சுப்பு தாத்தா ஆனந்த பைரவியை கிராமிய மணத்துடன் அனுபவித்துப் பாடியிருப்பதை, நீங்களும் கேட்டு அனுபவியுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!
தெம்மாங்குப் பாட்டெடுத்து
தேவதையப் பாட வந்தேன்
தென்னவளே மீனாளே தங்க ரத்தினமே
– எனக்கு
தெள்ளு தமிழ்ப் பாட்டு ஒண்ணு
சொல்லு ரத்தினமே!
வையை நதிக் கரையோரம்
வஞ்சி ஒன்னப் பாட வந்தேன்
வண்ணக்கிளி தோளில் கொஞ்சும் தங்க
ரத்தினமே - எனக்கு
வண்ணத் தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லு
ரத்தினமே!
கண்ணால எங்களயே
கண்ணப் போலக் காப்பவளே
கண்ணு மணி மீனாளே தங்க ரத்தினமே
– எனக்கு
கன்னித் தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லு
ரத்தினமே!
சொக்கனையே சொக்க வெச்ச
சொக்கத் தங்க மீனாளே
சொந்தமுன்னு ஒன்னப் பாட வந்தேன்
ரத்தினமே – எனக்கு
செந்தமிழில் பாட்டு ஒண்ணு சொல்லு
ரத்தினமே!
வெட்டும் விழிப் பார்வையாலே
வேதனைகள் தீர்ப்பவளே
பாட்டெடுத்து நான் பாட தங்க ரத்தினமே
கேட்டு நீயும் கெறங்க வேணும்
பொண்ணு ரத்தினமே!!
--கவிநயா
எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தவகைப் பாட்டு!
ReplyDeleteஅடக்கி வைக்க முடியலை;நானும் ஒரு பதம் எழுதிட்டேன் :
அஞ்செழுத்துக்காரனுக்குப்
பொஞ்சாதியானவளே !
மஞ்சத்தாலி நெஞ்சக் கொஞ்ச மின்னும் ரத்தினமே!-எனக்கு
கொஞ்சுதமிழ்பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!
Naattuppaadal !Miga alagaana varigal.
ReplyDeleteNatarajan.
அந்தக் கடை வரிகள் ரொம்ப ரொம்ப்ப அழகா இருக்கு.. மீனாட்சி பாட்டுன்னாலே தனி அழகு ஓடி வந்து கட்டிக்கும் போல
ReplyDeleteலலிதாம்மா, உங்க வரிகளை ரொம்ப ரசிச்சேன்! அருமை. மிக்க நன்றி அம்மா.
ReplyDelete//Naattuppaadal !Miga alagaana varigal.//
ReplyDeleteமிக்க நன்றி திரு.நடராஜன் :)
//அந்தக் கடை வரிகள் ரொம்ப ரொம்ப்ப அழகா இருக்கு.. மீனாட்சி பாட்டுன்னாலே தனி அழகு ஓடி வந்து கட்டிக்கும் போல//
ReplyDeleteமீனாட்சி பாட்டுன்னா நீங்க ஓடி வர்றது போலத்தான் :)
வருகைக்கு நன்றி திவாகர் ஜி!
enjoyed yr song in subbu sir's folk aananda bairavi!
ReplyDeleteஅந்தகாலத்துத் ''தாழையாம் பூ முடித்து" மெட்டில் பாடிப் பாரேன்;ரொம்ப பிரமாதமா வரது!!
ReplyDeleteநீங்க சொன்னது சரிதான் லலிதாம்மா! நல்லா வருது :) நன்றி அம்மா.
ReplyDelete