Monday, April 16, 2007

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக


ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத்திரி போட்டு பசும் நெய்தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோலமஞ்சள் தானமிட்டு
பூமாலை சூட்டி வைத்து பூஜிப்போம் உன்னை திருமகளே

திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக ( திருவிளக்கை )

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம் (அலைமகளே வருக)

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓர் வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகலவரம் தருவாய் நமஸ்காரம்
பத்ம பீட தேவி நமஸ்காரம்
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்

இந்த பாட்டை கேட்டு மகிழ இங்கேசொடுக்கவும்

5 comments:

  1. பத்ம பீட சரியோ பத்ம பீஷ்ம எனில் பொருள் என்னவாக இருக்கும்? கண்ணபிரான் ரவியே வந்து விளக்குக! என் பிரிய பாட்டு இதுவும்..

    ReplyDelete
  2. 'பத்மபீட' எனத்தான் பாடலிலும் வருகிறது!

    அடிக்கடி வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

    ReplyDelete
  3. ஷைலஜா
    பத்ம பீட தேவி என்பது தான் சரி.

    அன்புத் தோழி
    உங்களைக் கேட்காமலேயே பதிவில் இதைச் சரி செய்து விட்டேன்.

    மேலும் பக்தர் தமைக் காப்பாய் (காப்பாள் என்பதற்குப் பதிலாக)என்றும் உரிமையோடு மாற்றி விட்டேன்.

    நீங்கள் கோவிக்கமாட்டீர்கள் என்று தெரியுமே!:-)

    ReplyDelete
  4. கண்டிப்பாக கோபித்துக் கொள்ள மாட்டேன், தவறை திருத்திக் கொள்கிறேன். நன்றி திரு க ர ச (KRS)

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று திரு வி எஸ் கே அய்யா

    ReplyDelete