சுப்பு தாத்தா கிராமிய மணத்துடன் கும்மிப் பாடல் மெட்டில் பாடித் தந்திருப்பதைக் கேட்டு ரசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
எண்ணம் என்றும் மாறாமல்
எண்ணம் என்றும் மாறாமல்
திண்ணம் என்றும் குலையாமல்
நண்ணி உன்னை நினைத்திருக்க
பெண்ணே நீயே அருள் புரிவாய்!
கிண்ணம் போலே என்னுள்ளம் - அதில்
வண்ணம் போலே என்னன்பு
வண்ணம் பூசி மகிழ்ந்திருக்க
பெண்ணே என்னிடம் வந்திடுவாய்!
மண்ணம் போல்நான் இருந்தாலும்
தண்ணென்ற உன்னன்பாலே
சுண்ணம் போலே எனைமாற்றி
பெண்ணே உன்னிடம் சேர்த்துக் கொள்வாய்!
--கவிநயா
"பெண்ணே உன்னிடம் சேர்த்துக்கொள்வாய்!"-ennaiyum.
ReplyDeleteவாங்க லலிதாம்மா!
ReplyDelete