Thursday, April 12, 2007

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா




ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் ( ரக்ஷ ரக்ஷ )

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,
ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,
சிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி (ரக்ஷ ரக்ஷ )

கருணையில் கங்கை, கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்,
வல்வினை ஓடும், பலவினை ஓடும் அருள் மழை பொழிபவள் நாளும்,
நீலநிறத்தோடு ஞாலம் அளித்தவள், காளி எனத் திரிசூலம் எடுத்தவள்,
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்,
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்ஷ ரக்ஷ )


இந்தப் பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

7 comments:

  1. பி.சுசீலா அவர்களின் குரலில், ஐயா K. வீரமணி அவர்கள் இசையமைக்க, அருமையான பாடல்.
    கேட்டு மகிழ சுட்டி இதோ

    ReplyDelete
  2. அன்னையவள் காக்க வந்தால்
    அகிலத்தில் தடையேது!

    என்றும் எம்மைக் காத்து நிற்பாள்
    எம்மவளாம் ஜெகன்மாதா!

    நல்லா இருக்குங்க!

    இன்னும் இருக்கா?

    ReplyDelete
  3. மிக நல்ல பாடல் அன்புத்தோழி. என் மனைவியிடம் பாட்டு பாடச் சொன்னால் இந்தப் பாடலைத் தான் எப்போதும் பாடுவார். :-)

    ReplyDelete
  4. எல்லோருடைய பாராட்டிற்கும் நன்றி

    ReplyDelete
  5. அன்புத்தோழி1 இப்படி நல்ல பாட்டெல்லாம் தரீங்களா இப்பதான் பாக்றேன் நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா பி.சுசீலா அவர்களின் குரலில் மிகவும் அருமை

    ReplyDelete