இன்றைக்கு திவாகர்ஜியின் நேயர் விருப்பம் :)
மதுரைநகர் தேவியே மண்ணாளும் ராணியே
மனதினிலும் குடிபுகுந்து எமைஆள் மீனாக்ஷியே
(மதுரை)
மோகனமாய்ச் சிரிப்பவளே மோகமெல்லாம் எரிப்பவளே
சோகமெல்லாம் தீர்ப்பவளே சுவர்க்கமென இனிப்பவளே
திக்கெட்டும் ஜெயித்தவளே திகம்பரனை மணந்தவளே
சொற்கட்டின் உட்புகுந்து நற்பொருளாய் திகழ்பவளே
(மதுரை)
கிளிப்பிள்ளை போலநானும் உன்பெயரைச் சொல்லிடணும்
சிறுபிள்ளை போலஉன்னைச் சுற்றிச்சுற்றி வந்திடணும்
விழிக்குள்ளே உன்னைவைத்து வாழ்த்திதினம் போற்றிடணும்
வழித்தொல்லை வாராமல்நீ வாஞ்சையுடன் காத்திடணும்
(மதுரை)
--கவிநயா
// சொற்கட்டின் உட்புகுந்து நற்பொருளாய் திகழ்பவளே//
ReplyDeleteஅற்புதமான வர்ணனை.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://kandhanaithuthi.blogspot.com
எனையாளும் மீனாட்சியுன்
ReplyDeleteமனமகிழப் பாடுவோமே
செந்தமிழாம் கவிநயத்தை
செவியாரக் கேட்போமே
சொல்லில்லாமல் பாடலில்லை
சொல்லாக நீயிருந்தாய்
நீயிருந்து நின்றதனால்
தேனிருந்து தித்திக்குதே
சொக்கவைக்கும் பாட்டு
சொக்கனுக்கு கேட்கட்டும்
சொக்கிசொக்கிக் கேட்டுவிட்டு
சொக்கிப்போய் நிற்கட்டும்
வாங்க தாத்தா. மிக்க நன்றி!
ReplyDelete//சொக்கவைக்கும் பாட்டு
ReplyDeleteசொக்கனுக்கு கேட்கட்டும்
சொக்கிசொக்கிக் கேட்டுவிட்டு
சொக்கிப்போய் நிற்கட்டும்//
நல்லது திவாகர்ஜி :) அப்படியே ஆகட்டும்.
கவியோடு ரசித்தமைக்கு மிக்க நன்றி!
//கிளிப்பிள்ளை போலநானும் உன்பெயரைச் சொல்லிடணும்//
ReplyDeleteOm sakthi OM sakthi , OM sakthi
வருகைக்கு மிக்க நன்றி, கைலாஷி!
ReplyDeleteகாளியாய்க்கொடியோரின் விதி முடிக்கும் வல்லவளே!
ReplyDeleteநீலியாய் அடியார்க்கு நீதி செய்யும் நல்லவளே!
தோளிலே தத்தைக்கு இடமளித்த இனியவளே;
தாளிலே எனக்குமொரு இடமளிப்பாய் கனிவுடனே!
காளியாய்க்கொடியோரின் விதி முடிக்கும் வல்லவளே!
ReplyDeleteநீலியாய் அடியார்க்கு நீதி செய்யும் நல்லவளே!
தோளிலே தத்தைக்கு இடமளித்த இனியவளே;
தாளிலே எனக்குமொரு இடமளிப்பாய் கனிவுடனே!