Friday, July 13, 2012

அருள்புரிவாள் அபிராமி!

கலாவின் இனிமையான குரலில் பாட்டைக் கேட்க விரும்புவோர்
கீழுள்ள லிங்கில் கேட்கலாம்:
http://myprayers-lalitha.blogspot.in/2011/06/blog-post_16.html
கானக்குயில் பாடக்கேட்டிருந்த நான்(கோழி)பாடியதைக்
கேட்கத் துணிச்சல்உள்ளவர்களுக்கு இதோ கீழே!






அருள்புரிவாள் அபிராமி!


அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.

அன்று தெய்வக்குழந்தைக்குப் பாலூட்டியே,


தமிழர்க்கு சிவகவியைத் தந்தாள் 'அம்மா'!


தஞ்சம் என்றே அண்டும் அடியார்க்கெல்லாம்


அஞ்சேல் என்றே அபயம் அளிப்பாள் 'அம்மா'!


அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.


அன்று படிப்பில்லா பாமர பக்தனுக்கு,


பார்போற்றும் புலமையைத் தந்தாள் 'அம்மா'!


புகல் வேண்டித் தனை நாடும் பக்தர்க்கெல்லாம்,


சுகமான பதநிழலைத் தருவாள் 'அம்மா'!


அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.


அன்று ஊமைக்கு வாய் பேசும் வரமளித்தே,


தேமதுரத் துதி பாட வைத்தாள் 'அம்மா'!


'கதி நீயே ' எனக்கதறும் தீனர்க்கெல்லாம்,


இதமான பத நிழலை அருள்வாள் 'அம்மா'!

அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.

4 comments:

  1. Annai un bakthiyai mechchi arul purivaal.Pinnar paattaik kEttum manam magizvaal.

    ReplyDelete
  2. thanks fr pleasant surprise visit kala!

    ReplyDelete
  3. பாடல் கேட்ட பிறகு கமெண்ட்டலாம் என்றிருந்ததால் தாமதம். ஆனால் இன்னுமே கேட்கவில்லை அம்மா! பாடல் அழகாக இருக்கிறது, ஒரே ஒரு கேள்வி - ஏன் அம்மா என்ற சொல்லை 'அம்மா' என்று எழுதி இருக்கிறீர்கள்? :)

    ReplyDelete
  4. ஓராண்டுமுன் (16-6 -11) சர்வம்நீயேவில் போஸ்ட் பண்ணிய பாட்டுஇது;இங்கு அதை காப்பி பேஸ்ட் பண்ணேன்;அப்போ நான் ப்ளாக் விஷயத்தில் L K G! இப்போ மார்ஜின் பாஸ் ஆகி UKG!! விஷயம் புரிஞ்சிதா?
    உலகத்துக்கே அம்மா;
    அதை ஹைலைட் எப்படி பண்ணுவது என்று அந்தகாலத்தில் தெரியாததால் அவள் 'அம்மா'!

    ReplyDelete