகரி சதாசுபகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
அரிய ஆபரணங்கள் அணிந்த என் அன்னையே!தக்ஷன் பெற்ற பேரழகியே!
பரமனில் பாதியே!பேரெழில் ஜோதியே!குணக்குன்றே!குலவிளக்கே!
அடியார்க்கருள்பவளே!நலந்தரும் நாயகியே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
சந்த்ரார்காநலகோடிகோடிசத்ருஷி சந்த்ரான்ஷுபிம்பாதரி
சந்த்ரார்காக்னிசமானகுண்டலதரி சந்த்ரார்கவர்னேஸ்வரி
மாலாபுஸ்தக பாஷசாங்குசதரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
பலகோடி பரிதி,மதி,தீபோல ஒளிர்பவளே!கொவ்வையோ உன்னிதழ்களே?
பானு,மதி போல மின்னும் குண்டலச்செவியாளே!ஈடிணையற்ற எழிலே!
மாலையுடன் புத்தகம்,பாசாங்குசமேந்தி காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
க்ஷத்ரத்ராணகரி மகாபயகரி மாதா க்ருபாசாகரி
சர்வானந்தகரி சதா சிவகரி விச்வேச்வரி ஸ்ரீதரி
தக்ஷாக்ரந்தகரி நிராமயகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
ஆதரவு அற்றோர்க்கு அடைக்கலம் அளித்திடும் அன்னையே!அன்புக்கடலே!
யாவர்க்குமின்பமீந்து நலங்காக்கும் நாயகியே!வளவாழ்வு அருளுந்தாயே!
தக்ஷன்திமிர் தணித்தவளே! துயர் தீர்க்கும் அருமருந்தே! காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராணவல்லபே
ஞானவைராக்யசித்யர்த்தம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி
உணவூட்டும் அன்னையே! உமையே!பேருண்மையே!
நஞ்சுண்டான் உள்ளத்துயிரே!
பிச்சையாய் ஞானமும்,பற்றற்றமனமும் தா!
இமவானின் இனிய மகளே!
மாத ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா:ஷிவபக்தாஸ்ச ச்வதேஷோ புவனத்ரயம்
மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
அரனடியாரே எனக்குற்றார்;மூவுலகும் என் தாய்நாடு!
Subscribe to:
Post Comments (Atom)
//மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
ReplyDeleteஅரனடியாரே எனக்குற்றார்//
ithu ondre sathyam
subbu thatha
சிவபெருமானே தந்தை, அன்னை பார்வதியே தாய் இருவரும் அனைவருக்கும் நன்மையை அருளட்டும்.
ReplyDeleteஓம் நமசிவாய ஓம் நமசிவாய
subbusir,
ReplyDeletethanks fr visit yr feedback
kailashi,
ReplyDeletethanks fr yr visit.
aum nama:shivaaya!
aum nama:shivaya!
//மாத ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வரஹ//
ReplyDeleteமலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
//பாந்தவா:ஷிவபக்தாஸ்ச ச்வதேஷோ புவனத்ரயம்//
அரனடியாரே எனக்குற்றார்;மூவுலகும் என் தாய்நாடு!
அருமையான ஆக்கமா வந்திருக்கு லலிதாம்மா!
என்ன உணவைப் பிட்சையாக் கேக்குறாரு?
ReplyDeleteஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி
ஞானமும்,பற்றற்றமனமும் தா!
இமவானின் இனிய மகளே!
ஆதி சங்கரன் கவிதை-ன்னாலே ஒரு தனி மதிப்பு தான்!
//பாந்தவா:ஷிவபக்தாஸ்ச//
வடமொழியில் சிவம்-ஆ? ஷிவம்-ஆ?
தமிழ் மொழியில் வாசிக்க மிக இனிமையாக இருக்கிறது அம்மா.
ReplyDeleteகாசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு(ம்) நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
அன்னையின், அத்தனின், திருவடிகள் சரணம்.
@கவிநயா,
ReplyDeleteஒரு [சின்ன சின்ன] பேராசை!யாரவது இதை நம் எம் எஸ் மாதிரி பாடினா?!எப்படி என் கற்பனை?
கே ஆர் எஸ்,
ReplyDeleteशि என்ற எழுத்தை [ உச்சரிப்புக்காக] தமிழில் ஷி என்று எழுதினேன்;தவறெனத் தோன்றினால் ,மௌலி,சுப்பு சார் போன்றவர்களைக்கேட்டுத் திருத்தலாம். ஓ கே?
"ஞான வைராக்ய சித்யர்த்தம்"
முடிவில் சங்கரர் கேட்கும் இந்தப் பிச்சைதான் எனக்கு மிக முக்கியமாத் தோணறது;
இந்தவேண்டுகோளின் பின்னணி(c.c.m trust book "SANKARA THE MISSIONARY") :---
சங்கரர் இளம் வயதில் முதன்முறை காசி சென்றபோது,பிக்ஷை கிடைக்காமல் பசியால் துடித்தபடி அன்னபூரணி முன் நின்றதும் மணிப்ரவாளமாய் இந்ததுதி பாடினாராம்; பரவச மிகுதியில் வயிற்றுப்பசி மறந்துவிட,பிச்சையாக ஞானமும்.வைராக்யமும்
வேண்டுமென்று பாடியதாகக் கதை!
விவேகானந்தரும் தன் வீட்டுக் கஷ்டங்களைப்போக்குமாறு காளியை வேண்டச்சென்றவர் காளியைத்தரிசித்ததும் வீட்டைப்பற்றி மறந்தவராய் ஞானத்தைத்தான் யாசித்தாராம்!
// शि என்ற எழுத்தை [ உச்சரிப்புக்காக] தமிழில் ஷி என்று எழுதினேன்;தவறெனத் தோன்றினால் ,மௌலி,சுப்பு சார் போன்றவர்களைக்கேட்டுத் திருத்தலாம். ஓ கே?//
ReplyDeleteस श ष இந்த² மூன்று எழுத்²து²க்களின் உச்'ச'ரிப்பிலும் ச' இல்லை. எனினும் பொது²வாக,
சி'வம் என்னும் சொ'ல்லை தே²வனாகரி யில் எழுது²ம்பொழுது²
शिवम् என எழுதலாம்.
ச' எனும் எழுத்துக்கு ச'ரியான தேவனாகரி எழுத்து श இல்லை.
எனினும் சி'வம் என்று சொ'ல்லும்பொழுது शिवम् தான் எனத்² தெரிகிறது².
அது சரி!!!. மொழியில் அல்லது² எழுத்துக்களில் என்ன இருக்கிறது² !!
என்ன சொ'ல்லப்படுகிறதோ அதுதானே முக்கியம் !!
சிவனை அறிந்தவனுக்கு அது சி' யாக இருந்தால் என்ன ஷி யாக இருந்தா²ல் என்ன? 'சி'வானுபவம் தானே முக்கியம் !!!
நஹி நஹி ரக்ஷ்தி டுக்ரங்கரணே !!
சுப்பு ரத்தினம்.
//சிவனை அறிந்தவனுக்கு அது சி' யாக இருந்தால் என்ன ஷி யாக இருந்தா²ல் என்ன? 'சி'வானுபவம் தானே முக்கியம் !!!//
ReplyDeleteஅது என்னமோ சரி தான்!
அறிந்தவர்களுக்குச் சரி! ஆனால் அறியாதவர்களுக்கு, அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு...எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஐயம் வரலாம் அல்லவா? அப்படி வந்த ஐயம்! :)
'ஷி'வம் என்பதே சரியான உச்சரிப்பு என்று தெளிவு படுத்தியமைக்கு நன்றி சூரி சார்!
//மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
ReplyDeleteஅரனடியாரே எனக்குற்றார்;மூவுலகும் என் தாய்நாடு! //
அற்புதம். மிகவும் பிடித்த வரிகள்.
சுப்புசார்,
ReplyDeleteஐயம் நீக்கி உதவியதற்கு நன்றி!
@கே ஆர் எஸ்,
@ராதா,
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி!
அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள் அம்மா. இன்று தான் படிக்க முடிந்தது.
ReplyDeleteக்ஷத்ரத்ராணகரி என்னும் போது வீரர்களைக் காப்பவளே என்று பொருள் வரும் என்று நினைக்கிறேன்.
அன்னபூர்ணே சதாபூர்ணே சுலோகத்தையும், மாதா ச பார்வதி தேவி சுலோகத்தையும் சொல்லிவிட்டு பின்னர்
மாதா ச கமலா தேவி பிதா தேவோ ஜனார்த்தன:
பாந்தவா விஷ்ணு பக்தா:ச ச்வதேஷோ புவனத்ரயம்
என்ற சுலோகத்தையும் தினசரி காலை வழிபாட்டில் சொல்வது என் வழக்கம். எனது தாய்வழிப் பாட்டியின் தினசரி வழிபாட்டில் இருந்து கற்றுக் கொண்டவை இந்த சுலோகங்கள்.
குமரன்,
ReplyDeleteநான் படிக்கும் புத்தகத்தில் "க்ஷத்ரியரைப்போல்[வீரர்களைபோல்]தீனரைக் காப்பவள்"என்று பொருள்படும்படி அச்சொற்களை விளக்கி இருப்பதால்
ஓரளவு அப்பொருள் வெளிப்படுமாறு அவ்வரியை அமைத்தேன்.துதி வடிவத்தில் தமிழாக்கம் செய்யும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் சமமான தமிழ்ச்சொல் தருவது கடினம்;அதன் உட்பொருள் இயன்றவரை வெளிப்படுமாறு எழுதுவது தவறில்லை என்பது என் கருத்து.திருத்தம் தேவை என்று பட்டால் திருத்துவதற்கு முழு உரிமை உன்போன்ற தமிழன்பர்களுக்கு உண்டு;அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இதுபோல் இன்னும் சில சொற்களை நேரடி மொழிபெயர்ப்பின்றி,உட்பொருள் மட்டும் எதிரொலிக்கும் வகையில் இதே துதியில் எழுதிருக்கிறேன்;
உதாரணமாக:ஏழாவது பதத்தில் 'மாதா க்ருபாசாகரி' என்ற சொற்களுக்கு
'அன்னையே!கருணைக்கடலே!'என்று ஆக்கம் செய்யாமல் 'தாயன்பு தளும்பும் கடலே!'என்று எழுதி இருக்கிறேன்,ஏனென்றால் இப்படி எழுதுவதில் அன்னையின் அன்பு முழுவதுமாக வெளிப்படுவதுபோல் எனக்குப் படுகிறது.
கடைசி நான்கு வரிகளை நானும் மாலை விளக்கேற்றியதும் சொல்வது வழக்கம்;இந்தவரிகளின் பொருள் எனக்கு ரொம்பபிடிக்கும்.
ஆழ்ந்துபடித்து நீ அளித்த பின்னூட்டம் எனக்கு ரொம்ப உத்சாகம் அளிக்கிறது;நன்றி குமரன்!
உண்மை தான் அம்மா. உட்பொருள் ஓரளவிற்கு பொருந்துமாறும் உள்ள உணர்வுகளே ஓங்கி நிற்குமாறும் நிறைய இடங்களில் இருப்பதைக் கவனித்தேன்.
ReplyDeleteக்ஷத்ர த்ராணம் என்றால் வீரர்களைக் காத்தல் என்றே பொருள் வரும்; வீரர்களைப் போல் காத்தல் என்று பொருள் வராது; அதனால் அதனைக் குறிப்பிட்டு கேட்டேன். மற்றபடி தீனரைக் காப்பவள் என்பதே அவளுக்குப் பொருத்தமானது தானே!