"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 10
எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தவர்கள்
இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதம் சாக்ஷியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன்
உலகந்தனில் எந்தனுக்குப்
பின்னையென்று நீ சொல்லாமல் வறுமை போக்கடித்து
என்னை ரக்ஷி பூலோகம் மெச்சவே
பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க்
காத்திடம்மா
அன்னையே இன்னமும் அடியேனை ரக்ஷிக்க
அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 10
[செய்வதெல்லாம் செய்துவிட்டு, சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு, இப்போது மிகவும் நல்ல பிள்ளை போல, "எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? நான் உன்னோட பிள்ளை இல்லையா? நீதானே மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தாய்! அது போல என்னையும் காப்பாய்! படுத்தாதே!" என மன்றாடுகிறார்!
மீதியை ரவி வந்து சொல்லுவார்!!]
"ஜெய ஜெய காமாக்ஷி!"
//மீதியை ரவி வந்து சொல்லுவார்!//
ReplyDeleteசெந்தழலாரே...கொஞ்சம் வாரீகளா? :-)
//எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தவர்கள்
இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா//
இதே போலத் தான் மத்தவங்களும் வேண்டிக் கொள்கிறார்கள்! அம்மா, அந்தக் குழந்தையை மட்டும் நல்லா கவனிச்சிட்ட...நான்-னா மட்டும் உனக்கு இளக்காரமா? = இது எனக்கு standard technique ஆனா powerful technique சின்ன வயசுல :-)
ம்ம்ம்... அப்புறம்...!!
ReplyDelete//பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா//
ReplyDeleteஅட, இது என்ன புதுக் கதை.
பாலன் மார்க்கண்டேயனை அப்பன் தானே காப்பாற்றியது! இங்க என்னன்னா அம்மா credit எடுத்துக்கறாங்களே! இது எப்படி?
SK ஐயா, ஒரு பொறி தட்டி விட்டாருன்னா சும்மாவா?
முன்பு எமதர்மராஜன் தன் சிற்றன்னையான சாயாவைக் காலால் எட்டி உதைத்தான்.
ReplyDeleteசாயா என்ன தான் மாற்றாந்தாயாக சில கொடுமைகளைச் செய்தாலும், அன்னையைக் காலால் உதைத்தால் சாபம் பெற்றான்.
மார்க்கண்டேயனைக் காக்க சிவனார் கால சம்ஹார மூர்த்தியாய் தோன்றிய போது, எமனுக்குக் கழுவாயாக, அதே போல், காலால் எட்டி உதைத்தார்.
எந்தக் கால்? இடது காலைத் தூக்கி நின்றாடும் கால்!
ஆனால் இடப்பாகமோ அன்னை உமையாளுக்கு அல்லவா உரியது! ஆக, உமையன்னையே எமனை உதைத்தாற் போலத் தான் ஆகிறது!
இப்படி மறைபொருளாய் அன்னையே குழந்தையைக் காலனிடம் இருந்து காத்தாள்! இதற்கு நன்றியாகத் தானோ, மார்க்கண்டேய புராணத்தில், அன்னையின் சாக்த வழிபாட்டு முறைகள் பற்றி அதிகமாக வரும்.
இங்கும் அதை எண்ணித் தான் "மார்க்கண்டனைக் காத்தது போல் பிரியமாய்க் காத்திடம்மா" என்று பாடுகிறார் போலும்!
//எந்தக் கால்? இடது காலைத் தூக்கி நின்றாடும் கால்!
ReplyDeleteஆனால் இடப்பாகமோ அன்னை உமையாளுக்கு அல்லவா உரியது! ஆக, உமையன்னையே எமனை உதைத்தாற் போலத் தான் ஆகிறது!
இப்படி மறைபொருளாய் அன்னையே குழந்தையைக் காலனிடம் இருந்து காத்தாள்!//
அற்புதமான விளக்கம்..
கோடு போட்டால் ரோடே போடுபவர் ஆயிற்றே எனத்தான் உங்களைக் கை காட்டினேன்.
ReplyDeleteஏமாற்றாமல் வந்து சரியாகச் சொல்லிவிட்டீர்கள், ரவி!'