சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்... மிக்க நன்றி தாத்தா!
வெள்ளைஉள்ளத் தாமரையில் வீணையுடன் வீற்றிருப்பாள்
சொல்லும்மொழி யாவையிலும் சுந்தரமாய் கொலுவிருப்பாள்
பள்ளந்தனைத் தேடிவரும் வெள்ளமதைப் போலவளும்
உள்ளம்நிறை அன்பு செய்தால் உவந்துடனே அருள்வாள்
நானிலத்தை ஆக்குகின்ற நான்முகனின் நாயகியாம்
நான்மறைக ளும்வணங்கும் ஞானவடி வானவளாம்
வானவரும் தானவரும் போற்றுகின்ற தேவியளாம்
காணவரும் அடியவரைப் பேணுகின்ற தாயவளாம்
--கவிநயா
''வெள்ளை உள்ளத்தாமரையில் வீணையுடன் வீற்றிருப்பாள் ''ஆரம்பமே அழகு!
ReplyDeleteமிக்க நன்றி லலிதாம்மா.
ReplyDelete