ஒன்றும் அறியாத உன்பிள்ளை தானம்மா
உன்னை அறிந்து கொண்டேன்
உள்ளம்கொள்ளை கொள்ளும் உந்தன் புன்னகையில்
என்னை இழந்து விட்டேன்
அண்டங்கள் யாவையும் அன்போடு ஆள்கின்ற
ஆதிமூலம் நீயே
மூன்று தொழில்களும் முறையாய் நடத்திடும்
மும்மூர்த்தியும் நீயே
எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்
என்னிலு மிருப்பவளே
கண்ணில் ஒளிகாட்டிக் கருணை முகம்காட்டி
என்னை இழுப்பவளே
தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்
நிலவை அமைத்தவளே
மஹிஷா சுரனை மண்ணோடு மண்ணாக்கி
மாய்த்துச் சிரித்தவளே
கடலும் இனிப்பாகும் கரும்பும் உவர்ப்பாகும்
எல்லாம் உந்தன் ஜாலமே
பகலும் இரவாகும் இரவும் பகலாகும்
பணியும் உன்னை ஞாலமே
உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்
உந்த னடி சரணம்
எந்தன் குரல் கேட்டு கருணை கொஞ்சம் வைத்து
அம்மா நீயும் வரணும்!
--கவிநயா
//தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்
ReplyDeleteநிலவை அமைத்தவளே
மஹிஷா சுரனை மண்ணோடு மண்ணாக்கி
மாய்த்துச் சிரித்தவளே//
பக்தர்களைக் காப்பவளும் அதே சமயம் துஷ்டர்களை அழிப்பவளும் ஒரே அன்னையே என்று அருமையாக கூறியுள்ளீர்கள்.
அம்மன் படம் அருமை.
வாழ்த்துக்கள் கவிநயா.
//கருணை கொஞ்சம் வைத்து
ReplyDeleteஅம்மா நீயும் வரணும்!//
கருணை கொஞ்சமாவது காட்டிடு தாயே,
கற்பகாம்பாள் நீயே - புவன பரிபாலினி,
கருணை கொண்டு, அருள் பாலித்திடு.
//உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்//
ReplyDeleteஆமாம் கவிநயா. அம்மாவால் ஆகாததென அகிலத்தில் எதுவும் எதுவுமில்லை.
//கருணை கொஞ்சம் வைத்து
அம்மா நீயும் வரணும்!//
அந்தக் கருணை மட்டும் கிடைத்து விட்டால் அதை விடப் பாக்கியம் வெறெதுவும் எதுவும் இல்லை.
பாடலுக்கு நன்றி கவிநயா.
//எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்
ReplyDeleteஎன்னிலு மிருப்பவளே
கண்ணில் ஒளிகாட்டிக் கருணை முகம்காட்டி
என்னை இழுப்பவளே//
அருமையான வரிகள்....மிகவும் ரசித்தேன் கவிக்கா..
படம் சூப்பர்.
வருக கைலாஷி. எனக்கும் பிடிச்ச படம். மிக்க நன்றி!
ReplyDelete'புவன பரிபாலினி' - அழகா இருக்கே :) வருகைக்கு நன்றி ஜீவா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteஎனக்கும் பிடிச்ச வரிகளையே எடுத்துக் காட்டியிருக்கீங்க :) நன்றி மௌலி.
ReplyDeletehttp://uk.youtube.com/watch?v=KQpQASW98G8
ReplyDeleteகண்பனிக்கச் செய்த உருக்கமான மெட்டு. நல்லாருந்தது. நன்றி தாத்தா.
ReplyDeleteசங்கு சக்ர தாரிணியாக இராஜராஜேஸ்வரியின் திருக்கோலம் மிக நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஆமால்ல? நன்றி குமரா :)
ReplyDeleteயக்கா
ReplyDeleteசங்கு சக்கரம் மட்டுமா?
மகுடத்தைப் பாருங்க! அப்படியே திருமலை ஸ்ரீநிவாசன் மகுடம்! என்ன சொல்றீங்க? :)
//உந்த னடி சரணம்
அம்மா நீயும் வரணும்!//
அருமையான முடிப்பு! அழகான தொடுப்பு!
அம்மன் படம் அழகோ அழகு! எந்த ஊரு உற்சவர் க்கா?
ஆமால்ல, இது கண்ணன் ஸ்பெஷல் தரிசனம் போல :) வருகைக்கு நன்றி கண்ணா.
ReplyDeleteபடம் இங்கேருந்துதான் எடுத்தேன் - கர்நாடகா போலருக்கு -
http://www.dattapeetham.com/india/festivals/2006/navaratri2006/oct2/oct2.html
முழு சுட்டியும் வரல, ஏன்னு தெரியல; மடல் அனுப்பறேன்...
ReplyDeleteமகிஷாசுர மர்த்தனி ஸ்லோகமான ' ஹைகிரி நந்தினி நந்தித மேதினி "
ReplyDeleteமெட்டு நன்றாக தெரிந்தது தானே !
அந்த மெட்டிலும் இந்த உங்களது பாடல் மிகவும் அற்புதமாக அமைகிறது.
பாடிப் பாருங்களேன் !
மீனாட்சி பாட்டி.
தஞ்சை. ( இப்போது சென்னை )
அடுத்த மாசம் உங்க ஊர் பக்கம்
வாங்க பாட்டி. ரொம்ப நாளாச்சே உங்கள பார்த்து... ஆமா, அந்த மெட்டிலும் வருது. மிக்க நன்றி. இந்தப் பக்கம் வரீங்களா? வாங்க வாங்க :)
ReplyDelete