Thursday, October 6, 2011

          பராசக்திக்குப் பாமாலை



வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

போரில் அன்னை அசுரர்தன்னை
வென்று கொன்ற  நாளிதே!
பஞ்சபாணி  வெற்றிவாகை 
சூடி நின்ற நாளிதே! 


வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

தீயவற்றைத் தூய்மை   வெல்லும்
என்றுணர்த்தும் நாளிதே!
வஞ்சகத்தை வாய்மை வெல்லும்
என்றுணர்த்தும் நாளிதே!

வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

அன்னை பராசக்திக்கு நாம்
தமிழ்ப்பாமாலை சூட்டுவோம்!
அன்பே உருவான தாயின்
அடிபணிந்து போற்றுவோம் !

வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம

6 comments:

  1. விஜயதசமி நல்வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  2. வெற்றித்திருநாள் வாழ்த்துக்கள் குமரன்!

    ReplyDelete
  3. அழகா பாட வருது அம்மா. விஜயதசமி வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. சொல்வதை செய்து காண்பிப்பது தான் அழகு ;பாடி இணைக்கக்கூடாதா?[கலா ரொம்பப் பிசி நவராத்திரியில்]

    ReplyDelete
  5. வெற்றி !வெற்றி !வெற்றியென்று
    வெற்றிகீதம் பாடுவோம் !
    தீயரைத்துணித்த தாயின்
    தசமியைக் கொண்டாடுவோம

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. இராஜராஜேஸ்வரி,
    வருகைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete