Monday, October 20, 2008

கண்ணுக்குள்ள ஒன்னுருவம் கலையாம நிக்குதடி!



கண்ணுக்குள்ள ஒன்னுருவம்
கலையாம நிக்குதடி
நெஞ்சுக்குள்ள ஒன் நெனப்பு
நீங்காம சுத்துதடி

சொல்லச் சொல்ல ஒம்பேரு
சக்கரையா ருசிக்குதடி
மெல்ல மெல்ல ஒன்னழகில்
எம் மனசு சொக்குதடி

கைவளயல் கலகலத்து
கானம்பாடிக் களிக்குதடி
கால்கொலுசு சலசலத்து
சங்கீதமா ஒலிக்குதடி

சின்னஇதழ்ச் சிரிப்பினிலே
சிந்தையெல்லாம் மயங்குதடி
தந்தனத்தாந் தமிழ்ப்பாட்டு
தானாகப் பொறக்குதடி

--கவிநயா

4 comments:

  1. //மெல்ல மெல்ல ஒன்னழகில்
    எம் மனசு சொக்குதடி//

    நீங்களும் சொக்கி பிறக்கின்ற தமிழ்ப் பாட்டால் எங்களையும் சொக்க வச்சிடுறீங்க கவிநயா!

    ReplyDelete
  2. ஆனந்தமா எங்க ஆத்துகாரர் ஆனந்த பைரவிலே ட்யூன்
    போட நான் பாட,
    நீங்க கேட்கவேண்டாமா ?
    வாங்க.
    http://ceebrospark.blogspot.com

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  3. வாங்க ராமலக்ஷ்மி. தவறாமல் வாசிக்கிற உங்களுக்கு மிகுந்த நன்றிகள்!

    ReplyDelete
  4. ஆனந்த பைரவி அட்டகாசமா இருக்கு பாட்டீ. அங்க உங்கள ஒரு கேள்வி கேட்டிருக்கேன்... பதிலை எதிர்பார்த்து... இசையமைத்துப் பாடிய தாத்தாவுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete