Monday, August 29, 2011

உன்னை நானறிவேன்!

மனமே உன்னை நானறிவேன் - என்
அன்னையை என்றோ நீ அறிவாய்?
உலகிதன் மாயையில் உழலுகிறாய் - உடன்
என்னையும் இழுத்ததில் உழற்றுகிறாய்

(மனமே)

பாடுகள் பலப்பல பட்ட பின்னும்
சூடுகள் பலபெற்று கெட்டபின்னும்
நாடிடுவா யில்லை அவள் புகலே
பாடிடுவா யில்லை அவள் புகழே

(மனமே)

அவளன்றி உறவில்லை அறிந்து கொள்வாய் - அவள்
பதமன்றி புகலில்லை புரிந்து கொள்வாய்
நிலையற்ற இன்பங்கள் துறந்திடுவாய் - அவள்
நினைவன்றி அனைத்தையும் மறந்திடுவாய்!

(மனமே)


--கவிநயா

6 comments:

  1. ஐங்கணையாலவள் 'ஐம்புலனடக்கு'என

    ஆணை இடுவது புரியலையோ?

    பாசத்துடன் கட்டியணைத்திடவே அவள்

    காத்திருக்காளெனத் தெரியலையோ? (மனமே)

    ReplyDelete
  2. வாங்க லலிதாம்மா!

    ReplyDelete
  3. அக்கா,

    'உன்னை நான் அறிவேன்; என்னையன்றி வேறே யார் அறிவார்?' பாடலும், 'மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப்பதமே' பாடலும் தலைப்பையும் முதல் வரியையும் பார்த்தவுடன் நினைவிற்கு வருகிறது. :-)

    இந்த மாதிரி மனத்துடன் பேசுவது பெரியவர்கள் எல்லோரும் செய்வது போல் இருக்கிறது.

    ReplyDelete
  4. //இந்த மாதிரி மனத்துடன் பேசுவது பெரியவர்கள் எல்லோரும் செய்வது போல் இருக்கிறது.//

    :) நான் அந்த வகையில் சேர்த்தி இல்லைன்னாலும் மனசுடன் பேசுவதுண்டு :)

    நன்றி குமரா.

    ReplyDelete
  5. இந்த வாரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போக முடிலயேன்னு நெனச்சேன். But I saw her in ur blog akka.
    நாடிடுவாய் இல்லை அவள் புகலே, பாடிடுவாய் இல்லை அவள் புகழே! ரொம்ப அழகா எழுதிருக்கிங்க. :)

    ReplyDelete
  6. //இந்த வாரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போக முடிலயேன்னு நெனச்சேன். But I saw her in ur blog akka.
    நாடிடுவாய் இல்லை அவள் புகலே, பாடிடுவாய் இல்லை அவள் புகழே! ரொம்ப அழகா எழுதிருக்கிங்க. :)//

    மிக்க மகிழ்ச்சி சங்கர் :) எனக்கு பிடிச்ச வரிகளையே ரசிச்சதாகச் சொன்னதுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete