சுப்பு தாத்தா சிவரஞ்சனி ராகத்தில் அழகாக அமைத்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
காலடியில் கிடந்திருப்பேன் - உன்
பார்வைபட குளிர்ந்திருப்பேன்
திருமுகத்தை பார்த்திருப்பேன்
தினம்உன்னை நினைத்திருப்பேன்
சுவாசந்தர காற்றானாய்
உணவுதர நாற்றானாய்
நேற்றானாய் இன்றானாய்
நாளும் பொழுதும் நீயானாய்
வஞ்சி உன்னை புகழ்ந்திருப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்திருப்பேன்
நெஞ்சில் உன்னை சுமந்திருப்பேன்
விஞ்சும் அன்பில் திளைத்திருப்பேன்
எண்ணும் போதில் நினைவானாய் - எண்
ணாத போதும் கனவானாய்
உணர்வானாய் உயிரானாய்
உலகம் எனக்கு நீயானாய்!
காலடியில் கிடந்திருப்பேன் - உன்
பார்வைபட குளிர்ந்திருப்பேன்
திருமுகத்தை பார்த்திருப்பேன்
தினம்உன்னை நினைத்திருப்பேன்
சுவாசந்தர காற்றானாய்
உணவுதர நாற்றானாய்
நேற்றானாய் இன்றானாய்
நாளும் பொழுதும் நீயானாய்
வஞ்சி உன்னை புகழ்ந்திருப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்திருப்பேன்
நெஞ்சில் உன்னை சுமந்திருப்பேன்
விஞ்சும் அன்பில் திளைத்திருப்பேன்
எண்ணும் போதில் நினைவானாய் - எண்
ணாத போதும் கனவானாய்
உணர்வானாய் உயிரானாய்
உலகம் எனக்கு நீயானாய்!
--கவிநயா
சுவாசந்தர காற்றானாய்
ReplyDeleteஉணவுதர நாற்றானாய்
soooper
arumai!
ReplyDeleteNatarajan.