சுப்பு தாத்தா அழகுற அமைத்துத் தந்த பாடலை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!
ஆதி சக்தியவள்
ஆதி சக்தியவள்
அழகுப் பாதங்களை
அன்புடனே பணிவோம்
வேத நாயகியை
விஸ்வ ரூபிணியை
விநயமுடன் பணிவோம்
கோதகன்ற வெள்ளை
உள்ளம் உறைகின்ற
உமையவளைப் பணிவோம்
பேதமின்றி எங்கும்
அருளைப் பொழிகின்ற
பொன்மகளைப் பணிவோம்
நாத வடிவான
நங்கை நல்லாளை
நலமுடனே பணிவோம்
ஞான வடிவாக
ஞாலம் காப்பவளை
நேயம்மிகத் தொழுவோம்
--கவிநயா
ஆதிரையான் மேனியில் பாதியானவளைப்
ReplyDeleteபாடிப்பரவிடுவோம் ;
கீதையை அருளிய
மாதவன் சோதரி
பாதமலர் பணிவோம் .
தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஇன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.
subbu sir,
ReplyDeletepaattu soooopper!naane 'once more' sollittu,listened to the song second time!deepaavali vaazhththukkal!!
வாங்க லலிதாம்மா. சுப்பு தாத்தாகிட்ட தனிமடலில் நானும் அதேதான் சொன்னேன். ரொம்ப அருமையா அமைஞ்சிருக்கு பாட்டு.
ReplyDeleteவருகைக்கு நன்றி அம்மா.
சுப்பு தாத்தா, ராஜா, இருவரின் தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்கள் தீபாவளியும் சந்தோஷமாக கழிந்திருக்கும்னு நம்பறேன். (உங்க இலவச வெடியும் பார்த்தேன் ராஜா :) நன்றி.)
ReplyDeleteபாடல் உள்ளத்தைப் பரவசப் படுத்தி விட்டது
ReplyDeleteவாழ்த்துகள்
தந்த
தங்களுக்கும்,
தாத்தாவிற்கும்
//பாடல் உள்ளத்தைப் பரவசப் படுத்தி விட்டது
ReplyDeleteவாழ்த்துகள்
தந்த
தங்களுக்கும்,
தாத்தாவிற்கும்//
மிக்க நன்றி திகழ்!