Saturday, April 7, 2007

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [7]

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [7]


மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்த்ரகாரி நீயே

மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ

தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாக்ஷியும் நீ

தாரணியில் பெயர் பெற்ற
பெரியநாயகியும் நீ

அத்தனிட பாகமதில் பேறு பெற
வளர்ந்தவளும் நீ

ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ

ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [7]


[அதிகமாகத் திட்டிவிட்டதாக எண்ணி இப்போது பிள்ளை கொஞ்சம் 'ஐஸ்' வைக்க ஆரம்பிக்கிறார்! அவள் பெயரையெல்லாம் சொல்லிப் போற்றுகிறார்!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

2 comments:

  1. அட, இன்று அந்த "அர்ச்சனை" போய் அன்பான நாம அர்ச்சனையா?

    SK,
    ப்ரஸன்னவல்லி எவ்வளவு அழகான பெயர்.
    அண்ணனுக்கும் தங்கைக்கும் தான் இந்தப் ப்ரசன்னம் என்ற அடைமொழி பெரும்பாலும் ஆகி வரும்

    உண்ணாமலையும்=உண்ணாமுலையும்?

    ReplyDelete
  2. உண்ணாமலை, உண்ணாமுலை இரண்டு பெயர்களுமே கேள்விப்பட்டிருக்கிறேன்.

    நீங்கள் சொன்னது போல மாற்றிவிட்டேன்.

    நன்றி.

    ReplyDelete