Friday, April 6, 2007

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 6

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [6]

பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான்
பிரியனாய் இருந்தனம்மா

பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்
புருஷனை மறந்தனம்மா

பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்

பாலன் நான் எப்படி விசனமில்லாமல்
பாங்குடனே இருப்பதம்மா

இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது
இது தருமம் அல்லவம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகள் இல்லையோ
இது நீதியல்லவம்மா

அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ
அதை எனக்கு அருள்புரிகுவாய்.

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [5]


[ஆத்திரம், ஆங்காரம், பொறாமை, புலம்பல், சந்தேகம் அத்தனையும் துளிர்க்கிறது இப்போது!]

ஜெய ஜெய காமாக்ஷி!!

3 comments:

  1. //அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ//

    பொருள் வேண்டுவோர்க்கு:
    அத்தி=யானை; அத்திமுகன=யானை முகன்

    ReplyDelete
  2. //பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்
    புருஷனை மறந்தனம்மா//

    அம்மா நீ சுத்த மோசம்; ச்சே உனக்காக அப்பாவை என்னவெல்லாம் பேசி விட்டேன்; எவ்வளவு பெரிய்யய மனசு அவருக்கு! அவரைப் புரிந்து கொள்ளாமல் இவ்வளவு காலம் இருந்து விட்டேனே! - இக்காலக் குழந்தைகள் அப்பா அம்மா கட்சி சேருவது போல் உள்ளது :-)))

    ReplyDelete
  3. திருப்புகழில் "அத்திக்கிறை சத்திச் சரவணனை" என்பதற்கு ஏற்கெனவே சொல்லியிருப்பதால் அதனை விட்டேன்.

    பொருள் சொன்னதற்கு நன்றி.

    கோபம் வந்துவிட்டால் என்னவெல்லாம் சொல்லி விடுகிறோம்... யார் எவர் எனப் பார்க்காது!

    அதிலும் அவர் மிகவும் நெருங்கியவராக இருந்துவிட்டால், இன்னும் விசேஷம்!

    தயவு தாக்ஷண்யம் பார்க்காமல் சொற்கள் வந்து விழும்!

    அதுதான் இங்கும் நடக்கிறது!

    நாளைக்கு அப்படியே குழைய ஆரம்பிப்போம்!

    ReplyDelete