Tuesday, April 10, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 11



"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 11

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்
பாங்குடன் ரக்ஷிக்கவும்

பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்

சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலியன் அணுகாமலும்

சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று
வாழ்ந்து வரவும்

பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்
பிரியமாய்க் காத்திடம்மா

பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன
கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி

"ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
என் அன்னை ஏகாம்பரி நீயே"

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 11

[அம்மனைப் பார்த்து விட்டார்! அடுக்கடுக்காய் வரங்கள் கேட்க ஆரம்பிக்கிறார்! கூடவே, இதுவரை எந்த இலக்கணமும், சீர்மையும் இல்லாமல் பாடியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்.]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

11 comments:

  1. அம்மனைப் பார்த்துவிட்டார்.
    அம்மனைப் பார்த்தபிறகு பிழை வர வாய்ப்பேஎது.
    அதிலும் ஏதாவது நன்மை இருக்கும்.
    அற்புதமாக இருக்கிறது எஸ்.கே சார்.

    ReplyDelete
  2. //செங்கலியன் அணுகாமலும்//

    SK ஐயா, விளக்கம் ப்ளீஸ்!

    //ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
    என் அன்னை ஏகாம்பரி நீயே"//

    அதை அப்படியே படமெழுதி வலைப்பூவில் வைத்திட்ட
    எம் நண்பர் SK நீரே!

    அருமையான படம் SK; அன்னை ஒற்றைக் காலில் நின்று நெக்குருகினாலும், ஞானச் சுடர் ஜொலிக்கின்றது அவள் திருமுகத்தில்!

    ReplyDelete
  3. அடுத்தது லலிதா நவரத்தின மாலை எழுதலாமா? ஆனால் எனக்கு அர்த்தம் முழுவதும் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும்?

    அன்புத்தோழி

    ReplyDelete
  4. //anbuthozhi said...
    அடுத்தது லலிதா நவரத்தின மாலை எழுதலாமா? ஆனால் எனக்கு அர்த்தம் முழுவதும் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும்?//

    அன்புத்தோழி
    லலிதா நவரத்தின மாலை எழுதி, இயன்ற வரை பொருள் சொல்லலாமே! உதவிக்கு நிறைய அன்பர்கள் இருக்கிறோம்! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே என்று துவக்குங்கள்!

    இல்லை, எளிதான பக்திப் பாடல்களாகத் ஒன்றிரண்டு துவங்கி, பின்னர் லலிதா நவரத்தின மாலை சொன்னாலும் நலமே!

    ReplyDelete
  5. அன்பு ரவி,
    கலியன் என்பவன் இக்க்கலியுகத்தின் அரசன் ஆவான்.

    நமக்கு இப்பிறப்பில், இக்கலியுகத்தில் பிறந்ததால் வரக்கூடிய இன்பதுன்பங்களை அளிப்பவன் இவனே.

    இவன் தன்னை அணுகாவண்ணம் ஒரு வரம் கேட்கிறார் இந்த பக்தர்.

    இதைப் படிப்பவர்களையும் காமாக்ஷித்தாய் காப்பாற்றுவாள் என்பதும் உட்பொருள்.

    இதுபற்றி, விரும்பினால் விவரமாக ஒரு தனிப்பதிவு பிறகு இடுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  6. அன்புத்தோழியே,

    உங்களுக்கு மனதில் தோன்றும் அம்மன் பதிகங்களை இட்டு வாருங்கள்.

    அன்பு.ரவி இருக்கையில் என்ன கவலை?

    குமரன், ஆசான் வேறு உடனிருக்கின்றனர்.

    அன்னையின் பெருமையை அனைவரும் பாடுவோம்!

    ஜெய ஜெய காமாக்ஷி!

    ReplyDelete
  7. வல்லியம்மா,
    நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் மிக அற்புதமாய் இருக்கிறது.

    தாயவள் தயவிருக்க, அருளுக்குக் குறைவேது?

    ReplyDelete
  8. அன்னையின் இந்தப்படம் கிடைத்தது ஒரு அற்புதமான அனுபவம், அன்பு.ரவி!

    பதிவதற்கு ஒரு சில மணித்துளிகளுக்கு முன்னரே இது அவளருளால் கிடைத்தது!

    ReplyDelete
  9. தங்கள் ஆலோசனைக்கு நன்றி திரு. க ர ச (KRS)

    ReplyDelete
  10. i have been searching for years for this picture of kumari annai. i am from kanyakumari and i used to have a bookmark with this picture. unfortunately i lost it and have been searching for it till now. thank you so much. it means a lot to me.
    the way i came to ur blog is also unfortunate. i came here through an obituary page to anusha. i pray for her family.

    ReplyDelete
  11. திரு வி எஸ் கே அய்யா, திரு குமரன் ,

    தங்கள் ஆலோசனைக்கும், உதவிக்கும் நன்றி

    அன்புத்தோழி

    ReplyDelete