Monday, September 5, 2011

எங்கே இருக்கிறாய்?


சுப்பு தாத்தா கானடா ராகத்தில் பாடியதைக் கேட்டு ரசியுங்கள். நன்றி தாத்தா!

எங்கேதான் இருக்கிறாய்?
எப்படித்தான் இருக்கிறாய்?
துயரத்தில் துவள்பவளை
எப்படித்தான் மறக்கிறாய்?

தொடு வானம் போலேநீ
தொலைவினிலே இருக்கிறாய்
நீரில் தெரியும் நிலவைப் போலே
என்னை அலைக்கழிக்கிறாய்!

வற்றாத விழியிரண்டை
வள்ளல் போலத் தந்துவிட்டாய்
பொற்றாமரை யினின்றும்
எழுந்து வர மறுக்கிறாய்!

இது என்ன நியாயமோ
இதுவே உந்தன் நீதியோ
பெற்ற பிள்ளை அழுதிருக்க
வீணை உனக்குத் தேவையோ?

கன்றை விட்டுப் பிறஉயிரை
கொஞ்சுகின்ற பசுவும் உண்டோ?
என்னை விட்டு சிங்கமதை
விரும்பும் உந்தன் எண்ணம்தான் என்ன?

உன்மாயை ஒன்றும் புரியவில்லை
வாழும் வழியும் தெரியவில்லை
என்று தான் வருவாயோ
என்னைக் கூட்டிச் செல்வதற்கு?

--கவிநயா

8 comments:

  1. எங்கெங்கும் இருக்கிறாய்;

    இயற்கையிலெல்லாம் சிரிக்கிறாய்;

    விழுந்து கிடக்கும் எனக்கேன் நீ

    கைகொடுக்க மறுக்கிறாய் .?

    ReplyDelete
  2. //உன்மாயை ஒன்றும் புரியவில்லை
    வாழும் வழியும் தெரியவில்லை//

    மாயைக்குப்பின் தானே அருளல் அதற்காக வேண்டுவோம் கவிநயா.

    ReplyDelete
  3. //விழுந்து கிடக்கும் எனக்கேன் நீ

    கைகொடுக்க மறுக்கிறாய் .?//

    அதானே. நல்லாக் கேளுங்க, லலிதாம்மா!

    ReplyDelete
  4. //மாயைக்குப்பின் தானே அருளல் அதற்காக வேண்டுவோம் கவிநயா.//

    ஆகட்டும், அப்படியே வேண்டிக்கிறேன்.

    வருகைக்கு நன்றி கைலாஷி.

    ReplyDelete
  5. akka.. how are you so much of time to write akka..

    //வற்றாத விழியிரண்டை
    வள்ளல் போலத் தந்துவிட்டாய்
    பொற்றாமரை யினின்றும்
    எழுந்து வர மறுக்கிறாய்!

    கன்றை விட்டுப் பிறஉயிரை
    கொஞ்சுகின்ற பசுவும் உண்டோ?
    என்னை விட்டு சிங்கமதை
    விரும்பும் உந்தன் எண்ணம்தான் என்ன// These lines made me cry akka.. I was actually feeling for people taking us in wrong sense, when we arent actually guilt.. உன்மாயை ஒன்றும் புரியவில்லை
    என்று தான் வருவாயோ
    என்னைக் கூட்டிச் செல்வதற்கு?.. sooper akka..

    ReplyDelete
  6. வாங்க சங்கர். மறுபடி எனக்கே பிடிச்ச வரிகளை ரசிச்சிருக்கீங்க :) நம்ம அலைவரிசை ஒரே மாதிரி இருக்கு போல.

    //akka.. how are you so much of time to write akka..//

    இந்தக் கவிதை 2007-ல் எழுதினது. தினம் ஒரு கவிதை எழுதறேன்னு நினைச்சீங்களா? :) I wish!

    வருகைக்கு நன்றி சங்கர்.

    ReplyDelete
  7. ஜீவாத்மா ப்ரமாத்மாவைக் காண அதனுடன் ஒன்றுபட துடிக்கும் நிலை தனை
    ஹிந்தி மொழியின் பிரபல கவிதாயினி மஹாதேவி வர்மா அவர்களின் கவிதைகள்
    அழகாக வர்ணிக்கும். கவிதாயினி கவி நயா வின் கவிதைகள் அதற்கு இணையானவை
    என்று சொன்னால் சற்றும் மிகையாகாது.

    பக்தி பரவசத்தில் என்று நான் உன்னடிகளை வந்து சேருவேன் என்று ஆலாபிப்பது ஒரு நிலை.
    என்னை உன்னுடன் அழைத்துச் செல்லவேண்டிய கால கட்டம் வந்துவிட்டதே ! ஏன் என்னை
    இன்னமும் கூட்டிக்கொண்டு செல்லவில்லை என பிரலாபிப்பது அடுத்த நிலை.

    கவி நயா அவர்களின் கவிதையைக் கேட்டு இரங்கி அந்த காவி நாயகி காமாக்ஷி
    வரவேண்டும், என வேண்டி இக்கவிதையை கானடா ராகத்தில் பாடலானேன்.

    சுப்பு தாத்தா.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  8. //ஜீவாத்மா ப்ரமாத்மாவைக் காண அதனுடன் ஒன்றுபட துடிக்கும் நிலை தனை
    ஹிந்தி மொழியின் பிரபல கவிதாயினி மஹாதேவி வர்மா அவர்களின் கவிதைகள்
    அழகாக வர்ணிக்கும்.//

    முன்பு ஒரு முறையும் நீங்களே சொல்லியிருக்கீங்க சுப்பு தாத்தா.

    //கவி நயா அவர்களின் கவிதையைக் கேட்டு இரங்கி அந்த காவி நாயகி காமாக்ஷி
    வரவேண்டும், என வேண்டி இக்கவிதையை கானடா ராகத்தில் பாடலானேன்.//

    அன்பான ஆசிகளும் வேண்டுதலும் கண்ணீரை வரவழைத்தன, தாத்தா. மிக்க நன்றி. பாடலை இடுகையில் சேர்த்திருக்கேன்.

    ReplyDelete