Tuesday, September 29, 2009

அன்னையே அருந்துணையே!



அன்னையே அருந்துணையே
அகில மாளும் நாயகியே
தங்கமே தத்துவமே
தத்து வத்தின் வித்தகமே

(அன்னையே)

தேவி உன்னைத் துதித்திடவே
பேதை என்ன பேறு செய்தேனோ
தேவி உன்னை வணங்கிடவே
தேடி இந்தப் பிறவி கொண்டேனோ

(அன்னையே)

உந்தன் தூரப் பார்வையிலேனும்
என்னைச் சின்னத் துகளாய்க் கொள்வாய்
என்றும் என்னை உன்மல ரடியில்
நிரந்தரமாய்ச் சேர்த்துக் கொள்வாய்!

(அன்னையே)


--கவிநயா

பலப்பல நாட்களில் முதல் முறையாக செவ்வாயன்று பதிவிட முடியவில்லை. மன்னிச்சுக்கோ அம்மா.

8 comments:

  1. உன் தூர பார்வையில் என்னை கிட்ட பார்வை யில் வைத்திருப்பாய் அன்னையே அருந்ததியே ...அம்மையை புக ழ்ந்திட அளவு தான் உண்டோ /??.....சித்ரம்

    ReplyDelete
  2. கவிதை நல்லாயிருக்குக்கா..

    படத்திற்கு எனக்கு நன்றி சொல்ல வேண்டாம், அது நானும் கூகிளார் தயவில் பெற்றதுதான்...ஆகவே தயவுசெய்து என் பெயரை இடுகையில் இருந்ந்து எடுத்துவிடுங்கள்.

    ReplyDelete
  3. //உன் தூர பார்வையில் என்னை கிட்ட பார்வை யில் வைத்திருப்பாய் அன்னையே அருந்ததியே ...அம்மையை புக ழ்ந்திட அளவு தான் உண்டோ //

    ஆம், வருகைக்கு மிக்க நன்றி சித்ரம்.

    ReplyDelete
  4. //ஆகவே தயவுசெய்து என் பெயரை இடுகையில் இருந்ந்து எடுத்துவிடுங்கள்.//

    எடுத்தாச்! நீங்க வாசிக்கிறீங்களான்னு பார்த்தேன், வேறொண்ணுமில்லை :) நன்றி மௌலி.

    ReplyDelete
  5. //Simple and beautiful ! :)//

    நன்றி ராதா :)

    ReplyDelete
  6. //என்னை உன்மல ரடியில்
    நிரந்தரமாய்ச் சேர்த்துக் கொள்வாய்!//

    அப்படியே அடியேனும் வேண்டுகிறேன்.

    அருமை அருமை கவிநயா.

    ReplyDelete
  7. //அப்படியே அடியேனும் வேண்டுகிறேன்.

    அருமை அருமை கவிநயா.//

    நல்லது கைலாஷி :) வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete