Sunday, April 22, 2007

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்!
அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார் :-)

கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.
இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!

சரி, இந்தப் பாடலை ஏன் நாம், இன்று கேட்க வேண்டும்?
இன்று சங்கர ஜெயந்தி!

இந்து மதம் தழைக்க வந்த இரு பெரும் பேராசிரியர்கள் - ஜகத் குருக்கள் - ஆச்சாரியர்கள் ஸ்ரீ ராமானுசர், ஆதி சங்கரர்
- இருவரின் அவதார நாளும் இன்று தான்! சித்திரைத் திருவாதிரை நன்னாள்! (Apr 22, 2007)

இப்படி, பிறந்த நாளே ஒன்றாகி, சைவமும் வைணவமும் ஒன்றாகத் தழைப்பது எவ்வளவு இனிய காட்சி!


ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!

(சிவ, சக்த்யா யுக்தெள,
யதி பவதி, சக்த ப்ரபவிதும்,
ந சேத் ஏவம், தேவோ ந கலு
குசலஹ ஸ்பந்திதும் அபி!

அதஸ் த்வாம், ஆராத்யாம்,
ஹரி, ஹர, விரிஞ்ச, ஆதி பிர் அபி,
பிரணந்தும், ஸ்தோதும் வா,
கதம் அக்ருத புண்யப் ப்ரபவதீ?)

ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ
ஜகத்-காரணி நீ பரி-பூரணி நீ


ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே


ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி  

ஜனனி  ஜனனி ...

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே


அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி 

ஜனனி ஜனனி...

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்(து) ஏத்துவதும் மணி நேத்திரங்கள்


சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

ஒவ்வொரு கச்சேரியிலும், ராஜா
ஜனனி ஜனனி என்று பாடித் தான் துவக்குகிறார்!
இதோ, அவர் கச்சேரி ஒன்றிலிருந்து!
அப்பாவும், மகனும் சேர்ந்து பாடுகிறார்கள்.
அன்னை மீனாட்சியின் சித்திரைத் திருவிழா துவங்கி விட்டதல்லவா?
இந்தத் தருணத்தில், ஜகத்குரு ஆதி சங்கரர் அவர்களை நினைந்து வணங்கி, அவர் போற்றிய அன்னையின் பாதம் பணிவோம்!
ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!!

29 comments:

  1. அவர் 'கரகர'ப்ரியா குரலில் பாடினாலும் அந்தப்பாடலை அனுபவித்துக்
    கேக்கும் நம்ம கண்ணில் 'கரகர'ன்னு கண்ணீர் வழிய வச்சுடறாரே.........

    எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு இது.

    நன்றி KRS

    ReplyDelete
  2. //'கரகர'ப்ரியா குரலில் பாடினாலும் கண்ணில் 'கரகர'ன்னு கண்ணீர் வழிய வச்சுடறாரே//

    வாங்க டீச்சர்.
    எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு இது!
    மூகாம்பிகை சரிதத்தைப் பாட்டிலேயே சொல்லி விடுகிறார்கள்!
    ராஜா மிக உருகிப் பாடும் சில பாடல்களில் முதன்மையான பாட்டு! என்ன இருந்தாலும் அவர் இஷ்ட தெய்வம் இல்லையா?

    ReplyDelete
  3. பிடித்தவங்க பட்டியல்ல என்னையும் சேத்துக்குங்க..மனசு இளகிப்போகும் பாடல்களில் ஒன்று.

    நன்றி ரவி!

    ReplyDelete
  4. பக்தியின் வெளிப்பாடு தெரியும்படியான ஆழ்மனசிலிருந்து வருவதுபோன்ற அருமையான பாடல் இது...அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல்கூட ராகத்தினால்தான் இன்னமும் கேட்கும்போதெல்லாம் மனம் அதில் ஒன்றிப்போகிறது..இங்கு அதுவும் சங்கரஜயந்தியில் அளித்தது சிறப்பு.
    ஷைலஜா

    ReplyDelete
  5. //மலைநாடான் said...
    பிடித்தவங்க பட்டியல்ல என்னையும் சேத்துக்குங்க..மனசு இளகிப்போகும் பாடல்களில் ஒன்று.//

    சேர்த்துக் கொள்கிறோம் மலைநாடான் ஐயா. :-)
    மனம் இளகி இசைஞானி பாடியதால், கேட்பவர்க்கும் மனம் இளகி விடுகிறது!

    செளந்தர்ய லஹரி ஆரம்பத் தோத்திரத்துக்கு யாராச்சும் பொருள் சொன்னா, இன்னும் நல்லா இருக்கும்!

    ReplyDelete
  6. //ஷைலஜா said...
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல்கூட ராகத்தினால்தான் இன்னமும் கேட்கும்போதெல்லாம் மனம் அதில் ஒன்றிப்போகிறது..இங்கு அதுவும் சங்கரஜயந்தியில் அளித்தது சிறப்பு//

    நன்றி ஷைலஜா. ராஜா உருகி யேசுதாஸ் பாடுவது ஒரு சிறப்பு என்றால் ராஜா உருகி ராஜாவே பாடுவது, இதில் சிறப்பாக விட்டது! அதான் செம ஹிட் ஆகி விட்டது!

    ReplyDelete
  7. இநத பாடலை சிங்கையில் தேடித்தேடி 12 வெள்ளி கொடுத்து வாங்கினேன்.
    இப்போதும் அந்த பாடலை கேட்டுக்கொண்டு எழுதுகிறேன்.உடம்பு சிலிர்த்து விட்டது.
    மாஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ்,சந்தேகத்துக்கு இடமில்லாமல்.

    ReplyDelete
  8. "சடை வார் குழலும் இடை வாகனமும்"

    அது இடை வாகனம் அல்ல, "பிடை" வாகனம்

    இவ்விடத்தில் பிடை என்பது நந்தி வாகனத்தை குறிக்கும்

    Hemapriya

    ReplyDelete
    Replies
    1. விடை வாகனம் என்று வரி வந்திருக்கிறது.இதை கவனித்தீர்களா

      Delete
  9. //செளந்தர்ய லஹரி ஆரம்பத் தோத்திரத்துக்கு யாராச்சும் பொருள் சொன்னா, இன்னும் நல்லா இருக்கும்!//

    எனக்குத் தெரிந்தவரையில் சொல்கிறேன்..

    சிவன், பராசக்தியாகிய உன்னுடன் இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு திறமையுடையவராகிறார். அவ்வாறாக அவர் உன்னுடன் இல்லாவிட்டால் அசைவதற்குக்கூட முடிவதில்லை. ஆகையால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியவர்களாலும் பூஜிக்கப்படும் உன்னை புண்ணியம் செய்யாதவன் எப்படி வணங்குவதற்க்கோ, துதிப்பதற்க்கோ தகுதியுடையவனாவான்? என்கிறார் ஆதி சங்கரர்.

    மெளலி....

    ReplyDelete
  10. சங்கர ஜெயந்திக்கு மிகவும் பொருத்தமான பாடல் இரவிசங்கர். படம் வந்த போதே பலர் மனத்தையும் கொள்ளை கொண்ட பாடல். ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல்.

    ReplyDelete
  11. Thank you very much for having given this song - wonderful

    will you please put one song
    Kaattil varumgeethame........... kannanai arivaayo.........
    already i asked you
    whenever i find time, i hear songs that you put
    bas..

    ReplyDelete
  12. //வடுவூர் குமார் said...
    இநத பாடலை சிங்கையில் தேடித்தேடி 12 வெள்ளி கொடுத்து வாங்கினேன்.//

    குமார் சார்!
    சரி, அடுத்து தேடாமலேயே 12 வெள்ளி இப்படிக் கொடுங்க!
    பெப்சி உங்க சாய்ஸ் போல, நீங்க தேடும் பாட்டையே போடுகிறோம்! :-)

    ReplyDelete
  13. இது மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல். மனதிற்கு கஷ்டம் வரும் போது இந்த பாடலைக் கேட்பேன் மிகவும் ஆருதலாக இருக்கும். இந்த பாட்டைக் கேட்டால் உடம்பே சிலிர்த்து விடும். அம்மனை நேரிலே பார்த்தது போல தோன்றும். நன்றி திரு KRS

    ReplyDelete
  14. //Anonymous said...
    "சடை வார் குழலும் இடை வாகனமும்"
    அது இடை வாகனம் அல்ல, "பிடை" வாகனம் இவ்விடத்தில் பிடை என்பது நந்தி வாகனத்தை குறிக்கும்
    Hemapriya//

    நன்றி ஹேமப்ரியா.
    நீங்கள் சொன்னது போல் பிடை என்பதற்குப் பொருள் தேடினால் குகை என்று வருகிறதே.

    ஒருக்கால் விடை வாகனம் என்று கொள்ளலாமோ?.
    விடையேறுதல்=காளை ஏறுதல்
    பிரியா விடை வாகனம் மதுரையில் உள்ளது.

    இடை வாகனம் = இடப வாகனம்.
    இடையர்=மாடு மேய்ப்போர் என்ற பொருளில் இடை என்று கொண்டேன்.

    அறிந்தவர் மேலும் கூறுங்களேன்!

    ReplyDelete
  15. //Anonymous said...
    சிவன், பராசக்தியாகிய உன்னுடன் இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு திறமையுடையவராகிறார்.//

    அழகாக விளக்கியமைக்கு நன்றி மெளலி சார்.
    சக்தி இல்லையேல் சிவமில்லை என்று படக் காட்சிகள் நினைவுக்கு வந்தன, உங்கள் விளக்கம் கண்டவுடன்.

