Tuesday, September 2, 2008

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!

மிக அருமையான பாடல் ஒன்றை கேட்டேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அன்னையின் மீதான அழகான ஒரு நாமாவளி.



சமயபுரத்து நாயகியே சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!

வேப்பஞ்சேலை உடுத்திய பேருக்கு காப்பாய் நிற்கும் தயவல்லவோ?!
உரியவர்கருளும் பெரியபாளையத் திருநகர் வாழும் தாயல்லவோ?!
கேட்டை களையும் கோட்டை மாரியாய் சேலத்தில் வளரும் சுடரல்லவோ?!
பால் குடம் பொங்கல் படைப்பவர்க்குதவும் கோலவிழி அம்மன் அவளல்லவோ?! (சமயபுரத்து)

ஆடித் தேர் கொண்டு அழகாய் வலம் வரும் வேற்காடமர்ந்த அருளல்லவோ?!
ஆலயம் மன்ன திருப்பெயர் விளங்க அருமறை பாடும் பொருளல்லவோ?!
தருமத்தைக் காப்பாள் துயர்களைத் தீர்ப்பாள் துர்க்கை பவானி அவளல்லவோ?!
கருமத்தி நீக்கி கவலையைப் போக்கி கை கொடுக்கும் குளிர் நிழலல்லவோ?!

சிம்ம வாஹினி! ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி! சமயபுரத்தாளே சாட்சி!

8 comments:

  1. அருமை, அருமை! அதுவும் சீர்காழி அவர்களின் கணீர்க் குரலில் சிலிர்க்க வைக்கிறது. நன்றி குமரா. சமயபுரத்தாள் திருவடிகள் சரணம்.

    ReplyDelete
  2. நன்றி கவிநயா அக்கா.

    ReplyDelete
  3. என்ன படம் குமரன்?
    அருமையான பாட்டு, கம்பீரமான குரலில்!

    //சமயபுரத்து நாயகியே
    சமயத்தில் காக்கும் நாரணியே!//

    நாயகிக்கு, இன்றும் நாரணனிடம் இருந்து சீர் வரிசை போகிறது!

    //பவ தாரணியே//

    பெயர் விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  4. திரைப்படத்தின் பெயர் 'சமயபுரத்தாளே சாட்சி' என்று நினைக்கிறேன் இரவிசங்கர். எனது பள்ளிக்காலத்தில் வந்த திரைப்படம்.

    பவதாரணி என்றால் உலகத்தைத் தாங்குபவள்ன்னு பொருள் சொல்லலாம்.

    ReplyDelete
  5. அருமையான பாடல். கம்பீரமான குரல். மிகவும் நன்றி.

    பஜனை பாடல்களின் தொகுப்புக்கு பர்க்கவும்
    Bhajanai.com

    ReplyDelete
  6. அருமையான பாடல் குமரன். நவராத்திரிக்கு ஏற்ற பாடல். சீர்காழியின் பிசிறில்லா குரலை கேட்க இன்னும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. நவராத்திரி நேரத்தில இது மீண்டும் மேல வந்திருக்கு Expatguru. இதை முன்னாடியே போட்டுட்டேன்.
    :-)
    நன்றிகள்.

    ReplyDelete