இன்று இரண்டாம் ஆடிவெள்ளி!
இதோ எனக்குப் பிடித்த ஒரு அருமையான பாடல்!
இதைப் படிக்கும் போது, கூடவே ஒலி இணைப்பையும் இயக்கி கூடவே பாடிப் பாருங்கள்!
அற்புதமாய் இருக்கும்!
மறக்காமல் கூழ் ஊற்றுங்கள்.... இல்லை....போய்க் குடியுங்கள்!
அன்னை அருள் புரிவாள்!!.......நிச்சயமாய்!
http://raretfm.mayyam.com/stream//tvserial/Raja_rajeswari-end_credits.rm
"மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.
மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா
நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,
வாடீ! ஆரணி படவேட்டம்மா!
திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி
அங்காளி, செங்காளி
சந்தோஷி மாதா.
மயிலாப்பூர் கற்பகமே
மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !
கஞ்சனூர் வனதுர்கா
மாவூரு ஸ்ரீகாளி
கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி
வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி
உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா
திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா
மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !
விராலிமலை வேக்கண்ணாள்
முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா
பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி
சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி
பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
சன் டிவியில் வரும்/வந்த(?) ராஜராஜேஸ்வரி என்னும் தொடர். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பல ஊர்களில் அன்னையின் படமும் போட்டு, இந்தப் பாட்டு ஓடும்!
ReplyDeleteதொடரை விட இந்தப் பாட்டு தான் கேட்கவே சிறப்பா இருக்கும்!
அதைச் சிரத்தையுடன் இங்கு இட்டதற்கு நன்றி SK!
//வாடீ! ஆரணி படவேட்டம்மா//
ஹே! எங்க ஊரு படவேட்டம்மனும் வந்துட்டாங்க டோய்!
பின்புலத்தில் நின்ரு, வழக்கம் போல் உதவியதற்கு மிக்க நன்றி, ரவி!
ReplyDeleteஇதைப் பார்ப்பதக்கென்றே, இந்த சீரியலைப் பார்க்கத் தொடங்கி, ஒருநாள், "உள்ளே பல்பு எரிய", உடனே இப்பாடல் காட்சியை மட்டும் ரெகார்ட் பண்னிவிட்டு, அடுத்த வாரமே, விஜய் டிவிக்கு மாறிவிட்டேன்!
:))
இந்த பாட்டை கேட்கும் போது, குஷ்பு நடித்த ஒரு படத்தில் இப்படி தான் தொடர்ந்து அம்மன் பேராக சொல்லும் பாடல் வரும். அதுவோ என்று நினைத்து விட்டேன். பிறகு தான் இது ராஜராஜேஸ்வரி தொடரில் வருகிறது என்ற விஷயமே தெரிந்தது.இத்தொடர் மிகவும் கடியாக இருப்பரால், நான் இதை பார்க்கவே மாட்டேன். இப்படி ஒரு பாடலை தேடி ஆடி வெள்ளியன்று இட்டதிற்கு நன்றி திரு வி எஸ் கே அய்யா.
ReplyDeleteஇந்தியா முழுக்கச் சுற்றி எல்லா அம்மனையும் வாடி என்று பாட்டு எழுதியவர், நெல்லை காந்திமதி அம்பாளை மட்டும் ஏன் விட்டார்? மரியாதை காரணமா?
ReplyDeleteசகாதேவன்.
மிக்க நன்றி
ReplyDelete