Monday, October 10, 2011

அவள் அடியே இன்பம்!


அன்னையின் பதமலரை
அன்புடன் பற்றிக் கொள்வாய்
அவள் அடியே இன்பம்
அறிந்து நீ அமைதி கொள்வாய்

அவள் அடி பற்றிக் கொண்டால்
அல்லல்களும் அல்ல லுறும்
சொந்தமென அவளைக் கொண்டால்
சோதனைகள் ஓடி விடும்

அவள் நாமம் சொல்லச் சொல்ல
நெஞ்சம் செந்தா மரையாய் மலரும்
ஆசையுடன் அவள் வந்து
குடியிருக்கும் கோவில் ஆகும்

அவளைச் சரண் அடைந்தால்
அடைக் கலம் தந்திடுவாள்
பிறவிப் பிணி களைவாள்
பேரின்பம் நல்கிடுவாள்


--கவிநயா

10 comments:

  1. அவளது பதமலர்களிலே
    பெருகிவரும் கருணை காண்!
    தேன்வண்டாய் அதிலமர்ந்து
    பருகிடவா கருணைத்தேன்!!

    ReplyDelete
  2. அவள் நாமம் சொல்லச் சொல்ல
    நெஞ்சம் செந்தா மரையாய் மலரும்
    ஆசையுடன் அவள் வந்து
    குடியிருக்கும் கோவில் ஆகும்

    அவளைச் சரண் அடைந்தால்
    அடைக் கலம் தந்திடுவாள்
    பிறவிப் பிணி களைவாள்
    பேரின்பம் நல்கிடுவாள்/

    very nice..

    ReplyDelete
  3. கமலாம்பிகையின் அருள் சுரக்கும் படமும் பாடலும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. வாங்க லலிதாம்மா. அழகா சொன்னீங்க! நன்றி.

    ReplyDelete
  5. வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  6. ரசனைக்கு மிக்க நன்றி சந்திர வம்சம்.

    ReplyDelete
  7. வெகு நாட்கள் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி, தாத்தா! மிக்க நன்றி.

    ReplyDelete
  8. /அவள் நாமம் சொல்லச் சொல்ல
    நெஞ்சம் செந்தா மரையாய் மலரும்
    ஆசையுடன் அவள் வந்து
    குடியிருக்கும் கோவில் ஆகும்/

    அழகு

    ReplyDelete
  9. //அழகு//

    அழகைப் பற்றிப் பேசினாலே அழகு வந்துடுது இல்லை? :) மிக்க நன்றி திகழ்.

    ReplyDelete