Tuesday, April 10, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 12



"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 12

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னிலம்மா

இனியாகிலும் கிருபை வைத்து ரக்ஷியும் இனி
ஜெனனம் எடுத்திடாமல்

முத்தி தர வேணும் என்றுன்னையே தொழுது நான்
முக்காலும் நம்பினேனே

முன்பின்னும் தோணாத மனிதரைப் போலவே நீ
முழித்திருக்காதேயம்மா

வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் யான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை
விமலனர் ஏசப்போறார்

அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும்
குறையைத் தீருமம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே.
12

[இதுவரை பாடிய [காப்பு+] பத்து பாடல்களின் சுவையையும் பிழிந்து, கலந்து, ஒரு சாறாக்கித் தருகிறார் இப்பாடலில்! கொஞ்சம் புகழ்ச்சி, திட்டல், ஏளனம், கெஞ்சல், வேண்டல், அப்பாவுக்குத் தெரியாமல் கொடுக்கச் சொல்லும் கள்ளத்தனம், எல்லாம் சேர்ந்து அளிக்கிறார்.
பொறுமையாக இதுவரை காத்திருந்த ஏனைய அனைவர்க்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி!!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"
[அனுஷாவுக்காகப் பிரார்த்தியுங்கள்]

5 comments:

  1. அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே,
    குழந்தை அனுஷாவை ரக்ஷி!
    ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா!

    ReplyDelete
  2. நாளொரு மேனியாய் பத்தும் தந்து, பக்தியும் தந்த பாடல்கள் இவை!
    SK ஐயா, இவற்றை முழுவதுமாய் தன் நினைவில் இருந்தே எடுத்துப், பின்னர் அவர் குரலிலேயே பாடி, முதலில் பதிவு செய்து கொண்டாராம்!
    பின்னர் ஒவ்வொன்றாகக் கேட்டு எழுத்து வடிவில் இட்டாராம்!

    இந்த நன்முயற்சிக்கு நன்றி என்று ஒற்றை வரியில் சொல்ல முடியுமா?
    விருத்தங்கள் அளித்த விSK, வித்தகர் SK வாழ்க வாழ்க! என வாயார வாழ்த்தியும் வணங்குவோம்.

    ReplyDelete
  3. இந்தச் சிறு வயதிலேயே இவ்வளவு தந்த அந்தக் குழந்தைக்கு இனி ஜெனனமே கிடையாது என நம்புகிறேன், திரு. ரவி.

    //இனியாகிலும் கிருபை வைத்து ரக்ஷியும் இனி
    ஜெனனம் எடுத்திடாமல்

    முத்தி தர வேணும் என்றுன்னையே தொழுது நான்
    முக்காலும் நம்பினேனே//

    ReplyDelete
  4. ஒரே மூச்சில் இதுவரை படிக்காத காமாக்ஷி அம்மன் விருத்தப் பாடல்களை எல்லாம் ப்டித்துவிட்டேன் எஸ்.கே. மிக நல்ல பாடல்.

    ReplyDelete
  5. அழகான விருத்த பாடல்கள் தந்த http://ammanpaattu.blogspot.in/2007/04/12.htmlக்கு நன்றி

    ReplyDelete