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    சங்கர ஜெயந்திக்கு மிகவும் பொருத்தமான பாடல் இரவிசங்கர். ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல். //

    ஆமாம் குமரன்
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த - என்று தல புராணத்தையே பாடலில் கொட்டி விடுகிறார் பாருங்க!

    ReplyDelete
  17. //Anonymous said...
    Thank you very much for having given this song - wonderful
    will you please put one song
    Kaattil varumgeethame........... kannanai arivaayo.........
    //

    நன்றிங்க அனானி.
    கண்ணனை அறிவாயோ பாடல் தேடிப் பார்க்கிறேன்.
    கண்ணன் பாட்டு வலைப்பூவில் இடுகிறேன்!

    ReplyDelete
  18. //அன்புத்தோழி said...
    மனதிற்கு கஷ்டம் வரும் போது இந்த பாடலைக் கேட்பேன் மிகவும் ஆருதலாக இருக்கும். இந்த பாட்டைக் கேட்டால் உடம்பே சிலிர்த்து விடும். அம்மனை நேரிலே பார்த்தது போல தோன்றும். நன்றி திரு KRS//

    அன்புத்தோழி
    உங்கள் உள்ளத்தை உருக்கிய பாடலை இங்கு இட்டு, அதை நீங்கள் கேட்டு மகிழ்ந்தது, எனக்கும் மகிழ்ச்சியே! நீங்கள் சொன்னது போல் ஆறுதல் தரும் இதமான பாடல் இது!

    ReplyDelete
  19. நம்ம கலெக்ஷன்லே 'இடை' ன்னுதான் இருக்கு. இடப வாகனம்.

    ReplyDelete
  20. இந்தப் பாடலை இன்னொரு முறை கேட்டுப் பார்த்தேன். விடை வாகனமும் என்று தான் எனக்குக் கேட்கிறது. அது அந்த இடத்திற்குப் பொருத்தமும் கூட. கச்சேரியில் இன்னும் தெளிவாக விடை வாகனமும் என்று பாடுகிறார்.

    ReplyDelete
  21. டீச்சர், குமரன்
    இன்னொரு முறை பாடலைக் கேட்டுச் சொன்னமைக்கும் நன்றி.
    SK ஐயாவையும் கேட்டேன்.
    அவரும் "இடை வாகனம்" என்று தான் கருதுகிறார்.

    ராஜா பாடுவதை விட, அவருக்குப் பின் கோரஸாகப் பாடுகிறவர்கள் தெளிவாக "இடை வாகனம்" என்று தான் பாடுகிறார்கள்.

    பதிவிலும் இடையை விடையாக்கி
    பின்பு மீண்டும் இடை ஆக்கி விட்டேன்! :-)

    ReplyDelete
  22. எனக்கென்னவோ விடை என்று தான் கேட்கிறது குழுவினர் பாடுவதிலும். :-)

    ReplyDelete
  23. Hi Krs, Sorry!

    I remember someone of tfm forum hub saying it so. Now i searched for the same. could not open the link. See if it works for you.


    Also look at at the last comment of this page, http://www.mayyam.com/hub/viewtopic.php?p=758905

    Vidai vaaganam sounds apt!

    ReplyDelete
  24. தோடுடையசெவி யன்^bவிடையேறி^bயோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் நுள்ள~ங்கவர்கள்வன்
    ஏடுடையமல ரான்முனை~னாட்பணி~ன் தேத்தவருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்ட்றே.

    சம்பன்தரின் இன்த பாடல் ^bவிடை வாகனம்^b என்பதை வுறுதி செய்கிற்து

    ReplyDelete
  25. //தோடுடையசெவி யன்^bவிடையேறி^bயோர் //

    ஆகா...
    தோடுடைய செவியன் பாட்டைப் பல முறை பாடியும், "விடை" தான் என்று விடை வராமற் போனேனே!
    ஆளுடைய பிள்ளை, அனானி அவர்களை அனுப்பித் திருத்தினாரோ!

    பதிவில் மாற்றஞ் செய்தேன், ஐயா!

    நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்
    தனோடும் விடையேறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல்
    அணிந்தென் உளமே புகுந்த அதனால்
    ....
    அஞ்சிடு நல்லநல்ல அவைநல்லநல்ல
    அடியா ரவர்க்கு மிகவே

    ReplyDelete
  26. KRS,
    இன்று தான் இப்பதிவை பார்க்கிறேன். ஒரு பொக்கிஷத்தை இத்தனை நாள் மறைத்து வைத்து விட்டீர்களே!

    இன்றாவது கொடுத்து வைத்ததே. அதை நினைத்து மகிழ்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  27. செளந்தர்ய லஹரி
    இப்ப தான் தெரிந்தது.நன்றி.
    எனக்கு கண்ணில் நீர் கோர்க்காது..
    உடம்பு சிலிர்த்து ஒவ்வொரு மயிர்காலும் எழுந்து நிற்க்கும்.
    இது வீடியோவை ஏற்கனவே யோரோ ஒரு பதிவில் போட்ட ஞாபகம்.

    ReplyDelete