Tuesday, April 17, 2007

மதுரை மீனாட்சி


கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே


கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)


இந்த பாடலை கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்


குறிப்பு: இந்த பாடலை பதிய விரும்பிய ஹேமபிரியா விற்கும், அதை பதிய வாயப்பளித்த திரு குமரன் அவர்களுக்கும் நன்றி.

8 comments:

  1. பாட்டாலேயே சித்திரைத் திருவிழா காணும்படி செய்த அன்புத்தோழிக்கு நன்றி.

    ReplyDelete
  2. இந்த பதிவை பதிய விரும்பிய ஹேமபிரியா விற்கும், திரு குமரன் அவர்களுக்கும் என் நன்றி (உங்கள் நன்றியும் இத்துடன் சேர்ந்து விட்டது திரு KRS )

    ReplyDelete
  3. மிக்க நன்றி அன்புத்தோழி. பாடல் பதித்தமைக்கும், பாடலுக்கு மிக பொருத்தமான அம்மன் படதிற்க்கும்.

    -ஹேமப்ரியா

    ReplyDelete
  4. மிகவும் சந்தோஷம் ஹேம்ப்ரியா

    ReplyDelete
  5. அன்புத்தோழி,

    இப்பாடலை படிக்கும் சமயம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    இப்பாடல் எங்க அம்மா பாடி அதை ரெக்கார்டில் பதிவு செய்தோம். ஆனால் சரியாக வரவில்லை. பழைய நினைவை காட்டியதற்க்கும் அம்மையின் படத்திற்க்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து என்று தொடங்கும் போதே அம்மன் திருமுன் நிற்பது போல் ஒவ்வொரு முறையும் தோன்றும். எங்கள் மதுரை நகராளும் மீனாட்சியின் புகழ் பாடும் பாடலைப் பதிந்ததற்கு மிக்க நன்றி அன்புத்தோழி.

    ReplyDelete
  7. arumaiyaana paattu.. vaazhga vaazhga!!

    ReplyDelete