படம்: கைலாஷி அவர்களின் வலையிலிருந்து... மிக்க நன்றி, கைலாஷி!
சுப்பு தாத்தா மோகனம் ராகத்தில் பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
அன்பைத் தருவாய் - அம்மா
அன்பைத் தருவாய் - நெஞ்சில்
அன்பைத் தருவாய் - உன்மேல்
அன்பைத் தருவாய்!
வாயுமைந்தன் நீலவண்ண
ராமன்மேலே வைத்ததுபோல்
வாடாத அன்பை உன்மேல்
வைக்கத் தருவாய்!
காட்டுக்குள்ளே கண்ணப்பர்தம்
சுவாமிமேலே வைத்ததுபோல்
கள்ளமில்லா அன்பை உன்மேல்
வைக்கத் தருவாய்!
ப்ரகலாதன் தந்தை சொல்லை
மீறித்திரு மாலின்மேலே
வைத்ததுபோல் பக்தி உன்மேல்
வைக்கத் தருவாய்!
அவனடியே கதியென்ற
சிவனடியான் மார்க்கண்டேயன்
போலே உன்னைச் சரணடைய
சொல்லித் தருவாய்!
சூடித்தந்த சுடர்க்கொடியாள்
கண்ணன் மேலே வைத்ததுபோல்
கரையில் லாதஅன்பை
உன்மேல் தருவாய்!
ஸ்ரீராம கிருஷ்ணரைப் போல்
அபிராமி பட்டரைப் போல்
அசையாத அன்பை உன்மேல்
அள்ளித் தருவாய்!
--கவிநயா
அன்புக்கடலே!அன்னையே!
ReplyDeleteஎன்னுள்ளே எழுந்தருளி
அன்புமயமாக்கி என்னை
ஆண்டருள்புரிவாய்!
வருகைக்கு நன்றி லலிதாம்மா. எப்படியோ பதில் எழுத விட்டுப் போச்சு, ஸாரிம்மா.
ReplyDeleteஅழகிய பெரிய முலையம்மன் ( ப்ரஹத் சுந்தர குசாம்பாள்) படத்துடன் பாடலும் அருமை.
ReplyDeleteஇன்னும் நவராத்திரி பதிவுகள் தொடர்கின்றன வந்து வேண்டும் படங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் கவிநயா.
//அழகிய பெரிய முலையம்மன் ( ப்ரஹத் சுந்தர குசாம்பாள்) படத்துடன் பாடலும் அருமை.
ReplyDeleteஇன்னும் நவராத்திரி பதிவுகள் தொடர்கின்றன வந்து வேண்டும் படங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் கவிநயா.//
வாசித்ததற்கும், படங்கள் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதிக்கும் மிகவும் நன்றி கைலாஷி!