ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் --2
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
ஜோதியாய் நின்ற உமையே
சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கிவிடுவாய்
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தைப் மாற்றிவிடுவாய்
ஜெகமெலாம் உன் மாயை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்க
சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரி
சிரோன்மணி மனோன்மணியும் நீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
அனாத ரக்ஷகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [2]
{நிரந்தரி= எப்போதும் இருப்பவள்; துரந்தரி= அனைத்தையும் கடந்தவள்; சுக்கிரவாரம்= வெள்ளிகிழமை; சிரோன்மணி= உயர்ந்தவள்; மனோன்மணி= மனதிற்கு உகந்தவள்; அந்தரி= எல்லைகளைக் கடந்தவள், எப்போதும் இருப்பவள்; பரம்பரி= எனதாக இருப்பவள்; அனாத ரக்ஷகி= எளியவரைக் காப்பவள்}
ஜெய ஜெய காமாக்ஷி!!
அழகான பாடல் அன்னையைபோலவே.
ReplyDeleteவிஎஸ்கே எழுதினதா இந்தப்பாடல்?
ஷைலஜா
இந்த பாடலை போட்டு மறைந்த என் தந்தையை நினைவு படுத்திவிட்டீர்கள் வி.எஸ்.கே !
ReplyDeleteஒரு காலத்தில் மனப்பாடமாக தெரிந்த பாடல் இது. மாரியம்மன் கோவில் காவடியின் போது இந்த பாடலை என் தந்தையார் பாட அங்கு ஒற்றையடி மேளத்துடன் பம்பை இசை சிலிர்க்க வைத்திருக்கிறது.
:)
பாடல் கிட்டதிட்ட மறந்தே போய் இருந்தது ... எங்கிருந்து எடுத்தீர்களோ ?
//அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
ReplyDeleteஅம்மை காமாக்ஷி உமையே. [1]//
இந்த வரி எங்கள் பாடலில் ..."அழகான நாகையில் புகழாக வாழ்ந்திடும் அன்னை நெல்லுக்கடை மாரி உமையே !"
என்றிருக்கும் !
மனதிலிருந்து எடுத்தேன், கோவியாரே!
ReplyDeleteசுமார் 30 ஆண்டுகளாக இதை தினமும் பாடி வருகிறேன்.
இல்லை ஷைலஜா!
ReplyDeleteஇதை வெகுநாட்களாகப் பாடி வருகிறேன்.
"குமரன்" அருளால் இது வந்தது!
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
ReplyDeleteஅந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
என்று ரிகரம் ரீங்காரம் இடுகிறது SK ஐயா.
இந்த விருத்தப் பதிவுகளில் ஏதேனும் ஒரு நாள் "காமாக்ஷி" என்ற தீஞ்சொல்லுக்கு தங்கள் திருவாக்கால் பொருள் சுவை தாருங்கள்!
ஒவ்வொரு பாடலும் ஒரு சுவையில் வரும்,திரு. ரவி!
ReplyDeleteகொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வம்பு, பின்னர் பழிச்சண்டை, திட்டல், கெஞ்சல், வர்ஷித்தல், வேண்டல் என மிளிரும்.
இப்பாடல்களுக்கு நான் எப்போதும் அடிமை.
முழுப்பதிகமும் முடிந்தவுடன், ஒருமுறை தொடர்ச்சியாகச் சொல்லிப் பாருங்கள்.
ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு உங்களுக்குள் தானாக வரும்!
//என்று ரிகரம் ரீங்காரம் இடுகிறது//
ReplyDeleteபஞ்சாஷரீயாகட்டும், பாலையாகட்டும், அம்பிகையின் மூல மந்திரங்கள் 'ரீ'ங்காரம் நிறைந்தவை தாம்.அதே இந்தப்பாடலில் மெலிட்டிருப்பதாக தெரிகிறது.
ரீங்காரத்தில் தொடங்கி, ஓங்காரம், ஆங்காரம், மமகாரம் இன்னும் எல்லா காரங்களும் வரும்!
ReplyDelete:)
நான் சொன்னதை நீங்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே!
ReplyDeleteஇப்பதிகத்தில் இதெல்லாம் வரும் எனவே சொல்லியிருக்கிறேன்.
வல்ல்லியம்மாவுக்கு நான் எழுதிய பின்னூட்டத்தைப் படியுங்கள்.
பத்து பாடல்களிலும் பத்துவித உணர்ச்சி வரும் என்பதையே நான் குறிப்பிட்டேன்.
உங்களையும், உங்கள் பின்னூட்டங்களையும் பெரிதும் மதிப்பவன் நான் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி.
//ஒவ்வொரு பாடலும் ஒரு சுவையில் வரும்,திரு. ரவி!
கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வம்பு, பின்னர் பழிச்சண்டை, திட்டல், கெஞ்சல், வர்ஷித்தல், வேண்டல் என மிளிரும்.
இப்பாடல்களுக்கு நான் எப்போதும் அடிமை.
முழுப்பதிகமும் முடிந்தவுடன், ஒருமுறை தொடர்ச்சியாகச் சொல்லிப் பாருங்கள்.
ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு உங்களுக்குள் தானாக வரும்! //
உன் மாயை புகழ என்னால் ஆமோ? சிறியனால் முடிந்திடாது. எத்தனை உண்மை எஸ்.கே. எப்போதோ படித்திருக்க வேண்டியதை இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
ReplyDeleteலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றீங்களே, குமரன்.
ReplyDeleteசிறியனால் என்ன?
எவனாலும் முடியாது அவள் பெருமை!